வீடு என்ற கனவு நனவாக இன்றைய காலகட்டத்தில் பலருக்கும் உதவுவது வீட்டு கடன் என்னும் கவசம் தான். குறிப்பாக நடுத்தர மக்கள் மத்தியில் வீட்டுக் கனவு என்பது சாத்தியம் என்றால், அதற்கு முக்கிய காரணமே வீட்டுக் கடனாகத் தான் இருக்கும்.
எனினும் தற்போது மத்திய வங்கியானது தொடர்ந்து வட்டி விகிதத்தினை அதிகரித்து வரும் சூழலில், அந்த வட்டி அதிகரிப்பே பெறும் பிரச்சனையாகவும் மாறியுள்ளது.
தொடர்ந்து வட்டி விகிதம் என்பது பெரும் சுமையாகவே மாறி வருகின்றது எனலாம். ஆக இந்த சூழலில் வட்டி விகிதத்தினை எப்படி குறைவாக வைத்திருப்பது? எப்படி கூடுதல் வட்டி சுமையை குறைக்கலாம். இதற்காக என்ன செய்யலாம்? வாருங்கள் பார்க்கலாம்.
கால அவகாசத்தினை குறைக்கலாம்
நீண்டகால நோக்கில் கடன் வாங்கியிருக்கும் நபர்கள் தங்களது சுமையை குறைக்க என்ன செய்யலாம். பெரும்பாலும் வீட்டுக் கடன் என்றாலே பலரும் 20 - 30 ஆண்டுகள் வரையில் செலுத்தும் விதமாக கால அவகாசம் பெறுகின்றனர். ஆனால் இது கூடுதல் வட்டி செலுத்த வழிவகுக்கலாம். ஆக முடிந்தமட்டில் இதனை இன்னும் குறைக்கலாம். இது வட்டியை குறைக்க வழிவகுக்கலாம். விரைவில் கடனையும் செலுத்தி முடிக்க வழிவகுக்கலாம். இதனை 10 - 20 ஆண்டுகளுக்குள் தேர்வு செய்ய வேண்டும்.
முடிந்த அளவு விரைவில் முடிக்கலாம்
பொதுவாக கடன் வாங்கி அதனை நீண்டகால நோக்கில் செலுத்த திட்டமிட்டிருந்தாலும், உங்களால் முடியும், வாய்ப்பிருக்கிறது எனில் விரைவில் கடனை கட்டி முடித்துக் கொள்ளலாம். ஆக இது கடனில்லாமல் வாழ வழிவகுக்கும். இது உங்களால் பதற்றமில்லாமல் நிம்மதியாக வாழ வழிவகுக்கலாம். இதுவே உங்கள் வருமானத்தை அதிகரிக்க வழிவகுக்கலாம். எல்லாவற்றுக்கும் மேலாக நீங்கள் வாங்கிய வீடு, இன்னும் சில ஆண்டுகள் கழித்து விலையேற்றம் காணலாம். ஆக அதுவும் உங்களுக்கு லாபகரமான ஒன்றாக மாறலாம்.
தவணை தொகையை அதிகரிக்கலாம்
ஒரு வேளை உங்களால் முன் கூட்டியே கடனை செலுத்த முடியாது என வைத்துக் கொள்வோம். ஆனால் மாத மாதம் செலுத்தும் தவணையை அதிகரிக்கலாம். இது விரைவில் உங்கள் கடனை அடைக்க வழிவகுக்கலாம். வட்டியையும் குறைக்க வழிவகுக்கலாம். உங்களது கிரெடிட் ஸ்கோர் நன்றாக இருக்கும்பட்சத்தில் அதுவும் வட்டி விகிதம் குறைவாக பெற வழிவகுக்கலாம்.
பேலன்ஸ் டிரான்ஸ்பர் செய்து கொள்ளலாம்
நீங்கள் கடன் வாங்கியிருக்கும் வங்கிகள் அல்லது நிதி நிறுவனத்தில் வட்டி விகிதம் அதிகம் எனில், உங்களது கடனை வேறு வங்கிக்கு மாற்றம் செய்து கொள்ளலாம். இதன் மூலம் உங்களது வட்டியினை குறைத்துக் கொள்ள வழிவகுக்கலாம்.
பகுதி தொகையை செலுத்தலாம்
வாங்கிய வீட்டுக் கடனில் முழுமையாக உங்களால் இடையில் செலுத்த முடியாவிட்டாலும், கையில் கிடைக்கும் பகுதி தொகையை செலுத்திக் கொள்ளலாம். இது மேற்கொண்டு கடன் தொகை குறைய வழிவகுக்கலாம். மாத தவணையும் குறையலாம். ஆக இதுவும் உங்களது சுமையை குறைக்க உதவிகரமாக இருக்கலாம்.
More From GoodReturns

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

90ஸ் கிட்ஸ்களின் Gmail பிரச்சினைக்கு தீர்வு தந்த சுந்தர் பிச்சை: பழைய ஐடி-க்கு குட்பை..!!



Click it and Unblock the Notifications