வீட்டுக்கடன் வாங்கியவர்களுக்கு இது நல்ல விஷயம்.. ஐசிஐசிஐ வங்கி வட்டி குறைப்பு.. இனி EMI குறையுமே!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்தியாவின் தனியார் வங்கிகளில் இரண்டாவது வங்கியானது ஐசிஐசிஐ வங்கியானது, அனைத்து கடன்களுக்கான வட்டி விகிதத்தினை 10 அடிப்படை புள்ளிகளை குறைத்துள்ளது.

இது தற்போது நாட்டில் நிலவி வரும் நெருக்கடிக்கு மத்தியில், கடன் வாங்கியவர்களுக்கு மிக உபயோகமாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது.

ஐசிஐசிஐ வங்கியின் இந்த அதிரடி நடவடிக்கையானது கடன்களுக்கான வட்டி குறைப்பு என்பது வீடு மற்றும் அனைத்து கடன்களுக்கான இஎம்ஐ ஓரளவுக்கு குறையும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

எம்சிஎல்ஆர் விகிதம் குறைப்பு

எம்சிஎல்ஆர் விகிதம் குறைப்பு

இவ்வாறு திருத்தப்பட்ட இந்த வட்டி விகிதங்கள் ஆகஸ்ட் 1 முதல் நடைமுறைக்கு வரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. ஒரு ஆண்டுக்கான எம்சிஎல்ஆர் வட்டி விகிதம் 7.45 சதவீதமாக குறைந்துள்ளது. இதே ஓவர் நைட் எம்சிஎல்ஆர் விகிதம் 7.20 சதவீதமாகவும் இனி இருக்கும். சில்லறை கடன்களின் பார்வையில் இந்த எம்சிஎல்ஆர் விகிதம் ஒரு முக்கியமான விஷயமாக பார்க்கப்படுகிறது.

எவ்வளவு வட்டி குறைப்பு?

எவ்வளவு வட்டி குறைப்பு?

ஏனெனில் வீட்டுகடன் உள்ளிட்ட அனைத்துக் கடன்களும் இந்த எம்சிஎல்ஆர் விகிதத்துடன் இணைக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில் ஓவர் நைட் எம்சிஎல்ஆர் விகிதம் 7.20%
ஒரு மாத எம்சிஎல்ஆர் விகிதம் - 7.20%
மூன்று மாத எம்சிஎல்ஆர் விகிதம் - 7.25%
ஆறு மாத எம்சிஎல்ஆர் விகிதம் - 7.40%
ஒரு வருட எம்சிஎல்ஆர் விகிதம் - 7.45%

நிகரலாபம்

நிகரலாபம்

அதிகமான கருவூல வருமானம் காரணமாக ஐசிஐசிஐ வங்கி கடந்த ஜூன் மாதத்தில், அதன் நிகரலாபத்தில் 36 சதவீதம் அதிகரித்து 2,599 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. தனியார் வங்கியின் நிகரலாபம் 1,908.03 கோடி ரூபாயாக இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இந்த வட்டி குறைப்பு வந்துள்ளது கவனிக்கதக்கது.

வைப்பு நிதிக்கு வட்டி விகிதம் குறைப்பு

வைப்பு நிதிக்கு வட்டி விகிதம் குறைப்பு

கடன்களுக்கான வட்டி விகிததினை குறைத்துள்ள அதே வேளையில், கடந்த மாதத்தில் வங்கி வைப்பு நிதிக்கும் வட்டியை குறைதுள்ளது. இந்த வட்டி குறைப்பானது ஜூலை 14 முதல் நடைமுறைக்கு வந்தது. இதன் மூலம் வட்டி விகிதம் 2.75% முதல் தொடங்குகிறது.

பொதுமக்களுக்கான வைப்பு நிதி வட்டி விகிதம்

பொதுமக்களுக்கான வைப்பு நிதி வட்டி விகிதம்

பொதுமக்களுக்கான வட்டி விகிதம் ( 2 கோடி ரூபாய்க்குள்)


7 நாள் முதல் 14 நாட்கள் வரையில் - 2.50%
15 நாள் முதல் 29 நாட்கள் வரையில் - 2.50%
30 நாள் முதல் 45 நாட்கள் வரையில் - 3%
46 நாள் முதல் 60 நாட்கள் வரையில் - 3%
61 நாள் முதல் 90 நாட்கள் வரையில் - 3%
91 நாள் முதல் 120 நாட்கள் வரையில் - 4.10%
121 நாள் முதல் 184 நாட்கள் வரையில் - 4.10%
185 நாள் முதல் 210 நாட்கள் வரையில் - 4.50%
211 நாள் முதல் 270 நாட்கள் வரையில் - 4.50%
271 நாள் முதல் 289 நாட்கள் வரையில் - 4.50%
290 நாள் முதல் 1 வருடத்திற்குள் - 4.75%
1 வருடம் முதல் 389 நாட்கள் வரையில் - 5.15%
390 நாள் முதல் 18 மாதம் வரையில் - 5.15%
18 மாதம் முதல் 2 வருடம் வரையில் - 5.3%
2 வருடம் 1 நாள் முதல் 3 வருடம் வரையில் - 5.3%
3 வருடம் 1 நாள் முதல் 5 வருடம் வரையில் - 5.50%
5 வருடம் 1 நாள் முதல் 10 வருடம் வரையில் - 5.50%

மூத்த குடிமக்களுக்கான வட்டி விகிதம்

மூத்த குடிமக்களுக்கான வட்டி விகிதம்

7 நாள் முதல் 14 நாட்கள் வரையில் - 3.00%
15 நாள் முதல் 29 நாட்கள் வரையில் - 3.00%
30 நாள் முதல் 45 நாட்கள் வரையில் - 3.50%
46 நாள் முதல் 60 நாட்கள் வரையில் - 3.50%
61 நாள் முதல் 90 நாட்கள் வரையில் - 3.50%
91 நாள் முதல் 120 நாட்கள் வரையில் - 4.60%
121 நாள் முதல் 184 நாட்கள் வரையில் - 4.60%
185 நாள் முதல் 210 நாட்கள் வரையில் - 5.00%
211 நாள் முதல் 270 நாட்கள் வரையில் - 5.00%
271 நாள் முதல் 289 நாட்கள் வரையில் - 5.00%
290 நாள் முதல் 1 வருடத்திற்குள் - 5.25%
1 வருடம் முதல் 389 நாட்கள் வரையில் - 5.65%
390 நாள் முதல் 18 மாதம் வரையில் - 5.65%
18 மாதம் முதல் 2 வருடம் வரையில் - 5.85%
2 வருடம் 1 நாள் முதல் 3 வருடம் வரையில் - 5.85%
3 வருடம் 1 நாள் முதல் 5 வருடம் வரையில் - 6.00%
5 வருடம் 1 நாள் முதல் 10 வருடம் வரையில் - 6.30%

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

ICICI bank cut MCLR rate, home loan and other loan EMIs to fall. Check other details here

ICICI bank cut its lending rates by 10 basis points across all tenors. It will make low EMIs on home loan and other loans.
Story first published: Monday, August 3, 2020, 13:54 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X