கைநிறைய ஊதியம் வந்தாலும் பத்தல, மாச கடையில கையில காசு இல்ல என புலம்பும் பலரை நாம் பார்க்கிறோம். இந்த பிரச்சனைக்கு மிக எளிதான ஒரு தீர்வு இருக்கிறது.
சேமிப்பு, சிக்கனம் ஆகியவற்றை நாம் அன்றாட பழக்க வழக்கங்களுக்குள் கொண்டு வந்துவிட்டால் குறைந்த சம்பளத்திலும் நிறைவான வாழ்க்கை வாழ முடியும். அதற்கான ஏழு சிறந்த வழிமுறைகளை தான் நாம் இந்த கட்டுரையில் தெரிந்து கொள்ள போகிறோம்.

முதலில் சேமிப்பு: உங்களுடைய வங்கி கணக்கில் ஒரு குறிப்பிட்ட தொகை இருக்கிறது என்றால் அதை பார்க்கும்போதெல்லாம் நம்மிடம் இவ்வளவு பணம் இருக்கிறது நாம் செலவு செய்யலாம் என்கிற ஒரு மனநிலை தான் நமக்கு ஏற்படும். எனவே மாதந்தோறும் தொடக்கத்திலேயே அல்லது ஊதியம் வந்த உடனேயே அத்தியாவசிய செலவுகளுக்கான தொகையை ஒதுக்கிவிட்டு மீதமுள்ள தொகை உங்களுடைய யுபிஐ பயன்படுத்தாத மற்றொரு கணக்கில் சேமித்து வைக்க தொடங்கி விட வேண்டும் அல்லது ஏதேனும் ஒரு சேமிப்பு திட்டத்தில் அதனை போட்டு விட வேண்டும்.
உணவு திட்டமிடல்: வாரத்தின் முதல் நாளிலேயே நீங்கள் என்ன உணவு சமைக்க போகிறீர்கள் அதற்கு என்ன மளிகை தேவைப்படுகிறது என்பன உள்ளிட்டவற்றை திட்டமிட்டு கொண்டால் இறுதி நேரத்தில் ஹோட்டலில் சென்று உணவு வாங்கி தேவை இல்லாமல் செலவு செய்வது அல்லது ரெடிமேட் உணவுகளை வாங்குவது போன்றவற்றை தவிர்க்க முடியும். இது உங்களுடைய உடல்நலனுக்கும் நல்லது.
தேவையில்லாத சந்தாக்கள்: ஓடிடி போன்ற பல்வேறு பொழுதுபோக்கு அம்சங்களுக்காக நாம் மாதம் தோறும் குறிப்பிட்ட தொகையை செலவு செய்து வருகிறோம். ஆனால் இவ்வாறு நீங்கள் சப்ஸ்கிரைப் செய்யக்கூடிய திட்டங்களை சரியாக பயன்படுத்துகிறீர்களா என பாருங்கள் இது போன்ற ott சந்தா அல்லது ஜிம் செல்வது போன்ற எதற்கெல்லாம் நீங்கள் மாதந்தோறும் கட்டணம் செலுத்துகிறீர்கள் அதை எல்லாம் நீங்கள் பயன்படுத்துகிறீர்களா என்பதை சரியாக ஆய்வு செய்து தேவையில்லாததை தவிர்த்து விடுவது நல்லது.
மின்சார செலவை குறைப்பது: நமது வீட்டில் குளிர்சாதன பெட்டியை தவிர மற்ற அனைத்து சாதனங்களையும் பயன்படுத்தாத போது அதற்கான சுவிட்சைகளை ஆஃப் செய்து வைப்பது சிறந்தது. சார்ஜர்கள், தொலைக்காட்சி, ஏசி, ஃபேன் உள்ளிட்டவற்றை தேவையில்லாத போது நம் முறையாக ஆஃப் செய்து வைத்தால் நம்முடைய மின்சார கட்டணத்தில் பெரிய அளவிலான தொகையை நம்மால் சேமிக்க முடியும்.
பொது போக்குவரத்தை பயன்படுத்துவது: பொது போக்குவரத்தை பயன்படுத்தும்போது உங்களுக்கு எரிபொருள் செலவு மிச்சம் ஆகிறது. அதே வேளையில் பொதுமக்களோடு கலந்துரையாடவும் உங்களுக்கு ஒரு வாய்ப்பு கிடைக்கிறது. இதனால் சுற்றுச்சூழலுக்கும் நீங்கள் சிறந்த சேவையை செய்கிறீர்கள்.
ரொக்கமாக பணத்தை பயன்படுத்துவது: ஆன்லைனிலும் கிரெடிட் கார்டுகளையும் பயன்படுத்தாமல் பணத்தை கையில் எடுத்து வைத்துக்கொண்டு பயன்படுத்துவது நல்லது. ஏனெனில் ஆன்லைனில் பணத்தை செலுத்தும் போது நாம் கணக்கென்றி செலவிடுகிறோம் என்கிறது ஒரு ஆய்வு என்கிறது. குறிப்பிட்ட தொகையை யுபிஐ கணத்திற்கு அனுப்பி வைத்துவிட்டு ஒரு குறிப்பிட்ட தொகையை ரொக்கமாக எடுத்து வைத்துக்கொண்டு அந்த மாதம் இவ்வளவு மட்டுமே செலவு செய்ய வேண்டும் என திட்டமிட்டு வைத்துக் கொள்ளுங்கள்.
பணம் செலவு செய்யாத நாள்: வார இறுதி நாட்கள் என்றாலே வெளியில் செல்வது உணவு உண்பது என்பன உள்ளிட்டவை நம்முடைய வாழ்க்கை முறைகளில் ஒன்றாக மாறிவிட்டது. ஆனால் மாதத்தில் ஒரு நாள், ஒரு வார இறுதி நாள் நான் எந்த செலவும் செய்ய மாட்டேன், வெளியில் செல்ல மாட்டேன் என முடிவு செய்து கொண்டால் அதுவே உங்களுக்கு பெரிய தொகையை மிச்சப்படுத்திக் கொடுக்கும்.
More From GoodReturns

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!

பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி!! சென்செக்ஸ் 1000 புள்ளிகளுக்கு மேல் வீழ்ச்சி!!

ஆசை காட்டி மோசம் செய்யும் தங்கம்..!! ஆறுதல் தந்த வெள்ளி..!! இப்போ வாங்கலாமா? வெயிட் பண்ணலாமா?

தங்கம் விலை: 2 நாட்களில் நடந்த திருப்பம்!! மார்ச் மாத மேஜிக் முடிவுக்கு வந்ததா?

கண்ணாமூச்சி ஆடும் தங்கம்.. ரிவர்ஸ் எடுக்கும் வெள்ளி..! இந்த 2 பேர் எடுக்கிற முடிவுல தான் எல்லாமே இருக்கு!

செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் வட்டி உயர்த்தப்படுகிறதா? மக்களவையில் முக்கிய தகவலை வெளியிட்ட அரசு…!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

SIP முதலீடு செஞ்சா கோடிகளில் பணம் கிடைக்குமா? நம்ம எல்லாரும் செய்யுற தப்பு இது தான்..!!

இந்த வாரம் 4 நாட்கள், அடுத்த வாரம் 3 நாட்கள்: பங்குச்சந்தை முதலீட்டாளர்களே முதல்ல இத படிங்க

பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு கருப்பு வெள்ளி..!! ஒரே நாளில் ரூ.8 லட்சம் கோடி அவுட்..!!

கதறி கதறி அழும் வெள்ளி முதலீட்டாளர்கள்.. போட்ட காசு மொத்தமும் போச்சு..!! அடுத்தது என்ன..?



Click it and Unblock the Notifications