இன்றையச் சூழலில் பெரும்பாலான மாதச் சம்பளக்காரர்களுக்கு நெருக்கடியில் தான் குடும்பம் ஓடிக்கொண்டிருக்கிறது. ஏனெனில் இன்றைய விலைவாசி உயர்வு அப்படி இருக்கிறது. இதில் சிறு தொகையை கூட சேமிக்க முடியாமல் தவித்து வருகின்றனர். எதிர்கால இலக்குகளை அடைய மாதா மாதம் பெருந்தொகையை சேமித்தாக வேண்டும் என்ற அவசியமே இல்லை. சிறு தொகையை எடுத்து வைப்பதன் மூலமே உங்களுடைய பெரிய இலக்குகளை அடைய முடியும்.
உதாரணமாக ஒவ்வொரு மாதமும் 4167 ரூபாய் சேமித்து வைத்தால் ஆண்டுக்கு தோராயமாக ரூ.50,000 சேமிக்கலாம். அதேநேரம் 8,334 ரூபாய் சேமித்தால் ஆண்டுக்கு ரூ.1 லட்சம் வரை சேமிக்க முடியும். இதை செய்வதற்கு நீங்கள் சில விஷயங்களைப் பின்பற்றினாலே போதும். அது என்ன என்பதை பார்ப்போம்.

மாதாந்திர பட்ஜெட்டில் சின்ன சின்ன செலவுகளைக் குறைத்தல்: உங்களுக்கு பிடித்த விஷயங்களை உடனடியாக குறைத்துக் கொண்டுதான் சேமிக்க வேண்டும் என்று கிடையாது. நீங்கள் அடிக்கடி கவனிக்காத விஷயங்களுக்கு செலவு செய்வதை முதலில் கவனியுங்கள். உதாரணமாக சப்ஸ்கிரிப்ஷனுக்கு ஆட்டோ பே மூலம் பணம் சென்று கொண்டிருக்கும். ஆனால் பணம் செலுத்தும் பலர் சப்ஸ்கிரிப்ஷன் சேவைகளை பார்ப்பதில்லை. இதைத் தவிர மெம்பர்ஷிப் கட்டணங்கள் மற்றும் இதர சேவை கட்டணங்களைக் குறைத்தாலே ஒரு ஆண்டின் இறுதியில் பெரிய தொகை மிச்சமாகும். நீங்கள் அரிதாக உபயோகப்படுத்தும் சேவைகளுக்கான கட்டணங்களை கேன்சல் செய்யுங்கள்.
சாப்பாட்டுச் செலவு: சேமிப்பதற்காக வெளியில் சாப்பிடுவதை நிறுத்த வேண்டிய அவசியமில்லை. இருந்தாலும் அடிக்கடி ஆர்டர் செய்து சாப்பிடுவதற்கு பதிலாக மாதத்திற்கு ஒரு முறை அல்லது இரண்டு முறை என உங்களுக்குள் ஒரு வரம்பை அமைத்துக் கொண்டு செலவு செய்யலாம். உதாரணமாக மாதத்திற்கு இரண்டு முறை 500 ரூபாய் என்ற வீதத்தில் உணவு ஆர்டர் செய்கிறீர்கள் என்றால் இந்த பணத்தை எடுத்து வைத்தாலே மாதத்திற்கு ரூ.1000 மச்சமாகும். வருடத்திற்கு ரூ.12,000 சேமிக்கலாம். எனவே அலுவலகம் செல்பவர்கள் வீட்டில் இருந்து மதிய உணவு எடுத்துச் சென்றாலே அதிலிருந்து பாதி பணம் சேமிப்பாகிவிடும்.
அவசர அவசரமாக செய்யப்படும் ஷாப்பிங்: ஆன்லைன் ஷாப்பிங் தளங்களின் அதிகரிப்பு ஒருபுறம் பயனுள்ளதாக இருந்தாலும்.. மறுபுறம் சிலர் யோசிக்காமல் ஷாப்பிங் செய்து வருகின்றனர். தேவையில்லாத பொருட்களை வாங்குவதற்கு 24 ஹவர் வெயிட்டிங் ரூலை பயன்படுத்தலாம். அதாவது ஒரு பொருளை வாங்க வேண்டும் என்று நினைக்கிறீர்கள் என்றால் அதை உடனடியாக வாங்காமல் 24 மணி நேரம் கழித்து வாங்கலாம். அதற்குள் அந்த பொருள் உண்மையாகவே உங்களுக்கு தேவையா என்பதை நீங்களே தெரிந்து கொண்டு ஷாப்பிங் செய்யலாம்.
ஆட்டோமேட்டிக் சேவிங்ஸ்: ஒரு சிலர் சம்பளம் வந்த பிறகு எல்லா செலவையும் முடித்துக் கொண்டு சேமித்துக் கொள்ளலாம் என்று நினைப்பார்கள். இப்படி நினைக்கும் பலருக்கு பெரும்பாலும் சேமிக்க முடியாமலே போய்விடுகிறது. எனவே செபி அறிவுரையின் படி வருமானம் வந்தவுடன் முதல் விஷயமாக ஒரு பகுதியை உங்கள் முதலீட்டுக்கும் சேமிப்புக்கும் ஒதுக்க வேண்டும். இதற்கு நீங்கள் ஆட்டோ ட்ரான்ஸ்பர் வசதியை கூட பயன்படுத்தலாம். உதாரணமாக மாதத்திற்கு ரூ.3,000 மட்டும் சேமித்தால் ஆண்டுக்கு ரூ.36,000 சேர்ந்திருக்கும்.
போனஸை பயன்படுத்துங்கள்: உங்களுக்கு அவ்வப்போது கிடைக்கும் போனஸ் மற்றும் ரீஃபண்ட் தொகை போன்றவற்றை உடனடியாக செலவு செய்யாமல் அதையும் சேமிப்பில் ஒதுக்கலாம். இதற்கு உங்களுக்குள்ளேயே ஒரு இலக்கை நிர்ணயித்துக் கொள்ளுங்கள். உதாரணமாக இந்த செப்டம்பர் மாதம் தொடங்கி 2027 ஆம் ஆண்டின் மார்ச் மாதத்திற்குள் நான் 50,000 சேமிக்க போகிறேன் என்று உங்களுக்குள்ளேயே ஒரு இலக்கை வைத்துக்கொண்டு அதன்படி நடக்கலாம்.
செபி பரிந்துரைப்பதும் இதைத்தான். அதேபோல அவசரகால நிதியாக ஒரு மூன்று மாத பணத்தை தனி பேங்க் அக்கவுண்டில் வையுங்கள். இதுபோன்ற சின்ன சின்ன விஷயங்களை பின்பற்றினாலே உங்களால் மாதத்திற்கு ரூ.50,000 முதல் ரூ.1 லட்சம் வரை எளிதில் சேமிக்க முடியும்.


Click it and Unblock the Notifications

