Home loan வாங்க போறீங்களா? வெயிட்.. முதல்ல ஹைபிரிட் லோன் பத்தி தெரிஞ்சுகோங்க..!!

இந்தியாவில் கோடிக்கணக்கான மக்களின் சொந்த வீடு கனவை நனவாக்க வங்கிகள் வழங்கும் வீட்டு கடன்களே கைகொடுக்கின்றன. இவ்வாறு வீட்டு கடன் பெற திட்டமிடுபவர்கள் அனைவரும் எதிர்கொள்ளும் மிகப்பெரிய குழப்பம், கடன் வட்டி விகிதத்தை நிலையானதாக இருக்கும் Fixed Rate முறையை தேர்ந்தெடுப்பதா அல்லது மாறிவரும் விகிதமுள்ள Floating Rate முறையை தேர்ந்தெடுப்பதா என்பதுதான். இந்த குழப்பத்திற்கு ஒரு சிறந்த தீர்வாக வந்துள்ளது ஹைப்ரிட் ஹோம் லோன் (Hybrid Home Loan).

ஹைப்ரிட் ஹோம் லோன் என்பது நிலையான வட்டி விகிதம் மற்றும் மிதக்கும் வட்டி விகிதம் ஆகிய இரண்டின் சிறப்பம்சங்களையும் ஒரே கடனில் இணைத்து வழங்கும் ஒரு வகை கடன். வீட்டு கடன் வாங்குபவர்கள் இதன் மூலம் ஒரே நேரத்தில் இரண்டு நன்மைகளையும் பெற முடியும். அதாவது, சந்தையின் நிலவரத்திற்கு ஏற்ப கடனின் ஒரு பகுதியை நிலையான வட்டியாகவும், மற்றொரு பகுதியை மிதக்கும் வட்டியாகவும் பிரித்து கொள்ளலாம்.

Home loan வாங்க போறீங்களா? வெயிட்.. முதல்ல ஹைபிரிட் லோன் பத்தி தெரிஞ்சுகோங்க..!!

இந்த வகையான கடனை பெறும்போது, வங்கியுடன் பேசி உங்கள் கடனின் ஒரு குறிப்பிட்ட பகுதியை எடுத்துக்காட்டாக 3 முதல் 5 ஆண்டுகளுக்கு நிலையான வட்டி விகிதத்தில் நிர்ணயம் செய்து கொள்ளலாம். இந்த காலக்கட்டத்தில் வட்டியில் என்ன மாற்றங்கள் ஏற்பட்டாலும் உங்களது இஎம்ஐ மாறாமல் ஒரே அளவில் இருக்கும்.

கடனின் மீதமுள்ள தொகைக்கு மிதக்கும் வட்டி விகிதம் பொருந்தும். சந்தை நிலவரத்திற்கு ஏற்ப இதன் வட்டி விகிதம் மேலே செல்லலாம் அல்லது குறையவும் செய்யலாம். உதாரணமாக, நீங்கள் 1 கோடி ரூபாய்க்கு கடன் வாங்குகிறீர்கள் என்றால், அதில் 50 சதவீதத்தை நிலையான வட்டியாகவும், மீதமுள்ள 50 சதவீதத்தை மிதக்கும் வட்டியாகவும் உங்கள் வசதிக்கும், ரிஸ்க் எடுக்கும் திறனுக்கும் ஏற்ப பிரித்து கொள்ளலாம்.

Also Read

ஒரு நபர் 1 கோடி ரூபாய் வீட்டு கடன் 20 ஆண்டுகளுக்கு ஹைபிரிட் முறையில் எடுத்தால் முத;லில் நிலையான வட்டியான 7.6%இல் மாதம் தோறும் 81,030 ரூபாயை கட்டுவார். அடுத்த சில ஆண்டுகளுக்கு வட்டி விகிதமோ, இஎம் ஐ பணமோ மாறாது. இதுவே மிதக்கும் வட்டி இருந்தால் வட்டி 8.6% ஆக உயர்ந்தால் திடீரென இஎம்ஐ 87,500 ரூபாயாக மாறிவிடும். ஹைபிரிட் முறையில் முதல் சில ஆண்டுகளுக்கு வட்டியும் மாறாது இஎம் ஐ பணமும் மாறாது.

வேலைக்கு சேர்ந்து சில ஆண்டுகள் மட்டுமே ஆனவர்கள் அல்லது குறைந்த வருமானம் ஈட்டுபவர்கள், திடீரென இஎம்ஐ உயர்ந்தால் அதை சமாளிக்க சிரமப்படுவார்கள். அவர்கள் இவ்வகை கடனை தேர்வு செய்யலாம். இவர்களுக்கு இந்த ஹைப்ரிட் லோன் ஆரம்ப காலத்தில் நிலையான இஎம்ஐ மூலம் பெரும் பாதுகாப்பை அளிக்கிறது. தொடக்கத்தில் நிலையான இஎம்ஐ மூலம் நிம்மதியாக இருக்கும் நபர்கள், பிற்காலத்தில் தங்களது சம்பளம் அல்லது வருமானம் உயரும்போது மிதக்கும் வட்டி விகிதத்தால் ஏற்படும் கூடுதல் சுமையை எளிதில் சமாளிக்க முடியும்.

Recommended For You

சில வங்கிகள் வட்டி விகிதங்கள் குறையும் போது மிதக்கும் வட்டி விகித பிரிவில் இருக்கும் கடன் தொகைக்கு அபராதமின்றி முன்கூட்டியே பணம் கட்டும் வசதியை அளிக்கின்றன. ஆனால் ஹைபிரிட் வீட்டு கடனில் ஒரு சிக்கல் உள்ளது. தொடக்கத்தில் நிலையான இஎம்ஐ இருந்தாலும், பின்னர் மிதக்கும் வட்டிக்கு மாறும் போது, வட்டி விகிதங்கள் கணிசமாக உயரும் போது இஎம்ஐ திடீரென உயர வாய்ப்புள்ளது. குறைந்திருந்தால் நல்லது நம் இஎம்ஐ குறையும். எனவே, உங்களது நிதி நிலைத்தன்மையை முழுமையாக ஆராய்ந்த பின் இத்தகைய கடன்களை தேர்ந்தெடுப்பது புத்திசாலித்தனம்.

Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் "நாங்கள்" என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+