30 வருடம் கழித்து மாதம் ரூ.3 லட்சம் வருமானம் வேண்டும்.. SIP-யில் எவ்வளவு முதலீடு செய்யணும்..!

இன்றைய காலகட்டத்தில் உங்களது நிதி இலக்கினை அடைய, சிஸ்டமேடிக் இன்வெஸ்ட்மெண்ட் பிளான் எனப்படும் SIPக்கள் தான் சிறந்த ஆப்சனாக பார்க்கப்படுகிறது.

பொதுவாக பல நிபுணர்களும் முதலீடு என்றாலே பரிந்துரைப்பது இதனைத் தான்.

இது மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடுசெய்யும் ஒரு சிறந்த ஆப்சன். அதோடு சிறிய முதலீட்டாளார்கள் முதல் கொண்டு, மிகப்பெரிய முதலீட்டாளார்கள் வரையில், தங்களது கார்ப்பஸ் இலக்கினை அடைய முக்கிய அம்சமாக பார்க்கப்படுகிறது.

இது சிறந்த முதலீடு

இது சிறந்த முதலீடு

அதிலும் இது உங்களின் இலக்கிற்கு ஏற்ப குறுகிய காலம், நடுத்தர காலம், நீண்டகால முதலீடு என உங்களின் தேவைக்கு ஏற்ப முதலீடு செய்து கொள்ளலாம். அதிலும் பங்கு சந்தை முதலீடுகளுக்கு சிறந்த மாற்றாக பார்க்கப்படும்போது, மியூச்சுவல் ஃபண்டுகளில் எஸ் ஐ பிக்கள் சிறந்த முதலீட்டு திட்டங்கள் எனலாம்.

 இது சிறந்த அம்சங்கள்

இது சிறந்த அம்சங்கள்

அதிலும் கடன் சந்தை, பங்கு சந்தை, ஹைபிரிட் ஃபண்டுகள், தங்கம் என பல அம்சங்களிலும் முதலீடு செய்து கொள்ளலாம். இன்னொன்று இதில் கால நேரம் அவசியமில்லை. இப்போது தான் வாங்க வேண்டும். இப்போது தான் வெளியற வேண்டும் என்ற கட்டாயம் கிடையாது. ஆக மொத்தத்தில் எஸ் பி ஐக்கள் என்பது மிகச்சிறந்த முதலீட்டு ஆப்சன் எனலாம்.

ரிஸ்க் இல்லா ஃப்ண்டுகளும் உண்டு

ரிஸ்க் இல்லா ஃப்ண்டுகளும் உண்டு

பொதுவாக மிகப்பெரிய கார்ப்பஸினை அடைய முதலீட்டாளர்கள், நிபுணர்கள் தேர்தெடுக்கும் ஒரு ஆப்சன் இந்த எஸ்.ஐ.பிக்கள் தான். ஏனெனில் இதில் பங்கு சந்தையின் தாக்கம் இருந்தாலும், ரிஸ்க் இல்லாத ஃபண்டுகளும் இருக்கத்தான் செய்கின்றன. ஆக யாருக்கு என்ன ஃபண்ட் ஏற்றது? எந்தளவு கார்பஸ் இலக்கு? எவ்வளவு முதலீடு செய்ய வேண்டும் என்பதை பற்றி தான் பார்க்க இருக்கிறோம்.

 

அதிகரிக்கும் பணவீக்கம்

அதிகரிக்கும் பணவீக்கம்

அதிலும் நாளுக்கு நாள் பணவீக்கம் என்பது தொடர்ந்து அதிகரித்து கொண்டு செல்லும் நிலையில், உங்கள் முதலீடு என்பது அதற்கேற்ப அதிகரிக்கப்பட வேண்டும். இன்று நடுத்தர மக்களுக்கு மாதம் 40,000 ரூபாய் முதல் 45,000 ரூபாய் வரையில் தேவைப்படுகிறது என வைத்துக் கொள்வோம். இன்னும் 30 வருடங்கள் கழித்து உங்கள் கையில் மாதம் 3 லட்சம் ரூபாய் வரையில் தேவைப்படலாம்.

தோராய வருமானம்?

தோராய வருமானம்?

ஆக உங்களுக்கு மாதம் 3 லட்சம் ரூபாய் வருமானம் என்பதை மனதில் வைத்துக் கொள்ள வேண்டும். இந்த இலக்கினை அடைய சிறந்த வழி எஸ்.ஐ.பி தான். அதெல்லாம் சரி ஓய்வூகாலத்தில் அடுத்த 25 வருடத்திற்கு மாதம் 3 லட்சம் ரூபாய் தேவை எனில், அதற்காக நான் எவ்வளவு முதலீட்டினை செய்ய வேண்டும்.

லாப விகிதம்

லாப விகிதம்

உங்களுக்கு 8% லாபம் கிடைக்கிறது என வைத்துக் கொண்டால்,நீங்கள் 7.2 கோடி ரூபாய் முதலீடு செய்ய வேண்டியிருக்கும். அதாவது உங்களது வருடாந்திர பணவீக்கம் 6% என வைத்துக் கொண்டால், அதனை விட 2% அதிகமாக முதலீடு செய்ய வேண்டும்.

எப்போது முதலீடு?

எப்போது முதலீடு?

ஒரு நபர் 30 வயதில் எஸ்.ஐ.பி முதலீடு செய்ய ஆரம்பிக்கிறார் என்று வைத்துக் கொள்வோம். அவர் 30 ஆண்டுகள் முதலீடு செய்வார். அதோடு முதலீட்டாளர் தனது வருமானம் அதிகரிக்கும் போது, முதலீட்டினையும் அதிகரித்தால் முதலீட்டு தொகை அதிகரிக்கும். இதன் மூலம் அவரின் கார்பஸினை எளிதில் அடைய முடியும்.

எவ்வளவு முதலீடு?

எவ்வளவு முதலீடு?

ஒரு முதலீட்டாளார் தனது மாதாந்திர முதலீட்டினை வருடத்திற்கு 10% அதிகரித்தால், ஆரம்பத்தில் மாதாந்திர எஸ்.ஐ.பி மிக குறைவாக இருக்கும் என்பதால் முதலீட்டாளர்கள் தனது இலக்கினை எளிதில் எட்டலாம். ஆரம்பத்தில் முதலீட்டாளர் மாதம் 12,000 ரூபாய் முதலீடு செய்கிறார் என வைத்துக் கொள்வோம்.

வருமானம் எவ்வளவு?

வருமானம் எவ்வளவு?

30 வருடத்திற்கு பிறகு அவரின் மொத்த முதலீடு 2,36,87,139 ரூபாயாக இருக்கும். வருமானம் 7,24,63,661 ரூபாயாக இருக்கும். வருட வருமான விகிதம் 12% ஆகும். மொத்த முதிர்வு தொகையானது 9,61,50,800 ரூபாயாகும்.

எந்த ஃபண்டில் செய்யலாம்

எந்த ஃபண்டில் செய்யலாம்

பல வகையான ஃபண்டுகள் உள்ளன. அதில் உங்களது ரிஸ்க் விகிதம், முதலீட்டு தொகை, முதலீட்டு காலம், இலக்கு என்ன என்பதை தீர்மானித்துக் கொண்டு, அதற்கேற்ப நிபுணர்களிடம் கலந்து ஆலோசித்து முதலீடு செய்யலாம்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+