பொது வருங்கால வைப்பு நிதி (PPF) என்பது அரசாங்கத்தால் வழங்கப்படும் உத்தரவாதமான வருமானத்தை வழங்கும் ஒரு முதலீட்டு திட்டம் ஆகும். PPF மிகவும் பாதுகாப்பான முதலீட்டு திட்டங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. இது ஓய்வூதிய திட்டமிடல் மற்றும் நீண்ட கால நிதி நோக்கங்களான உங்கள் குழந்தையின் திருமணம், கல்வி செலவுகள் என பலவற்றையும் அடைவதற்கு ஏற்ற ஒரு திட்டமாக செயல்பட்டு வருகிறது. ஒருவர் PPF திட்டத்தில் முதலீடு செய்வதன் மூலம் எப்படி பணக்காரர் ஆகலாம்? என்பதை இந்தப் பதிவில் பார்ப்போம்.
PPF திட்டத்தின் வட்டி விகிதம்: பொது வருங்கால வைப்பு நிதிக்கான வட்டி விகிதம் நிதி அமைச்சகத்தால் காலாண்டுக்கு ஒரு முறை மாற்றி அமைக்கப்படுகிறது. எனவே இந்த அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான காலாண்டுக்கு கடந்த காலாண்டில் வழங்கப்பட்ட அதே வட்டி விகிதமான 7.1 சதவீதம் மாறாமல் இருக்கும் என்று நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.

வட்டி எப்படி செலுத்தப்படும்?: PPF திட்டத்திற்கான வட்டி உங்கள் PPF கணக்கில் மாதத்தின் 5-வது நாளிலிருந்து மாதத்தின் இறுதி நாட்கள் வரையில் இருக்கும் குறைந்த பேலன்ஸின் அடிப்படையில் உங்கள் கணக்கில் வரவு வைக்கப்படும்.
முதிர்வுக் காலம்: PPF திட்டத்தின் முதிர்வு காலம் அது தொடங்கப்பட்ட ஆண்டிலிருந்து 15 ஆண்டுகளாகும். முதிர்வுக் காலம் முடிந்த பிறகு முதலீட்டாளர்களுக்கு 2 விருப்பங்கள் வழங்கப்படுகிறது. முதல் விருப்பம் கணக்கை மூடிவிட்டு அதற்கான படிவத்தை சமர்ப்பித்து, பாஸ்புக்கையும் சமர்ப்பித்து பணத்தைப் பெற்றுக் கொள்ளலாம்.
இரண்டாவது முறை வைப்புத் தொகை முதிர்ச்சி அடையும் ஒரு ஆண்டுக்கு முன்னதாக விவரங்களைத் தெரிவித்து PPF திட்டத்தினை மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டித்துக் கொள்ளலாம்.
PPF திட்டத்தில் 15 ஆண்டுகளுக்குப் பிறகு எவ்வளவு வருமானம் கிடைக்கும்?: PPF திட்டத்தில் குறைந்தபட்சமாக ரூ.500 முதல் முதலீடு செய்யலாம். அதிகபட்சமாக ஒரு நிதியாண்டுக்கு ரூ.1.5 லட்சம் ரூபாய் வரை முதலீடு செய்யலாம்.
15 ஆண்டுகளுக்கு ரூ.1.5 லட்சத்தை முதலீடு செய்தால் எவ்வளவு லாபம் கிடைக்கும்?: ஒரு நபர் PPF திட்டத்தில் ஒரு நிதியாண்டுக்கு ரூ.1.5 லட்சத்தை தொடர்ந்து முதலீடு செய்து வந்தால் 7.1% வட்டி விகிதத்தில் 15 ஆண்டுகளுக்குப் பிறகு 22,50,000 ரூபாய் முதலீடு செய்திருப்பார். அப்படியானால் 15 ஆண்டுகளுக்குப் பிறகு அவருடைய மொத்த கார்ப்பஸ் 40,68,209 ரூபாயாக அதிகரித்திருக்கும். இதில் வட்டி மட்டும் 18,18,209 ரூபாய் ஆகும்.
அதன் பிறகு மேலும் உங்களுடைய PPF கணக்கை 5 ஆண்டுகளுக்கு நீட்டிக்க விருப்பம் உள்ளது. அப்படி நீட்டித்தால் மொத்தமாக 66,58,258 ரூபாயை பெற்றுக் கொள்ளலாம். இதில் வட்டியாக மட்டும் 36,58,688 ரூபாய் கிடைக்கும்.
PPF வரி நன்மைகள்: PPF-இல் முதலீடு செய்வதன் முக்கிய நன்மைகளில் ஒன்று அதற்கு வழங்கும் வரிச் சலுகைகள். PPF கணக்கில் செய்யப்படும் டெபாசிட்கள் வருமான வரிச் சட்டத்தின் 80C பிரிவின் கீழ் விலக்குகளுக்குத் தகுதிபெறும். கூடுதலாக, சம்பாதித்த வட்டி மற்றும் முதிர்வுத் தொகைக்கு வரி இல்லை.
PPF கணக்கிலிருந்து திரும்பப் பெறுதல்: நீங்கள் உங்கள் PPF கணக்கைத் தொடங்கிய நிதியாண்டின் முடிவில் இருந்து குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் கடந்துவிட்டால், நீங்கள் ஒரு நிதியாண்டில் ஒருமுறை பணம் எடுக்கலாம்.
More From GoodReturns

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!



Click it and Unblock the Notifications