கொரோனா வைரஸால் உலகம் முழுவதும் ஏற்பட்டுள்ள பயத்தின் மத்தியில், நடப்பு நிதியாண்டில் உலக பொருளாதாரம் 2008 - 2009ம் ஆண்டு அடைந்த வீழ்ச்சியை விட, தற்போது மோசமாக வீழ்ச்சி அடையும் என்று சர்வதேச நாணய நிதியம் ஒர் அறிக்கையில் கூறியிருந்தது.
கொரோனா பெருந்தொற்று காரணமாக உலகம் தற்போது எதிர்பாராத பொருளாதார தடையை சந்தித்து வருகிறது. இதனால் 2020-21ம் நிதி ஆண்டில் பொருளாதாரம் வீழ்ச்சி அடையும். அது மிகப் பெரிய வீழ்ச்சியாக இருக்கும்.
பணப்புழக்க பிரச்சனைகள் கடன் பிரச்சனைகளாக மாறாமல் இருந்தால் மட்டுமே அது சாத்தியம் என்றும் சர்வதேச நாணய நிதியத்தின் அறிக்கையில் கூறப்பட்டு இருந்தது.
இந்தியா முழுக்க ஊரடங்கு
இப்படி ஒரு நிலையில் மக்களை பாரபட்சம் பாராமல் வாட்டி வதைத்து வரும் கொரோனா, குறிப்பாக வயதானவர்களை குறிவைத்து தாக்கி வரும் கொரோனா பெரும்பாலும், வயதில் முதியவர்களை அதிகமாக பலி கொண்டுள்ளது. இதனால் மேற்கொண்டு கொரோனாவின் தாக்கம் பரவாமல் இருக்க இந்தியா முழுவதும் 21 நாள் ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
ஆர்பிஐ அனுமதி
இதற்கிடையில் மக்களின் கோரிக்கையை கருத்தில் கொண்டு, ஆர்பிஐ வங்கிகளுக்கு 3 மாத இஎம்ஐ-களுக்கு அவகாசம் வழங்க அனுமதி அளித்தது. இதனை ஒவ்வொரு வங்கிகளும் செயல்படுத்தி வரும் நிலையில், தனியார் வங்கியான ஐசிஐசிஐ வங்கியும் இதனை செயல்படுத்தியுள்ளது. மேலும் அதன் விதிமுறைகள் என்ன? நிபந்தனை என்ன பல விவரங்களையும் கொடுத்துள்ளது. வாருங்கள் அதை பற்றித் தான் பார்க்க போகிறோம்.
இதனை தேர்வு செய்யுங்கள்
ஐசிஐசிஐ வங்கி வாடிக்கையாளார்கள் 3 மாத இஎம்-ஐகளுக்கு அவகாசம் பெற OPT-IN அல்லது OPT-OUT என்ற வசதியை தேர்வு செய்ய வேண்டும் என்றும் தனது இணையதளத்தில் தெரிவித்துள்ளது. ஆக வாடிக்கையாளர்கள் இந்த வசதியினை பயன்படுத்தி தங்களது 3 மாதம் இஎம்ஐக்கான கால அவகாசத்தினை பெற முடியும்.
யார் யாரெல்லாம் சலுகை பெற முடியும்?
ஐசிஐசிஐ வங்கியின் இந்த சலுகையினை கிசான் கிரெடிட் கார்டு, சுய உதவிக் குழு கடன், விவசாயம் சார்ந்த (Farm Equipment) கடன், கூட்டு குழு கடன் (Joint Lending Group), வணிகக் கடன், தங்க நகை மீதான கடன், சிறு வணிக கடன், கிரெடிட் கார்டு கடன், வாகனக் கடன் என பல வகையான கடன்களுக்கு இந்த சலுகை பொருந்தும் என தெரிவித்துள்ளது.
எப்படி இந்த சலுகையினை தேர்வு செய்வது?
ஐசிஐசிஐ வங்கியின் வாடிக்கையாளர்கள் நீங்கள் இந்த கால அவகாசத்தினை பெற விரும்பினால், ஐசிஐசிஐ வங்கியின் https://www.icicibank.com/ தளத்தில் உள்ள Choose your option என்ற லிங்கினை கிளிக் செய்தால் https://buy.icicibank.com/moratorium.html?ITM=nli_cms_hp_1_static_EMI-moratorium-m_ChooseYourOption என்ற பேஜ் ஓபன் ஆகும். அங்கு உங்களது பதிவு செய்யப்பட்ட மொபைல் எண் அல்லது மெயில் ஐடியை கொடுத்து பதிவு செய்து உங்கள் விருப்பதினை தெரிவிக்கலாம்.
வட்டி உண்டு
நீங்கள் ஆர்பிஐ மூன்று மாதம் கால அவகாசத்தினை மட்டுமே இதன் மூலம் பெற முடியும். ஆனால் நிலுவையில் உள்ள கடனுக்கு ஏற்ப வட்டி வசூலிக்கப்படும். இது மார்ச் 1 முதல் மே 31வரையில் உங்களுக்கு கால அவகாசத்தினை வழங்கும். ஆக ஐசிஐசிஐ வங்கி மட்டும் அல்ல மற்ற வங்கிகளும் இதே செயல்முறையை நடைமுறைப் படுத்தியுள்ளன.
More From GoodReturns

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?

TCS ஊழியர்களுக்கு ஜாக்பாட்! IT லே ஆப் மத்தியில் சம்பளம் எகிறப்போகுது..செம ஹாப்பி தான்!

அமெரிக்காவுக்கு சத்தமேயில்லாமல் செக் வைத்த ஈரான்: டாலர் ஆதிக்கத்தை முடக்க சீனா வகுத்த வியூகம்!

தங்கம் விலை $6,000-ஆ? அடுத்த வருஷம் இன்னும் மோசமா இருக்குமா? சாக்ஸோ வங்கி கொடுத்த ஷாக் ரிப்போர்ட்!

முதலிடத்தில் விஜய், இரண்டாமிடத்தில் ஸ்டாலின் – அப்போ எடப்பாடி பழனிசாமி , சீமான்?

தங்கம் விலை ஏற்ற இறக்கம் குறித்து கவலையே வேண்டாம்: இப்படி முதலீடு செஞ்சா லாபம் கொட்டும்!!

அம்பானி ஏன் இவ்வளவு சம்பாதிக்கிறார் தெரியுமா? ரகசியத்தைஉடைத்த மம்மூட்டி! மெகா ஸ்டாரின் கமெண்ட்!



Click it and Unblock the Notifications