வங்கி பிக்ஸட் டெபாசிட் திட்டங்கள் இன்றைய காலகட்டத்திலும் ஒரு பாதுகாப்பான முதலீடாக பார்க்கப்படுகிறது. அதிலும் மூத்த குடி மக்களுக்கு என்று யோசிக்கும் போது வேறு ஆப்சனே வேண்டாம்.
ஏனெனில் இந்த முதலீடுகள் பெரும்பாலானோருக்கு அடிப்படை வாழ்வாதாரமாக உள்ளது. ஆக இன்றைய காலகட்டத்தில் பல முதலீட்டு திட்டங்கள் இருந்தாலும், மூத்த குடிமக்கள் வங்கி வைப்பு நிதிகளுக்கே முன்னுரிமை கொடுக்கின்றனர்.
வட்டி விகிதம் அதிகம்
சாதாரண பொதுமக்களுக்கு வட்டி விகிதம் குறைவாக இருந்தாலும், மூத்த குடி மக்களின் வாழ்வாதாரத்தினை கருத்தில் கொண்டு, வட்டி விகிதம் சற்று அதிகமாகவே உள்ளது. அதிலும் இந்த கொரோனா காலகட்டத்தில் ரெப்போ விகிதம் குறைக்கப்பட்ட நிலையில், வங்கி வைப்பு நிதிக்கான வட்டி விகிதம் வெகுவாக குறைக்கப்பட்டது. ஆனால் அந்த நேரத்தில் மூத்த குடிமக்களின் நலனை கருத்தில் கொண்டு, மூத்த குடிமக்களுக்கான சிறப்பு வைப்பு நிதி திட்டங்களை அறிமுகப்படுத்தின.
மூத்த குடிமக்களுக்கான சிறப்பு திட்டங்கள்
இந்த சிறப்பு திட்டங்கள் மூலம் மூத்த குடி மக்களுக்கு வட்டி விகிதம் அதிகமாக கொடுக்கப்பட்டது. அந்த வகையில் நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ, தனியார் துறையில் உள்ள முன்னணி வங்கியான ஹெச்டிஎஃப்சி வங்கி, ஐசிஐசிஐ வங்கி உள்ளிட்ட வங்கிகள் சாதாரண வைப்பு நிதிக்கான வட்டி விகிதத்தினை விட, மூத்த குடி மக்களுக்கு அதிகமாக வட்டி கொடுத்தன
ஹெச்டிஎஃப்சி வங்கியின் மூத்த குடிமக்கள் திட்டம்
ஹெச்டிஎஃப்சி வங்கியின் 'HDFC Senior Citizen Care' திட்டத்தில், சாதாரண மக்களுக்கு வழங்கும் வட்டி விகிதத்தினை விட, ஹெச்டிஎஃப்சி வங்கி கூடுதலாக 75 அடிப்படை புள்ளிகள் அதிகமாக கொடுத்து வருகின்றது. ஆக மூத்த குடிமக்கள் HDFC Senior Citizen Care திட்டத்தில் டெபாசிட் செய்தால், அதற்கு வட்டி விகிதம் 6.25 சதவீதமாக இருக்கலாம். இந்த விகிதங்கள் கடந்த நவம்பர் 13ல் இருந்து நடைமுறையில் உள்ளது.
ஐசிஐசிஐ வங்கியின் மூத்த குடிமக்கள் திட்டம்
ஐசிஐசிஐ வங்கியில் ‘CICI Bank Golden Years' என்ற பெயரில் மூத்த குடிமக்களுக்கான திட்டம் வழங்கப்படுகிறது. இது மற்ற பிக்ஸட் டெபாசிட்டுகளுக்கான வட்டி விகிதத்தினை விட, 80 அடிப்படை புள்ளிகள் அதிகமாகும். இந்த திட்டத்தில் வங்கி வருடத்திற்கு 6.30 சதவீதமாக உள்ளது. இது கடைசியாக அக்டோபர் 21 அன்று மாற்றப்பட்டது.
More From GoodReturns

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!



Click it and Unblock the Notifications