நமக்கு முந்தைய தலைமுறையினர் சேமிப்புக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்தனர். இது 30 ஆண்டுகளுக்கு முன்பு வேண்டுமானால் சரியாக இருக்கலாம். ஆனால் இன்றைய பொருளாதாரத்தில், அதிகரித்து வரும் பணவீக்கம், தேவை போன்றவற்றை சமாளிக்க சேமிப்பு கை கொடுக்குமா என்றால் அதற்கு பதில் கேள்விக்குறிதான் பொதுவாக நாம் எல்லோருமே நமது குழந்தைகளின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு நமது வருமானத்தில் ஒரு பகுதியை சேமித்து வருகிறோம். பெரும்பாலான மக்கள் வங்கி அல்லது அஞ்சல சேமிப்பு திட்டங்களில் பணத்தை டெபாசிட் செய்து வருவர்.
குறிப்பிட்ட ஆண்டுகளுக்கு பிறகு நாம் அதை எடுக்கும் போது கூடுதலாக வட்டி வருமானமும் கிடைக்கும். அசல் தொகையை விட கூடுதலாக பணம் கிடைப்பதால் சந்தோஷம் அடைகிறார்கள். ஆனால் பணவீக்கத்துடன் ஒப்பிடும்போது, அந்த வட்டி வருமானம் மிகவும் குறைவாகவே இருக்கும். அதனால் பணத்தை சேமிக்கும் பழக்கத்தை இன்றோடு விட்டு விடுங்கள். அதற்கு பதிலாக பணத்தை ஸ்மார்ட்டாக முதலீடு செய்ய ஆரம்பியுங்கள்.

பணத்தை முதலீடு செய்தால் அது நமக்கு நல்ல ஆதாயம் தரும். பங்குச் சந்தை, மியூச்சுவல் பண்ட் போன்றவற்றில் முதலீடு செய்யுங்க. பங்குச் சந்தையில் நேரடியாக முதலீடு செய்வதை காட்டிலும் மியூச்சுவல் பண்டுகள் மூலம் முதலீடு செய்வது சிறந்தது. குறுகிய கால அடிப்படையில் முதலீடு செய்வதற்கு பதிலாக நீண்ட கால அடிப்படையில் முதலீடு செய்வது நல்லது. ஏனென்றால் பங்குச் சந்தைகளில் ஏற்ற இறக்கம் என்பது சாதாரணமானது.
எனவே எஸ்பிஐ வாயிலாக தொடர்ந்து முதலீடு செய்து வந்தால் நீண்ட கால அடிப்படையில் முதலீடு செய்தால், குறுகிய கால ஏற்ற இறக்கம் குறித்து நாம் எப்போதும் பயப்படதேவையில்லை. எவ்வளவு சீக்கிரம் முதலீடு செய்ய தொடங்கிறமோ அவ்வளவு சீக்கிரம் நாம் நமது நிதி இலக்கை விரைவாக எட்ட முடியும். எனவே முதலீடு செய்ய தொடங்குகள். குறிப்பாக எஸ்ஐபி முதலீடுகள் மூலம் உங்கள் குழந்தையின் நிதி எதிர்காலத்தை பாதுகாக்க சீக்கிரமாக தொடங்குகள்.
15 ஆண்டுகளுக்கு 12 சதவீதம் வருமானத்துடன் மாதந்தோறும் ரூ.10,000 முதலீடு செய்வதன் மூலம் நீங்கள் ரூ.1 கோடி திரட்டலாம். இதற்கு நிலைத்தன்மையும் ஆரம்ப திட்டமிடலும் முக்கியம். இதற்கு மூன்று படிகளை பின்பற்ற வேண்டும். சீக்கிரமாக தொடங்குகள், புத்திசாலித்தனமாக முதலீடு செய்யுங்கள் மற்றும் உங்கள் குழந்தையின் எதிர்காலத்தை பாதுகாப்பானதாக மாற்ற தொடர்ந்து உறுதியாக இருங்கள். பணத்தை சேமிப்பதை காட்டிலும் முதலீடு செய்வதுதான் எப்போதும் சிறந்தது என்பதை மறந்து விடாதீங்க.
Disclaimer: This article is strictly for informational purposes only. It is not a solicitation to buy, sell in precious metal products, commodities, securities or other financial instruments. Greynium Information Technologies Pvt Ltd, its subsidiaries, associates and the author of this article do not accept culpability for losses and/or damages arising based on information in this article.
More From GoodReturns

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!



Click it and Unblock the Notifications