சென்னை: இந்திய வருமான வரி சட்டத்தின் படி, சொத்துக்களை விற்பனை செய்யும் போது அதில் கிடைக்கும் லாபத்துக்கு Capital Gain Tax எனப்படும் மூலதன ஆதாய வரியை செலுத்த வேண்டும். ஆனால் இதனை செலுத்தாமல் விலக்கு பெறுவதற்கான வழிகளும் இருக்கின்றன. இது குறித்து விரிவாக பார்க்கலாம்..
ஒரு சொத்தினை விற்பனை செய்து அதன் மூலம் கிடைக்கும் வருமானத்திற்கு இரண்டு வகையில் வரி விதிக்கப்படுகிறது. ஒன்று குறுகிய கால மூலதன ஆதாய வரி, மற்றொன்று நீண்ட கால மூலதன ஆதாய வரி.

குறிப்பிட்ட அந்த நிலத்தை வாங்கி இரண்டு வருடத்திற்குள் அதாவது 24 மாத காலத்திற்குள் விற்பனை செய்தால் அதற்கு குறுகிய கால மூலதன ஆதாய வரியினை செலுத்த வேண்டியிருக்கும். இது வழக்கமாக ஆண்டுக்கான வருமான வரி தாக்கல் செய்யும்போது செலுத்தினால் போதும்.
ஆனால் இரண்டு வருடங்களுக்கு மேற்பட்டு விற்பனை செய்யும்போது உங்களுக்கு கிடைக்கும் லாபத்துக்கு நீண்டகால மூலதன ஆதாய வரியை செலுத்த வேண்டியிருக்கும். கிட்டத்தட்ட 20 சதவீதம் வரி விதிக்கப்படுகிறது. ஆனால் நீண்டகால மூலதன வரியில் இருந்து தப்பிக்க வழி இருக்கிறது என்கின்றனர் நிபுணர்கள்.
பிரிவு 54f இன் படி, நீங்கள் நிலத்தை விற்பனை செய்த பிறகு அதில் கிடைத்த வருமானத்தை ஒரு வீட்டை வாங்குவதற்கோ அல்லது ஒரு வீட்டை கட்டுவதற்கோ பயன்படுத்தினால் வரிச்சலுகை பெற முடியும்.
அதேபோல பிரிவு 54 ec இன் படி நீங்கள் உங்களது மூலதன ஆதாயத்தை குறிப்பிட்ட நிதி பத்திரங்களில் முதலீடு செய்யும்போது உங்களுக்கு வரி விலக்கு கிடைக்கும்.
தேசிய நெடுஞ்சாலை ஆணையம் அல்லது பவர் ஃபைனான்ஸ் கார்ப்பரேஷன், ரயில்வே ஃபைனான்ஸ் கார்ப்பரேஷன் ஆகியவற்றின் பத்திரங்களில் முதலீடு செய்யலாம். ஆனால் இதில் 50 லட்சம் ரூபாய் வரை மட்டுமே நீங்கள் முதலீடு செய்ய முடியும். ஆனால் நிலத்தை விற்பனை செய்து ஆறு மாத காலத்திற்குள் இத்தகைய முதலீடுகளை மேற்கொள்ளும் பட்சத்தில் மூலதன ஆதாய வரியை செலுத்துவதிலிருந்து தப்பிக்கலாம்.
சில பொதுத்துறை வங்கிகளில் கேபிடல் கெயின் அக்கவுண்ட் என்ற ஒரு திட்டமே இருக்கிறது. இந்த திட்டத்திங்களில் உங்களுக்கு நிலத்தின் விற்பனை மூலம் கிடைத்த லாபத்தை டெபாசிட் செய்யும் பட்சத்தில் வரி விலக்கு பெற முடியும்.
Story written by: Devika
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!



Click it and Unblock the Notifications