இனி எங்கும் அலைய வேண்டியதில்லை.. EPF கணக்கில் வங்கிக் கணக்கினை எளிதாக அப்டேட் செய்யலாம்..!

தொழிலாளர்களின் வருங்கால வைப்பு நிதி கணக்கில் எப்படி உங்களது வங்கி கணக்கினை அப்டேட் செய்வது? இன்றைய காலகட்டத்தில் பலரும் எதிர்கொள்ளும் ஒரு பிரச்சனை இது தான். ஏனெனில் பிஎஃப் கணக்கினை பொறுத்த வரையில், அதில் ஏதேனும் விவரங்களை மாற்ற வேண்டுமெனில், இதற்காக பிஎஃப் அலுவலகம் சென்ற காலம் போய், இன்று அனைத்தும் ஆன்லைனிலேயே அப்டேட் செய்து கொள்ளலாம்.

அதிலும் தங்களது வங்கிக் கணக்கு உட்பட பல விவரங்களை யாருடைய உதவியும் இல்லாமல் ஆன்லைனிலேயே மாற்றிக் கொள்ளலாம். இதற்காக வெளியில் சென்று அலைய வேண்டிய அவசியம் இல்லை.

ஆனால் சிலருக்கு இதனை எப்படி ஆன்லைனில் எப்படி அப்டேட் செய்வது என தெரிவதில்லை? ஆக ஆன்லைனில் எப்படி அப்டேட் செய்வது? வாருங்கள் அதனை பற்றித் தான் பார்க்கப்போகிறோம்.

உங்களது கணக்கினை லாகின் செய்யுங்கள்

உங்களது கணக்கினை லாகின் செய்யுங்கள்


முதலில் உங்களது வங்கிக் கணக்கினை அப்டேட் செய்ய வாடிக்கையாளர்கள், https://unifiedportal-emp.epfindia.gov.in/epfo/ என்ற இணையத்தில் உங்களது லாகின் ஐடி பாஸ்வேர்டினை கொடுத்து லாகின் செய்து கொள்ளுங்கள்.
அதில் மேனேஜ் (Manage) என்பதனை கிளிக் செய்ய வேண்டும். இதன் பிறகு உங்களது கேஓய்சியை கிளிக் செய்ய வேண்டும்.

வங்கிக் கணக்கினை மாற்றிக் கொள்ளுங்கள்

வங்கிக் கணக்கினை மாற்றிக் கொள்ளுங்கள்

அங்கு உங்களது வங்கி கணக்கு என்பதை கிளிக் செய்து, வங்கி கணக்கு நம்பரை பதிவு செய்து கொள்ளுங்கள், உங்களது பெயர், ஐஎஃப்எஸ்சி கோட் உள்ளிட்டவற்றை பதிவிட்ட, பிறகு சேமிக்கவும். ஒரு முறை நீங்கள் வெற்றிகரமாக அப்டேட் செய்து விட்டால், உங்களது கேஒய்சியிலும் வங்கி கணக்கு மாறிவிடும்.

எப்படி தெரிந்து கொள்வது?

எப்படி தெரிந்து கொள்வது?

அதெல்லாம் சரி இந்த பிஎஃப் கணக்கில் உள்ள தொகையை பற்றி எப்படி தெரிந்து கொள்வது? ஊழியர்கள் தங்களது வருங்கால வைப்பு நிதியினை உமாங் ஆப் (Umang App) மூலமும் தெரிந்து கொள்ளலாம். EPFOவின் உறுப்பினர் சேவா போர்டல் மூலமும், எஸ்எம்எஸ் அல்லது மிஸ்டு கால் மூலமும் அறிந்து கொள்ள முடியும்.

Umang app ஆப் மூலம் எப்படி தெரிந்து கொள்வது?

Umang app ஆப் மூலம் எப்படி தெரிந்து கொள்வது?

ஊழியர்கள் தங்களது வருங்கால வைப்பு நிதியினை மொபைல் மூலமாக பார்த்துக் கொள்ள, Umang app ஆப்பினை பயன்படுத்திக் கொள்ளலாம். அரசின் பல்வேறு சேவைகளுக்காக வழங்கப்பட்ட ஒரு ஆப் தான் உமாங் ஆப். ஒருவர் இந்த உமாங் ஆஃப் மூலம் EPF பாஸ் புத்தகத்தினையும் பெற முடியும். இதன் மூலம் உங்களது இருப்பினையும் தெரிந்து கொள்ள முடியும்.

EPFO portal பயன்படுத்தி எவ்வாறு தெரிந்து கொள்வது?

EPFO portal பயன்படுத்தி எவ்வாறு தெரிந்து கொள்வது?

Unified portal போர்டலுக்கு பதிலாக, இப்போது தொழிலாளர்கள் மற்றொரு இணையதளத்திலும் அணுக முடியும். தொழிலாளர்களின் பாஸ்புத்தகம் www.epfindia.gov.in என்ற இணையத்திலும் இருக்கும். இந்த இணையதளத்தில் our services என்ற லிங்கினை கிளிக் செய்து, பின்பு, for employees என்ற ஆப்சனை க்ளிக் செய்ய வேண்டும். இதனையடுத்து member passbook என்பதை க்ளிக் செய்ய வேண்டும். அங்கு உங்களது யுஏஎன் நம்பரை பதிவு செய்து, பாஸ்வேர்டையும் கொடுத்து லாக் இன் செய்து கொள்ள முடியும். பின்பு உங்களது அனைத்து விவரங்களையும் பெற முடியும்.

எஸ்எம்எஸ் மூலம் தெரிந்துகொள்ளலாம்

எஸ்எம்எஸ் மூலம் தெரிந்துகொள்ளலாம்

உங்களது வருங்கால வைப்பு நிதியினை தெரிந்து கொள்ள 7738299899 என்ற எண்ணிற்கு எஸ்எம்எஸ் அனுப்பலாம். நீங்கள் இந்த மொபைல் எண்ணிக்கு மொழியினை தேர்வு செய்ய EPFOHO UAN ENG என்று அனுப்பலாம். அதாவது ENGLISH என்ற வார்த்தையில் ENG-யை மட்டும் எடுத்து அனுப்ப வேண்டும். இந்த எஸ்எம்எஸ் சேவையானது ஆங்கிலம், ஹிந்தி, பஞ்சாபி, குஜராத்தி, மராத்தி, கன்னடம், தெலுங்கு, தமிழ், மலையாளம் மற்றும் பெங்காலி உள்ளிட்ட மொழிகள் உள்ளது.

இதனை ஒரு முறை உறுதி செய்து கொள்ளுங்கள்

இதனை ஒரு முறை உறுதி செய்து கொள்ளுங்கள்

EPFO அதன் பதிவுகளில் கிடைக்கும் உறுப்பினர்களின் விவரங்களையும் அனுப்புகிறது. உங்கள் யுஏஎன் எண், வங்கி கணக்கு, ஆதார் மற்றும் பான் மூலம் இணைக்கப்பட்டுள்ளதா என்பதையும் உறுதி படுத்திக் கொள்ளுங்கள். இதன் மூலமும் உங்களது இருப்பினை தெரிந்து கொள்ள முடியும்.

மிஸ்டு கால் மூலமும் தெரிந்து கொள்ளலாம்

மிஸ்டு கால் மூலமும் தெரிந்து கொள்ளலாம்

நீங்கள் யுஏஎன் நம்பரில் பதிவு செய்யப்பட்ட எண்ணிலிருந்து 011-22901406 என்ற எண்ணிக்கு, மிஸ்டு கால் கொடுத்தும் தெரிந்து கொள்ளலாம். இதிலும் உங்களது யுஏஎன் எண், வங்கி கணக்கு, ஆதார் மற்றும் பான் மூலம் இணைக்கப்பட்டுள்ளதா என்பதையும் உறுதிபடுத்திக் கொள்ளுங்கள். இந்த சேவையினை பெறுவதற்கு, செலவும் அதிகம் இல்லை.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+