முன்பெல்லாம் பண்டிகை காலம் என்றாலே துணிக்கடைகள், டிபார்ட்மெண்ட் ஸ்டோர்கள், ஷாப்பிங் மால்களில் தான் ஆஃபர்களை வாரி வழங்குவார்கள்.
மக்களும் கூட்டம் கூட்டமாய் கடைகளில் அலைமோதுவதை பார்க்க முடியும். ஆனால் தற்போது பண்டிகை காலம் என்றாலே வங்கிகளும் சலுகைகளை வாரி இறைக்க ஆரம்பித்துள்ளன.
கடந்த சில தினங்களுக்கு முன்பு தான் பண்டிகை கால பருவத்திற்காக, எஸ்பிஐ பல சலுகைகளை அறிவித்தது. தற்போது அதே போல தனியார் வங்கியான ICICI வங்கியும் சில சலுகைகளை அறிவித்துள்ளது. அதனை பற்றித் தான் பார்க்கப் போகிறோம் வாருங்கள்.
என்னென்ன கடன்களுக்கு சலுகை
ஐசிஐசிஐ வங்கி விழாக்கால சலுகையாக சில கடன்களுக்கு சலுகைகளை அளித்துள்ளது. இதில் சில சலுகைகள் அக்டோபர் 1 முதல் கிடைக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மற்றவை பண்டிகை காலத்தின் வெவ்வேறு தேதிகளில் கிடைக்கும். இதில் வீட்டுக்கடன், வாகனக் கடன், உடனடி பர்சனல் லோன், இது தவிர நுகர்வோருக்கு இன்னும் பல சலுகைகளை அறிவித்துள்ளது
ஹோம் லோனுக்கு என்ன சலுகை?
வீட்டுக் கடன்கள் அல்லது பிற வங்கிகளில் வாங்கியிருக்கும் வீட்டுக் கடன்களை டிரான்ஸ்பர் செய்து கொள்ள கவர்ச்சிகரமான வட்டி விகிதம் வழங்கப்படும் என அறிவித்துள்ளது. வட்டி விகிதமானது (ரெபோ விகிதத்துடன் இணைக்கப்பட்டுள்ளது) 6.90% முதல் ஆரம்பிக்கிறது. இதற்கு செயலாக்க கட்டணம் (processing fee) 3000 ரூபாயில் இருந்தும் தொடங்குகிறது.
ஆட்டோ லோனில் என்ன சலுகை
வாடிக்கையாளர்களுக்கு உதவும் வகையில் பிளக்ஸிபிள் இஎம்ஐ ஆஃப்சனை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம் தையல்காரர் கூட இஎம்ஐ செலுத்த முடியும் அளவுக்கு இது எளிதாக இருக்கும் என்றும் இவ்வங்கி தெரிவித்துள்ளது. ஏனெனில் 1 லட்சம் ரூபாய்க்கு 84 மாத காலத்திற்கு, இஎம்ஐ விகிதம் 1,554 ரூபாயிலிருந்து தொடங்குகிறது. இதில் பெண் வாடிக்கையாளார்களுக்கு செயல்பாட்டுக் கட்டணம் 1,999 ருபாயாக இருக்கும் என அறிவித்துள்ளது.
இரு சக்கர வாகன கடனுக்கு என்ன சலுகை?
இரு சக்கர வாகன கடனை பொறுத்த வரையில் 36 மாதங்களுக்கு தவணையை செலுத்திக் கொள்ளும் விதமாக தவணை சலுகை அறிவித்துள்ளது. இதன் மூலம் 1000 ரூபாய்க்கு மாதம் 36 ரூபாய் செலுத்த வேண்டியிருக்கும். இதற்கு சிறப்பு flat செயல்பாட்டு கட்டணமாக 999 ரூபாய் கட்ட வேண்டும் எனவும் ஐசிஐசிஐ வங்கி தெரிவித்துள்ளது.
உடனடி பர்சனல் லோன்
வாடிக்கையாளர்களை கவரும் விதமாக 10.50% வட்டி விகிதத்தில், உடனடி தனி நபர் கடனை பெற்றுக் கொள்ளலாம். அதே போல இதற்கும் flat செயல்பாட்டு கட்டணமாக 3,999 ரூபாய் வசூலிக்கப்படுகிறது. இது வாடிக்கையாளர்கள் அதிக தொகையினை கடனாக எடுத்துக் கொள்ளும்போது பயனுள்ளதாக அமையும். ஏனெனில் சில வங்கிகள் வாடிக்கையாளர்களின் கடன் தொகைக்கு ஏற்றவாறு இந்த கட்டணங்களை வசூலிக்கின்றன.
நோ காஸ்ட் இஎம்ஐ ஆப்சனும் உண்டு
வாடிக்கையாளர்களுக்கு தேவையான முன்னணி பிராண்டுகளின் வீட்டு உபயோக பொருட்கள் அல்லது டிஜிட்டல் பொருட்கள் வாங்க நோ காஸ்ட் இஎம்ஐ ஆப்சன் உண்டு.
இது குறித்து ஐசிஐசிஐ வங்கியின் நிர்வாக இயக்குனர் அனுப் பாகி கூறுகையில், பண்டிகை காலம் தொடங்கியவுடன், எங்களது வாடிக்கையாளர்களின் இந்த ஆண்டு கொண்டாட்டங்களை மேலும் சிறப்பானதாக்க பல்வேறு சலுகைகளை ஐசிஐசிஐ வங்கி அறிவித்துள்ளது. அதோடு நாங்கள் முன்னணி இ-காமர்ஸ் நிறுவனங்களோடும் இணைந்துள்ளோம். இவ்வங்கியின் கிரெடிட் கார்டு/டெபிட் கார்டு, மொபைல் வங்கி, டிஜிட்டல் வாலட் உள்ளிட்ட பலவற்றிற்கும் இந்த சலுகை பொருந்தும் என இவ்வங்கி அறிவித்துள்ளது.
More From GoodReturns

ரேஷன் அட்டை வைத்திருப்பவர்களுக்கு முக்கிய அப்டேட்.. 3 மாதத்திற்கான பொருள் ஒரே நேரத்தில்.. மத்திய அரசின் முடிவு

ஆனந்த் ஸ்ரீனிவாசன்: படிச்சு படிச்சு சொன்னேன்.. யாரும் கேட்ல 'Big Drop'.. வெள்ளி அதோ கதி..!!

1986-ல் ஒரு புல்லட் இவ்வளவு தானா? வைரலாகும் பழைய பில்! அப்பவே கெத்து தான்!

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

52 வார சரிவில் HDFC வங்கி பங்குகள்.. ஓரேயொரு நபர் செய்த வேலையால்.. ரூ.1 லட்சம் கோடி காலி..!!!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?



Click it and Unblock the Notifications