மியூச்சுவல் பண்டில் முதலீடு செய்துள்ளீ்ர்களா.. இந்த தவறை மட்டும் செய்திடாதீங்க.!

தற்போது பலருக்கும் எதிர்கால தேவைக்கான பணத்தை வங்கி கணக்கில் அப்படியே இருப்பு வைத்திருக்காமல் சரியான கருவிகளில் முதலீடு செய்ய வேண்டும் என்ற விழிப்புணர்வு அதிகரித்துள்ளது. அந்த வகையில் 2026 ஆம் நிதி ஆண்டில் மாதந்தோறும் 1 லட்சம் ரூபாயை முதலீடு செய்ய தயாராக இருப்பவர்கள் எப்படி அதனை பிரித்து முதலீடு செய்யலாம் என்பது குறித்து நிபுணர்கள் சில யோசனைகளை வழங்கியுள்ளனர்.

2026 ஆம் நிதியாண்டு தொடங்கி இருக்கக்கூடிய இந்த சூழலில் மும்பையை சேர்ந்த ஒரு பெண் தான் மாதந்தோறும் 1 லட்சம் ரூபாயை மியூச்சுவல் ஃபண்டு திட்டங்களில் முதலீடு செய்ய தயாராக இருப்பதாகவும் அதற்காக 10 திட்டங்களை தேர்வு செய்து மாதம் 10,000ஐ முதலீடு செய்ய இருப்பதாகவும் கூறியுள்ளார். இந்த அணுகுமுறை தனக்கு வெற்றி அளிக்குமா என்றும் அவர் கேட்டிருக்கிறார்.

மியூச்சுவல் பண்டில் முதலீடு செய்துள்ளீ்ர்களா.. இந்த தவறை மட்டும் செய்திடாதீங்க.!

இதற்கு இன்வெஸ்டோகிராபி நிறுவனர் ஸ்வேதா ஜெயின் எக்னாமிக் டைம்ஸில் வெளியிட்டுள்ள பதிலில், பல்வேறு மியூச்சுவல் ஃபண்டு திட்டங்களை தேர்வு செய்து அதில் சிறு சிறு தொகையை பணமாக போட்டு வைத்தால் அதனை மேலாண்மை செய்வது கடினமானதாக இருக்கும் என்றும் அதனை கண்காணித்து சந்தை போக்குகளுக்கு ஏற்ப போர்ட்போலியோவை மாற்றி அமைப்பது கடினமானதாக இருக்கும் என்றும் கூறுகிறார்.

1 லட்சம் ரூபாய் மாதந்தோறும் முதலீடு செய்ய தயாராக இருக்கிறேன் என நீங்கள் கூறியிருக்கிறீர்கள், எஸ்ஐபி முறையில் மியூச்சுவல் ஃபண்டு திட்டங்களில் முதலீடு செய்வது தான் உங்களுடைய எண்ணமாக இருந்தால் 1 லட்சம் ரூபாயை பத்தாக பிரித்து பத்து மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்வதை தவிர்த்து விட்டு இந்த ஒரு லட்சம் ரூபாயை நான்காக பிரித்துக் கொள்ளுங்கள் என அறிவுரை வழங்கி இருக்கிறார்.

குறிப்பிட்ட நான்கு சிறந்த மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களை தேர்வு செய்து அதில் 25 ஆயிரம் என உங்களுடைய ஒரு லட்சம் ரூபாய் பணத்தை பிரித்து முதலீடு செய்யுங்கள் என அவர் அறிவுரை வழங்கியுள்ளார். இவ்வாறு குறைந்த திட்டங்களில் முதலீடு செய்திருப்பதன் மூலம் நாம் சந்தை போக்குக்கு ஏற்ப போர்ட் போலியோவை மாற்றிக் கொள்ளலாம் என்றும் திட்டங்களின் வளர்ச்சியை கண்காணிப்பதும் எளிமையாக இருக்கும் என்றும் கூறுகிறார். அவர் பரிந்துரைகள் திட்டங்கள்:

DSP Nifty 50 Index Fund - மாதம் ரூ.25,000

Motilal Oswal Midcap Fund - மாதம் ரூ.25,000

ICICI Prudential Bluechip Fund - மாதம் ரூ.25,000

Bandhan Smallcap Fund - மாதம் ரூ.25,000

இந்த நான்கு ஃபண்டுகளும் சந்தை ஏற்ற இறக்கங்களுக்கு ஏற்ப போர்ட் போலியோவை பேலன்ஸ் செய்துவிடும் என கூறியுள்ள அவர், தேவைப்பட்டால் இதில் ஸ்மால் கேப்பிற்கு பதிலாக Parag Parikh Flexi Cap Fundஐ சேர்த்து கொள்ளலாம் அல்லது மாதம் ரூ.20,000 என ஐந்து திட்டங்களில் முதலீடு செய்யலாம் என அறிவுரை வழங்கியுள்ளார்.

Disclaimer: This article is strictly for informational purposes only. It is not a solicitation to buy, sell in precious metal products, commodities, securities or other financial instruments. Greynium Information Technologies Pvt Ltd, its subsidiaries, associates and the author of this article do not accept culpability for losses and/or damages arising based on information in this article.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+