எனக்கு வயது 23 ஆகிறது. 20 வருடம் கழித்து 50 லட்சம் ரூபாயில் வீடு வாங்க வேண்டும். அதற்காக நான் எவ்வளவு முதலீடு செய்ய வேண்டும்? எதில் முதலீடு செய்யலாம்?
தற்போது மாதம் SIP மூலம் 2000 ரூபாய் முதலீடு செய்து வருகின்றேன். என் முதலீட்டினை எவ்வளவு அதிகரிக்க வேண்டும். என குட் ரிட்டர்ன் ஒருவர் கேட்டிருந்தார். இது குறித்து நிபுணர்களிடம் பேசினோம். அவர்கள் கூறிய பதிலைத் தான் இந்த பதிவில் தொகுத்துள்ளோம்.
இந்த முதலீடு போதாது?
20 வருடம் கழித்து 50 லட்சம் கார்ப்பஸினை அடைய, மாதம் 2,000 ரூபாய் SIP முதலீடு என்பது போதாது. மாதம் 5,000 ரூபாய் முதலீடு செய்தால் கூட, அதன் மூலம் உங்களது இலக்கினை அடைவது கஷ்டம் தான். இதன் மூலம் வருடத்திற்கு 12% வருமானம் கிடைக்கிறது என வைத்துக் கொண்டாலும், அதன் மூலம் 20 வருடம் கழித்து சுமார் 49.5 லட்சம் கிடைக்கலாம்.
பணவீக்கம் அதிகரிக்கும்
20 வருடம் கழித்து உங்களுக்கு 50 லட்சம் தேவை என்று கூறியுள்ளீர்கள். இன்று இருக்கும் விலைவாசி வேறு. 20 வருடம் கழித்து பணவீக்கம் அதிகரிக்கலாம். ஆக 50 லட்சம் என்பது இன்னும் அதிகரிக்கலாம். ஆக அதற்கேற்ப உங்களது முதலீட்டினை நீங்கள் திட்டமிட வேண்டும்.
எஸ்ஐபியினை அதிகரிக்க வேண்டும்
ஆக உங்களது மாதந்திர எஸ்ஐபியினை அதிகரிக்க வேண்டும். உங்களது சம்பளம் அதிகரிக்க அதிகரிக்க, வருடத்திற்கு ஒரு முறை உங்களது எஸ்ஐபி-யினை அதிகரிக்க வேண்டும். அதன் மூலம் எளிதில் உங்களது கார்ப்பஸ் இலக்கினை அடைய முடியும். அதேபோல எக்காரணத்தை கொண்டும் உங்களது முதலீட்டினை இடையில் நிறுத்தக் கூடாது, இடையில் எடுக்கவும் கூடாது. அதனை வேறு திட்டங்களுக்கு மாற்றலாம். ஆனால் முதலீட்டினை வெளியே எடுக்க கூடாது.
பிரித்து முதலீடு செய்யலாம்
நீண்டகால முதலீடுகள் தான் உங்களது இலக்குகளை அடைய எளிய வழி. ஆக உங்களது எஸ் ஐ பி முதலீடுகளை பிரித்து முதலீடு செய்ய வேண்டும். எல்லா தொகையையும் ஒரே ஃபண்டில் முதலீடு செய்ய கூடாது. உதாரணத்திற்கு ஒரு மிட் கேப், ஒரு ஸ்மால் கேப் என தேர்வு செய்யலாம். இதன் மூலம் கணிசமான வருமானம் வந்து கொண்டிருக்கும்.
பொது வருங்கால வைப்பு நிதியிலும் செய்யலாம்
மேலும் வருடத்திற்கு ஒரு முறையேனும் உங்களது போர்ட்போலியோவினை சரி பார்க்க வேண்டும். அவை எப்போதும் லாபம் கொடுத்துக் கொண்டு இருக்கும் என நம்பகூடாது. அதே போல சம்பளம் அதிகரிக்கும் பட்சத்தில் நிரந்தர வருமானம் தரக்கூடிய அஞ்சலகத்தின் பொது வருங்கால வைப்பு நிதி திட்டத்திலும் கணிசமான தொகையை போட்டு வைக்கலாம்.
ஹெல்த் இன்சூரன்ஸ்
அதேபோல ஒவ்வொரு நிதி ஆலோசகரும் சொல்வது, அவசர தேவைகளுக்காக தனியாக ஒரு தொகையை வைத்துக் கொள்ளலாம். இது உடனடியாக எடுத்துக் கொள்ளும் விதமாக வங்கிக் கணக்கில் போட்டு வைக்கலாம். இவற்றோடு வீட்டில் உள்ள அனைவரும் பயன்பெறும் வகையில் குழும ஹெல்த் இன்சூரன்ஸினை போடலாம். இதன் மூலம் ஹெல்த்கேர் செலவுகளில் இருந்து தப்பிக்க முடியும். இதுவும் உங்களது போர்ட்போலியோவில் இருக்க வேண்டியதுஅவசியம். ஏனெனில் திடீரென ஏற்படும் செலவுகள் உங்களது சேமிப்பினை கரைக்ககூடும்.
More From GoodReturns

ரூ.666 இருந்தால் போதும் ரூ.1 கோடி இலக்கை எட்டலாம்…!! அட இவ்வளவு ஈஸியான வழி இருக்கா?

வங்கி கடனை விட ஈஸி! உங்கள் PPF பணத்தை வைத்தே கடன் பெறலாம் - புதிய விதிமுறைகள் என்ன?

முகேஷ் அம்பானிக்கு ரூ.1 லட்சம் கோடி நஷ்டம்; 2 நாட்களில் 6% சரிவடைந்த ரிலையன்ஸ் பங்கு மதிப்பு!!

EMI-யும் கட்டியாச்சு,லாபமும் பார்த்தாச்சு! ரூ8 கோடியை வைத்து ரூ10 கோடி வீட்டை வாங்கிய சாதுர்ய நபர்!

5 ஆண்டுகளில் ரூ.1 லட்சத்தை ரூ.25 லட்சமாக மாற்றிய பென்னி ஸ்டாக்: உங்க போர்ட்போலியோவுல இருக்கா?

பங்குச்சந்தை ஏறினாலும், இறங்கினாலும் கண்டுக்காதீங்க: சென்செக்ஸ் சொல்லி தரும் பாடம் இது தான்!!

TCS நிறுவனத்திற்கு பெரிய கும்பிடு போட்டு வெளியேறும் ஊழியர்கள்!! என்ன நடக்குது?

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

PF கணக்கில் வரும் 5 மேஜர் மாற்றங்கள்!! EPFO 3.0இல் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் என்னென்ன?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!



Click it and Unblock the Notifications