ஐசிஐசிஐ வங்கி வாடிக்கையாளர்களுக்கு அதிருப்தியை அளிக்கும் விதமாக இவ்வங்கி ஒரு அறிவிப்பினை கொடுத்துள்ளது.
இது கிரெடிட் கார்டு கட்டணங்கள் பற்றிய அறிவிப்பு தான். இந்த கட்டணங்கள் வாடிக்கையாளர்களுக்கு சாதகமா? அல்லது பாதிப்பா? முழு விவரம் என்ன வாருங்கள் பார்க்கலாம்.
கட்டணம் அதிகரிப்பு
ஐசிஐசிஐ வங்கி அதன் கிரெடிட் கார்டு கட்டணங்களை உயர்த்தியுள்ளது. இந்த கட்டண உயர்வானது வரவிருக்கும் பிப்ரவரி 10 முதல் அமலுக்கு வரவுள்ளது. இந்த கட்டண அதிகரிப்பின் படி வாடிக்கையாளர்கள் பரிவர்த்தனை கட்டணமாக 2.50% செலுத்த வேண்டியிருக்கும். இது குறைந்தபட்சம் 500 ரூபாயாக இருக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கும் கட்டணம் அதிகரிப்பு
மேலும் செக் ரிட்டர்ன்ஸ், ஆட்டோ டெபிட்டுக்கும் மொத்த நிலுவைத் தொகையில் 2% கட்டணத்தினை நிர்ணயம் செய்துள்ளது. இதற்கும் குறைந்தபட்ச கட்டணம் என்பது 500 ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
ஐசிஐசிஐ வங்கியின் எமரால்டு கார்டினை தவிர (ICICI Emerald Card), மற்ற அனைத்து கார்டுகளுக்கும் தாமதமாக செலுத்தும் தவணைக்கும் கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளது.
எவ்வளவு கட்டணம்
நிலுவைத் தொகை ரூ.100-க்குள் இருந்தால் - கட்டணம் ஏதும் இல்லை
நிலுவைத் தொகை ரூ.100 - ரூ.500 - தாமத கட்டணம் ரூ.100
நிலுவைத் தொகை ரூ.501 - ரூ.5000 - தாமத கட்டணம் ரூ.500
நிலுவைத் தொகை ரூ.5001 - ரூ.10000 - தாமத கட்டணம் ரூ.750
நிலுவைத் தொகை ரூ.10,001 - ரூ.25,000 - தாமத கட்டணம் ரூ.900
நிலுவைத் தொகை ரூ.25,011 - ரூ.50,000 - தாமத கட்டணம் ரூ.1000
இந்த கட்டணங்களுடன் ஜிஎஸ்டி கட்டணமும் சேரும்.
பாதிப்பா?
ஐசிஐசிஐ வங்கியின் இந்த கட்டண அதிகரிப்பால், வாடிக்கையாளர்களுக்கு கட்டண அதிகரிப்பினை செய்துள்ளது. இதனால் வாடிக்கையாளர்கள் வழக்கத்திற்கு மாறாக கூடுதலாக கட்டணம் செலுத்தும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.


Click it and Unblock the Notifications