இன்னும் 10 ஆண்டுகளில் 50 லட்சம் கார்ப்பஸ் தொகையானது வேண்டும். மாதம் எவ்வளவு முதலீடு செய்யலாம். எதில் முதலீடு செய்வது?
தற்போதைய நிலையில் 35 வயதான ராஜா, பொது வருங்கால வைப்பு நிதி, வங்கி பிக்சட் டெபாசிட் மற்றும் தேசிய ஓய்வூதிய திட்டம் என பல திட்டங்களில் முதலீடு செய்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
எனினும் இன்னும் 10 ஆண்டுகளில் அவரின் மகள் மேல்படிப்புக்காக எனக்கு 50 லட்சம் ரூபாய் தேவைப்படுகின்றது. ஆக நான் எதில் முதலீடு செய்யலாம்? எவ்வளவு முதலீடு செய்ய வேண்டும்? எஸ்ஐபி சிறந்த ஆப்சனா? என கேட்டுள்ளார்.
எஸ் ஐ பி
மியூச்சுவல் தான் நீண்டகால நோக்கில் மிகப்பெரிய கார்ப்பஸினை அடைய சரியான ஒரு வழியாகும்,. அதிலும் எஸ் ஐ பி மூலமாக முதலீடு செய்வது சரியான வழியாக இருக்கும். ஆக நீங்கள் எஸ் ஐ பி முதலீடு செய்ய நினைப்பது சரியான ஒரு விஷயம் தான். இது 10 ஆண்டுகளில் உங்களது கார்ப்பஸினை அடைய சரியா ஒரு வழியாகவும் இருக்கும்.
கார்ப்பஸ் இலக்கு
பொதுவாக மிகப்பெரிய கார்ப்பஸ் இலக்குகளை அடைய மியூச்சுவல் ஃபண்டுகள் தான் சிறந்த வழி . ஆக நீங்கள் எஸ் ஐ பி-யில் முதலீடு செய்ய நினைப்பது சரியான திட்டம் தான். ஆக வருடத்திற்கு 12% வருமானம் என எடுத்துக் கொண்டாலும் கூட, 10 வருடம் கழித்து உங்களுக்கு தேவைப்படுகின்றது. அப்படி பார்க்கும்போது நீங்கள் மாதம் 4500 ரூபாய் முதலீடு செய்ய வேண்டியிருக்கும்.
எவ்வளவு வருவாய்
அப்படி 10 வருடங்களுக்கு மாதம் 4500 ரூபாய் முதலீடு செய்தால், நீங்கள் மொத்தம் 10,45,526 லட்சம் கார்பஸ் ஆக பெறுவீர்கள். நீங்கள் 5,40,000 ரூபாய் முதலீடு செய்திருப்பீர்கள். உங்களது வருமானம் 5,05,526 லட்சம் ரூபாயாக இருக்கும். ஆக மொத்தம் 10,45,526 உங்களது கார்ப்பஸ் ஆக இருக்கும்.
இதனையும் கவனிங்க?
எனினும் இன்று 10 லட்சம் தேவைப்படும் கல்வி செலவு, இன்னும் 10 ஆண்டுகள் கழித்து இன்னும் அதிகரிக்கலாம். ஆக உங்களது வருமானம் அதிகரிக்க, உங்களது எஸ் ஐபி யும் அதிகரிக்க வேண்டும். இதுவே அதிகரிக்கும் பணவீக்கத்திற்கு ஏற்ப உங்களது கார்ப்பஸ் இலக்கும் அதிகரிக்கும்.
பரிந்துரை என்ன?
லார்ஜ் கேப் & மிட் கேப், பிளெக்ஸி கேப் ஃபண்ட், மிட் கேப் பண்ட் உள்ளிட்ட ஃபண்டுகளை கருத்தில் கொள்ளலாம்.
குறிப்பாக கல்விக்காக எனும்போது டாடா யங்க் சிட்டிசன்ஸ் ஃபண்ட், எஸ்பிஐ மேக்னம் சில்ட்ரன்ஸ் பெனிபிட் பண்ட், ஹெச் டி எஃப் சி சில்ட்ரன்ஸ் கில்ட் ஃபண்ட், ஆக்ஸிஸ் சில்ட்ரன்ஸ் கில்ட் ஃபண்ட் உள்ளிட்டவற்றை பற்றி யோசிக்கலாம். இவற்றோடு நிரந்தர வருமானம் தரும் அஞ்சலக திட்டங்கள் பற்றியும் யோசிக்கலாம்.
*** Disclaimer:மேற்கண்ட ஃபண்டுகள் நிபுணர்கள் பரிந்துரை செய்திருந்தாலும், இறுதி முடிவினை நீங்கள் எடுப்பது சரியானதாக இருக்கும்.
More From GoodReturns

10 ஆண்டுகளில் செல்வத்தை உயர்த்துவது எது? PPF-ன் நிலையான வட்டியா அல்லது SIP-ன் சந்தை லாபமா?

துபாய் எடுத்த முடிவிலால் இந்தியாவுக்கு புது பிரச்சனை..!!

தங்கம், வெள்ளி: ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை "எஸ்கேப் ஆகிடுங்க".. மீண்டும் அடிபட்டு அழ வேண்டாம்..!

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

கத்தார், பஹ்ரைன், UAE, குவைத்தில் குண்டு மழை.. ஈரான் வைத்த டார்கெட்.. அமெரிக்காவுக்கு நெருக்கடி..!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

அடுத்த பிரச்சனை.. கத்தார் LNG உற்பத்தி முழுமையாக நிறுத்தம்.. ஸ்தம்பிக்கப்போகும் உலக நாடுகள்..!!



Click it and Unblock the Notifications