25 ஆண்டுகளில் ரூ.5 கோடி சேமிக்க வேண்டும்.. எதில் முதலீடு செய்யலாம்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இன்றைய நெருக்கடியான காலகட்டங்களில் சேமிப்பின் அருமை என்னவென்று பலரும் தெரிந்து கொண்டிருப்போம். மிகப்பெரிய அளவில் சேமிப்பு என்பது இல்லாவிட்டாலும், இன்றைய காலகட்டத்தில் குழந்தைகளின் எதிர்காலம், திருமணம், கல்விக்காக சேமிக்க வேண்டிய கட்டாயம் உள்ளது.

தற்போது சேமிப்பின் அவசியம் புரிந்திருந்தாலும், சேமிப்புக்கான தொகையை ஒதுக்க முடியாத சூழல் உள்ளது. எப்படியிருப்பினும் அனாவசிய செலவுகளை தவிர்த்து, குழந்தைகளின் எதிர்காலத்திற்காக கட்டாயம் செய்யப்பட வேண்டும்.

 ஜியோ உடன் போட்டிப்போட ஏர்டெல் புதிய திட்டம்.. மாபெரும் மறுசீரமைப்பு நடவடிக்கை..! ஜியோ உடன் போட்டிப்போட ஏர்டெல் புதிய திட்டம்.. மாபெரும் மறுசீரமைப்பு நடவடிக்கை..!

சேமிப்பு என்பது வேறு, முதலீடு என்பது வேறு. ஏனெனில் சேமிப்பு என்பது உங்களிடம் இருக்கும் சிறிய பணத்தை பாதுகாப்பான மற்றும் அணுக தயாராக இருக்கும் இடத்தில் வைப்பது. இதே முதலீடு என்பது நீங்கள் சேமிக்க கூடிய பணத்தினை பெருக்கும் திறன் கொண்டது. அந்த வகையில் நாம் இன்று பார்க்கவிருப்பது முதலீட்டு திட்டங்கள் பற்றித் தான்.

தற்போதைய முதலீடு

தற்போதைய முதலீடு

30 வயதான ஒரு நபர், மாதம் 5000 ரூபாய் கீழ்கண்ட ஃபண்டுகளில் முதலீடு செய்து வருகிறார். அதில் mirae asset tax savings fund, HDFC india sensex plan, invesco india contra fund, kotak flexi cap, SBI bluchip fund, parag parikh flexi cap உள்ளிட்ட ஃபண்டுகளில் முதலீடு செய்து வருகிறார். அவர் 25 ஆண்டுகளில் 5 கோடி ரூபாய் சேமிக்க வேண்டும் என இலக்கு வைத்துள்ளார். ஆக அதற்கு இந்த முதலீடு போதுமானதா? எதுவும் மாற்றம் செய்ய வேண்டுமா? என கேட்டுள்ளார்.

நிபுணர்கள் என்ன சொல்கின்றனர்?

நிபுணர்கள் என்ன சொல்கின்றனர்?

இதற்கு பதிலளித்த நிபுணர்கள் இந்த நிதி இலக்குக்கு மியூச்சுவல் ஃபண்டுகள் என்பது சரியான சாய்ஸ் தான். எனினும் நீங்கள் எஸ்பிஐ ப்ளூசிப்பிலிருந்து, சென்செக்ஸ் குறியீட்டு நிதிக்கு மாறலாம். இதில் நீண்டகால இடைவெளியில் 10% வருமானம் கிடைக்கலாம். அப்படி பார்த்தாலும் உங்கள் இலக்கை அடைய, இன்னும் முதலீட்டினை படிப்படியாக அதிகரிக்க வேண்டும் என கூறியுள்ளனர்.

நிபுணர்களின் பரிந்துரை

நிபுணர்களின் பரிந்துரை

அதோடு நீங்கள் பிபிஎஃப் அல்லது இபிஎஃப் பங்களிப்பினை செய்யலாம். இது உங்களது இலக்கினை அடைய வழிவகுக்கும். அப்படி இல்லையில் டெப்ட் ஃபண்டில் முதலீடு செய்யலாம். அப்படி இல்லை என்றாலும் கூட குறுகிய கால நோக்கில் குறுகிய கால மற்றும் கார்ப்பரேட் பத்திர முதலீட்டினை பற்றி யோசிக்கலாம். இதுவும் உங்கள் போர்ட்போலியோவில் இருக்கலாம் என பரிந்துரை செய்துள்ளனர்.

3 கோடி தேவை?

3 கோடி தேவை?

இதே மற்றொருவர் எனக்கு 45 வயதாகிறது? எனக்கு 12 வயது பெண் குழந்தை உள்ளது. நான் எஸ்ஐபியில் மாதம் 2000 ரூபாய் முதலீடு செய்கிறேன். இது adithya birla frontline equity fund, hdfc equity fund உள்ளிட்டவற்றில் முதலீடு செய்து வருகிறேன். அதோடு சுகன்யா சம்ரிதி திட்டத்தில் மாதம் 6000 ரூபாய் முதலீடு செய்கிறேன். அதோடு என் மனைவியின் பிபிஎஃப் கணக்கு மூலம் மாதம் 6000 ரூபாய் கடந்த 10 ஆண்டுகளாக டெபாசிட் செய்து வருகிறேன். எனது குழந்தையின் பிபிஎஃப் கணக்கு மற்றும் எனது பிபிஎஃப் கணக்குகளில் டெபாசிட் செய்து வருகின்றேன். எனது குழந்தையின் கல்வி மற்றும் திருமணத்திற்காக 1.5 கோடி ரூபாய் சேமிக்க வேண்டும். அதோடு எனது ஓய்வுகாலத்திற்காக 1.5 கோடி ரூபாய் சேமிக்க வேண்டும். ஆக எனக்கு ஏற்ற மியூச்சுவல் ஃபண்டினை பரிந்துரைக்கவும் என கேட்டுள்ளார்.

கல்விக்கான நிதி

கல்விக்கான நிதி

இதற்கு பதிலளித்த நிபுணர்கள், அடுத்த 6- 8 ஆண்டுகளில் உங்கள் மகளின் கல்விக்கு சுமார் 80 லட்சம் ரூபாய் தேவைப்படும் என வைத்துக் கொள்வோம். அதற்கு உங்களுடைய மற்றும் உங்கள் மனைவியுடைய பிபிஎஃப் தொகையை பயன்படுத்தலாம். இந்த கணக்குகளின் மூல, அடுத்த 5 - 6 ஆண்டுகளில் 50 லட்சம் ரூபாயினை ஈட்ட முடியும். தேவைப்பட்டால், சுகன்யா சம்ரிதி திட்டத்தில் இருந்து பெற்றுக் கொள்ளலாம்.

ஓய்வுகாலத்திற்கான முதலீடு

ஓய்வுகாலத்திற்கான முதலீடு

இதே உங்கள் ஓய்வுகால பகுதிக்காக நீங்கள் ஒரு மாதத்தில் எஸ்ஐபி-யை 45,000 ரூபாயாக அதிகரிக்க வேண்டும். நீங்கள் 58 வயதாகும் வரை 11 % வருடாந்திர வளர்ச்சி விகிதம் என இருக்கலாம். இதே உங்கள் மகளின் திருமணத்திற்காக பிபிஎஃப் மற்றும் சுகன்யா சம்ரிதி திட்டங்களில் உள்ள மீத தொகை உதவும்.

இது மிக அவசியம்

இது மிக அவசியம்

உங்கள் போர்ட்போலியோவில் இரண்டு லார்ஜ் கேப் பண்டுகள் மற்றும் ஒரு பிளெக்ஸி ஃபண்டும் உள்ளது. உங்களுக்கு நிதி தேவை என்பதால் அடுத்த 6 - 7 ஆண்டுகளுக்கு தொடரலாம். எனினும் உங்கள் ஓய்வூதியத்திற்கான கூடுதல் ஒதுக்கீடு நிஃப்டி 50 இண்டெக்ஸ் ஃபண்டுடன், மிட் கேப் ஃபண்ட் இருக்கலாம். இது தவிர ஹெல்த் மற்றும் டெர்ம் இன்சூரன்ஸ் என்பது இருக்க வேண்டும் என பரிந்துரை செய்துள்ளனர்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

I want to save Rs.5 crore in 25 years, is my current investments enough?

Investment updates.. I want to save Rs.5 crore in 25 years, is my current investments enough?
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X