பாரம்பரிய முதலீடுகளை கடந்து பங்குச்சந்தை, மியூச்சுவல் ஃபண்டுகள் உள்ளிட்ட முதலீடுகள் இருக்கின்றன என்பது குறித்து பலருக்கும் தற்போது விழிப்புணர்வு ஏற்பட்டிருக்கிறது. இருந்தாலும் மியூச்சுவல் ஃபண்டு திட்டங்களில் முதலீடு செய்து முதல் இரண்டு மூன்று ஆண்டுகளிலேயே நினைத்த அளவு லாபம் வரவில்லையே என பலரும் குழம்பிவிடுகின்றனர்.
மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்யும் போது ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு காத்திருந்தால் தான் நல்ல லாபம் கிடைக்கும். அதற்காக சிறு வயதிலேயே முதலீடு செய்துவிடுங்கள் என இத்துறை சார்ந்தவர்கள் கூறுகின்றனர். குறிப்பாக எஸ்ஐபி முறையில் Systematic investment plan எனப்படும் எஸ்ஐபி முறையில் மாதந்தோறும் ஒரு தொகையை நாம் முதலீடுக்கு ஒதுக்க வேண்டும்.

இவ்வாறு மாதம் தோறும் ஒரு தொகையை முதலீடு செய்வதன் மூலம் சிறு வயது முதலே நிதி சார்ந்த ஒழுக்கம் வந்துவிடும். குறிப்பாக வேலைக்கு செல்ல தொடங்கிவிட்ட உடன், முதலீட்டை தொடங்கும் போது பொறுப்புகள் குறைவாக இருக்கும் என்பதால் தாராளமாக முதலீடு செய்ய முடியும் என அறிவுரை வழங்குகின்றனர். அந்த வகையில் ஒரு சிறிய அளவிலான முதலீடு கூட 18 ஆண்டுகளில் உங்களை கோடீஸ்வரர் ஆக்க முடியும். காம்பவுண்டிங் முறையில் உங்களுடைய முதலீட்டை பல மடங்கு உயர்த்துவதற்கு இருக்கக்கூடிய ஒரே வழி சிஸ்டமேட்டிக் இன்வெஸ்ட்மென்ட் பிளான் எனப்படும் எஸ்ஐபி முறையில் முதலீடு செய்வதுதான் என நிபுணர்கள் கூறுகின்றனர்.
இந்தியாவின் புகழ்பெற்ற முதலீட்டு ஆலோசகராக எடுக்கக்கூடிய ஏ.கே.மந்தன் தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் எப்படி ஒரு சிறிய தொகை உங்களை கோடீஸ்வரராக உயர்த்தும் என்பதை விவரித்து இருக்கிறார்.
அதாவது மாதந்தோறும் 2000 ரூபாய் முதலீடு செய்ய வேண்டும், 18 ஆண்டுகளுக்கு இந்த முதலீட்டை மேற்கொள்ள வேண்டும் .உங்களுடைய முதலீடு ஆண்டுதோறும் 15.5 சதவீத லாபம் தருகிறது என்றால் 18 ஆண்டுகளில் நீங்கள் செய்த மொத்த முதலீடு 4. 32 லட்சம் ரூபாய் இதுவே உங்களுக்கு திரும்ப கிடைக்கக்கூடிய தொகை 23.5 லட்சம் ரூபாய் அதாவது லாபமே உங்களுக்கு 19.2 லட்சம் ரூபாய்.
அடுத்த 18 ஆண்டுகளில் எனக்கு 1 கோடி ரூபாய் தேவை என இலக்கு கொண்டிருப்பவர்கள் எவ்வளவு முதலீடு செய்ய வேண்டும் என தெரிந்து கொள்ளலாம். மாதந்தோறும் 10000 ரூபாய் முதலீடு செய்ய வேண்டும், 18 ஆண்டுகளுக்கு இந்த முதலீட்டை மேற்கொள்ள வேண்டும் .உங்களுடைய முதலீடு ஆண்டுதோறும் 15.5 சதவீத லாபம் தருகிறது என்றால் 18 ஆண்டுகளில் நீங்கள் செய்த மொத்த முதலீடு 21.6 லட்சம் ரூபாய் இதுவே உங்களுக்கு திரும்ப கிடைக்கக்கூடிய தொகை 1.18 கோடி ரூபாய் அதாவது லாபமே உங்களுக்கு 96 லட்சம் ரூபாய் ஆகும்.
உங்களுக்கு குழந்தை பிறந்திருக்கிறது என்றால் அவர்கள் பிறந்த உடனே இந்த எஸ்ஐபி முதலீட்டை நீங்கள் தொடங்கலாம், அவர்கள் கல்லூரி படிப்புக்கு செல்லும் போது 1 கோடி ரூபாய் உங்களுக்கு கிடைக்கும் என நிபுணர்கள் கூறுகின்றனர்.
Disclaimer: This article is strictly for informational purposes only. It is not a solicitation to buy, sell in precious metal products, commodities, securities or other financial instruments. Greynium Information Technologies Pvt Ltd, its subsidiaries, associates and the author of this article do not accept culpability for losses and/or damages arising based on information in this article.
More From GoodReturns

பங்குச்சந்தை சரிவில் இந்த தப்பு மட்டும் பண்ணாதீங்க - முதலீட்டாளர்களுக்கு விஜய் கேடியா கூறும் டிப்ஸ்

பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு கருப்பு வெள்ளி..!! ஒரே நாளில் ரூ.8 லட்சம் கோடி அவுட்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

முதலீட்டாளர்களுக்கு இன்ப அதிர்ச்சி: 1500 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்த சென்செக்ஸ்!!

ஆசை காட்டி மோசம் செய்யும் தங்கம்..!! ஆறுதல் தந்த வெள்ளி..!! இப்போ வாங்கலாமா? வெயிட் பண்ணலாமா?

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!

கண்ணாமூச்சி ஆடும் தங்கம்.. ரிவர்ஸ் எடுக்கும் வெள்ளி..! இந்த 2 பேர் எடுக்கிற முடிவுல தான் எல்லாமே இருக்கு!

தங்கம் விலை: 2 நாட்களில் நடந்த திருப்பம்!! மார்ச் மாத மேஜிக் முடிவுக்கு வந்ததா?

SIP முதலீடு செஞ்சா கோடிகளில் பணம் கிடைக்குமா? நம்ம எல்லாரும் செய்யுற தப்பு இது தான்..!!

தங்கம் விலை: 24 மணி நேரத்தில் 4 முறை மாறிய விலை!! ஈரான் போரால் நடக்கும் அக்கப்போர்!!



Click it and Unblock the Notifications