2 ஆண்டுகளில் ரூ.12.2 லட்சம் கடனை சுலபமாக அடைத்த நபர்.. Debt Snowball முறையை எப்படி பயன்படுத்துவது..?

நமது நிதி வாழ்கையில் கடன் சுமை அதிகமானால், மன அழுத்தமும் அதிகரிக்கும். இதனால், சிலர் விபரீதமான முடிவெடுத்து வாழ்க்கையையே முடித்துக் கொள்கின்றனர். ஆனால், சில நேரங்களில் சரியான திட்டமிடல், தன்னம்பிக்கை இருந்தால் கடன்களை விரைவாகவும், முறையாகவும் முடிக்க முடியும். அந்த வகையில், சமீபத்தில் ஒரு ரெடிட் பயனர், நிதி மேலாண்மை முறையை பயன்படுத்தி ரூ.12.2 லட்சம் கடனை இரண்டு ஆண்டுகளில் செலுத்தியுள்ளார்.

இவர், பல்வேறு கடன் தரும் நிறுவனங்களிடம் இருந்தும் Buy Now Pay Later என்ற பிளாட்பாரங்களில் இருந்தும் கடன் பெற்றுள்ளார். அவர் பட்டியலிட்ட கடன்களில், சிறிய தொகையான ரூ.7,500 முதல், பெரிய தொகையான ரூ.3.8 லட்சம் மற்றும் ரூ.2.59 லட்சம் உள்ளிட்ட தனிப்பட்ட கடன்கள் இருந்தன. மொத்தமாக அவர் அடைத்த கடன் ரூ.12.22 லட்சம் ஆகும். இந்த கடன்களை அவர் நிதி மேலாண்மை முறையை பின்பற்றி அடைத்துள்ளார்.

2 ஆண்டுகளில் ரூ.12.2 லட்சம் கடனை சுலபமாக அடைத்த நபர்.. Debt Snowball முறையை எப்படி பயன்படுத்துவது..?

அவர் வெளியிட்டுள்ள பதிவில், குறைந்த தொகைகளில் இருந்து துவங்கி, அதை சரியாக திட்டமிட்டு பெரிய கடன்களை எப்படி அடைத்தார் என்பது குறித்து விரிவாக பகிர்ந்துள்ளார். இது அவரது மன அழுத்தத்தைக் குறைத்து, பொருளாதார சிக்கலில் இருந்து மீள உதவியதாக குறிப்பிட்டுள்ளார்.

கடன் கொடுத்த நிறுவனங்கள் : Slice - ரூ.2,74,000, Sampati - ரூ.40,000, Mobikwik - ரூ.75,000, Ring - ரூ.25,000, PayTM Postpaid - ரூ.50,000, mPokket - ரூ.22,000, ICICI PayLater - ரூ.7,500, CRED - ரூ.2,59,000, Bajaj Finance - ரூ.3,28,000, Ola Postpaid - ரூ.9,500, ICICI Personal Loan - ரூ.1,30,000 ஆகிய நிறுவனங்களில் மொத்தம் ரூ.12,22,000 கடன் வாங்கியுள்ளார்.

டெட் ஸ்னோபால் முறை என்றால் என்ன..?: டெப்ட் ஸ்னோபால் (Debt Snowball) என்பது கடனைச் செலுத்தும் ஒரு நிதி மேலாண்மை முறை ஆகும். இதில், முதலில் அதிக வட்டியுள்ள கடனை அடைப்பதற்கு பதில், குறைந்த தொகை கொண்ட கடனைத் தான் முதலில் அடைக்கிறோம். முதலில் நீங்கள் வாங்கிய அனைத்து கடன்களையும் பட்டியலிட வேண்டும். அதில், குறைந்த தொகை முதல் அதிக தொகை வரையுள்ள கடன்களை வரிசைப்படுத்த வேண்டும். (உதா: ரூ.5,000, ரூ.20,000, ரூ.1,00,000). உங்கள் எல்லா கடன்களுக்கும் அவசியமான குறைந்தபட்ச மாத கட்டணத்தை (EMI) கட்டிக்கொண்டு வாருங்கள்.

பட்டியலில் முதல் சிறிய கடனை விரைவில் முடிக்க, அதற்கான EMI-யுடன் மேலும் சற்றே அதிகமாக பணம் செலுத்துங்கள். (உதா: EMI ரூ.500 என்றால், ரூ.1,000 வரை செலுத்துங்கள்). கடன் A முடிந்ததும், அதன் EMI ரூ.500 + தற்போதைய கடன் B இ.எம்.ஐ. ரூ.1,000 என மொத்தம் ரூ.1,500-ஐ அடுத்த கடனில் செலுத்தி, அதை வேகமாக முடிக்க பாருங்கள். ஒவ்வொரு கடனும் முடியும் போது, அதன் இ.எம்.ஐ. தொகையை அடுத்த கடனில் சேர்த்து கட்டுங்கள். இதனால், கடன்கள் வேகமாக குறையும்.

மேலும், அந்த பயனர் கூறுகையில், "என்னுடைய அனைத்து கடன்களையும் சிறியவை முதல் பெரியவை வரை பட்டியலிட்டு வைத்தேன். இவை அனைத்திற்கும் குறைந்தபட்ச கட்டணங்களை மட்டுமே கட்டினேன். ஆனால், சிறிய கடனுக்கு கிடைக்கும் கூடுதல் பணத்தை முழுமையாக செலவிட்டேன்" என்று தெரிவித்துள்ளார். மேலும், "ஒரு கடனை முடித்துவிட்டதும், அதற்கான EMI தொகையை அடுத்த கடனுக்கு சேர்த்து கட்ட ஆரம்பித்தேன். நான் முழுமையாக கிரெடிட் கார்டுகளையும் Buy Now Pay Later சேவைகளையும் பயன்படுத்துவதை நிறுத்திவிட்டேன். என்னுடைய செலவுகளை கூகுள் ஷீட்டில் பதிவு செய்து, தொடர்ந்து கண்காணித்தேன். இதனால் எனக்கு ஊக்கம் கிடைத்தது" என்று பதிவிட்டுள்ளார்.

இவரின் பதிவுக்கு பயனர் ஒருவர் கேள்வி எழுப்பினார். அதாவது, "நீங்கள் இ.எம்.ஐ. தொகையை தாமதமாக செலுத்தியுள்ளீர்களா..? உங்கள் CIBIL மதிப்பெண் எப்படி மாற்றம் கண்டது..? குறைந்தபட்ச கட்டணத்தை எப்படி நிர்வகித்தீர்கள்? தினசரி மற்றும் மாதாந்திர செலவுகளை எப்படி சமாளித்தீர்கள்?" என்று கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த அந்த நபர், "ஆம், 2023இல் வேலை இழந்ததால், சில மாதங்கள் என் கல்வி கடன் மற்றும் கார் கடனுக்கு இ.எம்.ஐ. செலுத்துவதில் தாமதம் ஏற்பட்டது.

புதிய வேலை கிடைத்ததும் தாமதமாக இருந்த பணத்தை உடனடியாகத் திருப்பிச் செலுத்த முடியவில்லை. எனவே, சிபில் ஸ்கோரில் 0 முதல் 30 நாட்கள் மற்றும் 30 முதல் 60 நாட்கள் தாமதங்கள் ஒரு வருடமாக காட்டப்படுகிறது. இதுவே என்னை சிறிய கடன்களை உடனே முடித்து, Debt Snowball முறை பயன்படுத்தத் தொடங்கச் செய்தது. EMI-களை தாமதமாக செலுத்தினால், சிபில் மதிப்பெண் குறையும். ஆனால், சரியான நேரத்தில் மீண்டும் செலுத்த தொடங்கினால், அது மீண்டும் உயரும். இவ்வாறு என்னுடைய சிபில் மதிப்பெண் 40 புள்ளிகள் உயர்ந்தது.

கிரெடிட் கார்டுகள் மற்றும் BNPL-க்கு மட்டுமே குறைந்தபட்ச கட்டணங்கள் இருந்தன. மற்ற கடன்கள் EMI-ஆக இருந்தன. கல்வி கடன் மற்றும் கார் கடனில் தான் தாமதம் ஏற்பட்டது. நான் அன்றாட தேவைகளை தவிர வேறு அனைத்து செலவுகளையும் குறைத்தேன். வாடகை, அட்டவணை, மின்சாரம் மற்றும் அடிப்படை வசதிகள் மட்டுமே கட்டினேன். கடந்த இரண்டு ஆண்டுகளில் என் காரில் முழு டாங்க் மூன்று நான்கு முறை மட்டுமே நிரப்பினேன். மற்ற சமயங்களில் ரூ.500-க்கு மட்டுமே நிரப்பி சிக்கனமாக ஓட்டினேன் என்று தனது அனுபவத்தை பகிர்ந்துள்ளார்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+