வருமான வரியை சேமிக்க ELSS ஃபண்டுகளை எப்படி தேர்வு செய்ய வேண்டும்?

சென்னை: வருமான வரி சலுகை பெறுவதற்காக பலர் மியூச்சுவல் ஃபண்டுகள் எனப்படும் பரஸ்பர நிதி திட்டங்களில் முதலீடு செய்கின்றனர். ஆனால் வரி சலுகை பெறுவதற்காக செய்யும் முதலீடுகளுக்கு குறிப்பிட்ட லாக் இன் காலம் உள்ளது.

இப்படி வரி சேமிப்புக்காக செய்யும் மியூச்சுவல் ஃபண்டுகள், ELSS என அழைக்கப்படுகின்றன. ஈக்விட்டி லிங்கிடு சேவிங்ஸ் திட்டங்கள் அதாவது சந்தையுடன் இணைக்கப்பட்ட சேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்வது உகந்ததா என்பது குறித்து இந்த கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.

வருமான வரியை சேமிக்க ELSS ஃபண்டுகளை எப்படி தேர்வு செய்ய வேண்டும்?

ஈஎல்எல்எஸ் திட்டங்களில் முதலீடு செய்பவர்கள் வருமான வரி சட்டத்தின் பிரிவு 80 சி-இன் கீழ் ஒரு நிதியாண்டுக்கு ரூ.1.50 லட்சம் வரை வரி விலக்கு பெற முடியும்.

அந்த வகையில் வருமான வரி சேமிப்புக்காக மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் முதலீடு செய்பவர்கள் என்னென்ன வழிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்பது குறித்து ஆதித்யா நேம் மற்றும் கல்பேஷ் ஆசார் ஆகியோர் என்டிடிவி வணிக பிரிவுக்கு அளித்துள்ள பேட்டியில் விரிவாக விளக்கம் தந்துள்ளனர்.

வருமான வரி சேமிப்புக்கு என மியூச்சுவல் ஃபண்டு திட்டங்களில் முதலீடு செய்யாமல், அவற்றைக் கொண்டு நிதி இலக்குகளையும் திட்டமிட வேண்டும் என குறிப்பிடுகின்றனர். குறிப்பாக பணிக்கு செல்ல தொடங்கிய ஆரம்ப காலகட்டங்களிலேயே ஈஎல்எஸ்எஸ் திட்டங்களில் முதலீடு செய்ய வேண்டும் என அறிவுரை வழங்குகின்றனர்.

5 ஆண்டுகள் மற்றும் அதற்கு மேலாக முதலீடு செய்பவர்களுக்கு உகந்த திட்டங்கள் ஈஎல்எஸ்எஸ் என்றும், நீண்ட கால நோக்கில் இந்தத் திட்டங்களில் முதலீடு செய்யும் போது அதிகபட்ச ரிட்டன்ஸ் கிடைக்கும் என்றும் தெரிவிக்கின்றனர்.

ஈக்விட்டி லிங்குடு சேவிங்ஸ் திட்டங்கள் லார்ஜ் கேப் எனப்படும் பெரும் முதலீடு கொண்ட நிறுவனங்களை சார்ந்து இருப்பதால் நீண்ட கால அடிப்படையில் இவை சிறந்த லாபத்தை தரக் கூடும் என்கின்றனர் நிபுணர்கள். இவ்வாறு ஃபண்டுகளை தேர்வு செய்யும்போது என்னென்ன அம்சங்களை பார்க்க வேண்டும் என்பதற்கான வழிமுறைகளையும் பரிந்துரை செய்துள்ளனர்.

ஆய்வாளர்கள் வழங்கும் மதிப்பீடுகளின் அடிப்படையில் முடிவெடுக்க வேண்டும், நீங்கள் எவ்வளவு ரிஸ்க் எடுக்க தயாராக இருக்கிறீர்கள் அதில் உங்களுக்கு எவ்வளவு வருவாய் கிடைக்கப் போகிறது என்பதை சமமாக கணக்கிட்டு முதலீடு செய்ய வேண்டும் என கூறுகின்றனர்.

குறிப்பிட்ட மியூச்சுவல் ஃபண்டு எந்தெந்த துறைகளில் முதலீடு செய்துள்ளது என்பதை கவனிக்க வேண்டும். மியூச்சுவல் ஃபண்ட் எப்போது தொடங்கப்பட்டது, எத்தனை ஆண்டுகள் முடிந்துள்ளது , அதனை மேலாண்மை செய்யும் நிறுவனத்தின் அனுபவம் என்ன ஆகியவற்றை கருத்தில் கொள்வது அவசியம்.

குறிப்பாக உங்களது முதலீட்டை மேலாண்மை செய்வதற்காக எவ்வளவு சதவிகித தொகையை அந்த ஃபண்டை நடத்தும் நிறுவனம் எடுத்துக் கொள்கிறது என்பதை கவனிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட வழிமுறைகளை நிபுணர்கள் முன் வைக்கின்றனர்.

Story written by: Devika

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+