இந்தியாவில் அமைப்புசாரா துறைகளில் பணிபுரிபவர்கள் மற்றும் பொருளாதார ரீதியாக பின்தங்கிய மக்களுக்கு நிதி பாதுகாப்பை வழங்கும் நோக்கில் இந்திய அரசால் அறிமுகப்படுத்தப்பட்ட ஒரு மகத்தான திட்டம் நான் "அடல் பென்ஷன் யோஜனா". இந்த திட்டத்தின் மூலம் 60 வயதிற்கு பிறகு மாதாந்திர ஓய்வூதியத்தைப் பெற முடியும்.
அடல் பென்ஷன் யோஜனா தனி நபர்களுக்கு ஓய்வூதியத்தை வழங்கும் நோக்கில் கொண்டுவரப்பட்ட திட்டம் ஆகும். 2015-ஆம் ஆண்டு அருண் ஜெட்லி நிதியமைச்சராக இருந்தபோது அறிமுகம் செய்யப்பட்ட அடல் பென்ஷன் யோஜனா திட்டத்தில்.. பணியில் இருக்கும் போது குறிப்பிட்ட அளவு தொகையை முதலீடு செய்ய வேண்டும். இதன் மூலம் ஒருவர் 60 வயதை கடந்த பிறகு மாதா மாதம் ஓய்வூதியம் பெறலாம்.

யார் யார் முதலீடு செய்ய முடியும்?: 18 வயது முதல் 40 வயது வரை உள்ள இந்திய குடிமக்கள் யார் வேண்டுமானாலும் இந்தத் திட்டத்தில் முதலீடு செய்யலாம். தபால் அலுவலகங்கள், வங்கிகள் என எங்கு வேண்டுமானாலும் அடல் பென்ஷன் யோஜனா திட்ட கணக்கைத் தொடங்க முடியும்.
முன்பெல்லாம் அரசுப் பணியில் உள்ளவர்களுக்கு தான் இந்த திட்டத்தில் முன்னுரிமை அளிக்கப்பட்டது. ஆனால் தற்போது அரசு வேலைகளில் இல்லாமல் பிற வேலைகளில் பணி புரியும் ஊழியர்களும் இதற்கு விண்ணப்பிக்கும் வசதியை அரசு கொண்டுவந்துள்ளது.
எவ்வளவு ஓய்வூதியம் கிடைக்கும்?: அடல் பென்ஷன் யோஜனா திட்டத்தின் மூலம் எவ்வளவு ஓய்வூதியம் கிடைக்கும் என்பது உங்களுடைய வயது மற்றும் நீங்கள் செய்த முதலீட்டைப் பொறுத்தது. இந்த திட்டத்தின் மூலம் நீங்கள் செய்யும் பங்களிப்பை பொருத்து 1,000 ரூபாய் முதல் 5000 ரூபாய் வரையில் ஓய்வூதியம் பெற முடியும்.
அடல் பென்ஷன் யோஜனா திட்டத்தில் நீங்கள் 18 வயதாக இருக்கும் போது மாதா மாதம் ரூ.210 முதலீடு செய்கிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். அப்படியானால் உங்களுடைய 60-வது வயதில் மாதாந்திர ஓய்வூதியமாக 5000 ரூபாய் பெறலாம். கீழ்காணும் அட்டவணையை பார்த்தால் உங்களுக்கு தெளிவாக புரியும். உங்கள் வயது மற்றும் நீங்கள் முதலீடு செய்யும் மாதம் ஆகியவற்றையெல்லாம் பொருத்துதான் ஓய்வூதியத் தொகை தீர்மானிக்கப்படும்.
நீங்கள் 2000 ரூபாய் பென்ஷன் பெரும் வகையில் முதலீடு செய்கிறீர்கள்.. ஆனால் திடீரென 5000 ரூபாய் பென்ஷன் பெற வேண்டும் என்று நினைக்கிறீர்கள். அப்படியானால் உங்களுடைய பங்களிப்பை அதிகரித்தும் முதலீடு செய்ய முடியும். ஆனால் இதை நீங்கள் ஒவ்வொரு நிதியாண்டும் ஒரு முறை மட்டுமே செய்ய முடியும். 60 வயதை அடைவதற்குள் உங்கள் முதலீட்டை அதிகரிக்கலாம் அல்லது குறைக்கலாம்.
அடல் பென்ஷன் யோஜனா திட்டத்தின் கீழ் ரூ. 1,000, ரூ. 2,000, ரூ. 3,000, ரூ. 4,000, மற்றும் ரூ. 5,000 வரை பென்ஷன் பெற முடியும். இதற்கான குறைந்தபட்ச முதலீடும் மிகவும் குறைவுதான். சாமானியர்களும் பலன் பெற வேண்டும் என்பதற்காகத்தான் இந்த திட்டத்தின் கீழ் குறைந்தபட்ச முதலீட்டுத் தொகை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ரூ. 1,000 பென்ஷன் பெற மாதம் 42 ரூபாய் முதல் முதலீடு செய்ய முடியும். ஓய்வு காலத்தில் நிதி ரீதியாக சுதந்திரமாக வாழ்வதற்கு பொதுமக்கள் இது போன்ற திட்டங்களை பயன்படுத்திக் கொள்ளலாம்.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!



Click it and Unblock the Notifications