என்னதான் பல முதலீட்டு திட்டங்கள் என்பது இருந்து வந்தாலும், மக்களிடையே பிக்சட் டெபாசிட் தான் சிறப்பான திட்டமாக பார்க்கப்படுகின்றது.
வட்டி குறைவாக இருந்தாலும் நிரந்தர வருமானம் தரும், சந்தை அபாயம் இல்லாத திட்டங்களாக உள்ளன. எல்லாவற்றுக்கும் மேலாக முதலீட்டுக்கு எந்த பங்கமும் வராது என்பதே பலரின் எதிர்பார்ப்பாகவும் உள்ளது.
உண்மையில் இன்றைய காலகட்டத்தில் முதலீட்டில் லாபம் கிடைப்பது இரண்டாம் பட்சமாக இருந்தாலும், முதலீடாவது பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்பதில் மக்கள் கருத்தாக உள்ளனர்.
வட்டி அதிகரிப்பு
அந்த வகையில் நாம் இன்று பார்க்கவிருப்பது ஐசிஐசிஐ வங்கியின் பிக்சட் டெபாசிட் திட்டம் பற்றித் தான்.
நாட்டின் இரண்டாவது பெரிய தனியார் துறை வங்கியான ஐசிஐசிஐ வங்கியானது இன்று அதன் பிக்சட் டெபாசிட் திட்டங்களுக்கான வட்டி விகிதத்தினை 20 அடிப்படை புள்ளிகள் வரை உயர்த்தியுள்ளது. இந்த வட்டி விகிதமானது 2 கோடி ரூபாய்க்குள்ளான டெபாசிட்களுக்கு பொருந்தும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய அறிவிப்பானது மே 16, 2022 முதல் அமலுக்கு வந்துள்ளது.
பொது மக்களுக்கு என்ன விகிதம்?
7 - 14 நாட்கள் - 2.50%
15 - 29 நாட்கள் - 2.50%
30 - 45 நாட்கள் - 3%
46 - 60 நாட்கள் - 3%
31 - 90 நாட்கள் - 3%
91 - 120 நாட்கள் - 3.50%
121 - 150 நாட்கள் - 3.50%
151 - 184 நாட்கள் - 3.50%
185 - 210 நாட்கள் - 4.40%
211 - 270 நாட்கள் - 4.40%
271 - 289 நாட்கள் - 4.40%
290 நாட்கள் முதல் 1 வருடத்திற்குள் - 4.50%
1 வருடம் முதல் 389 நாட்கள் - 5.10%
390 நாட்கள் - 5.10%
15 மாதங்கள் முதல் 18 மாதங்கள் வரையில் - 5.10%
18 மாதங்கள் முதல் 2 வருடத்திற்குள் - 5.10%
2 வருடம் 1 நாள் முதல் 3 வருடத்திற்குள் - 5.40%
3 வருடம் 1 நாள் முதல் 5 வருடத்திற்குள் - 5.60%
5 வருடம் 1 நாள் முதல் 10 வருடத்திற்குள் - 5.75%
மூத்த குடிமக்களுக்கு என்ன விகிதம்
7 - 14 நாட்கள் - 3%
15 - 29 நாட்கள் - 3%
30 - 45 நாட்கள் - 3.50%
46 - 60 நாட்கள் - 3.50%
31 - 90 நாட்கள் - 3.50%
91 - 120 நாட்கள் - 4%
121 - 150 நாட்கள் - 4%
151 - 184 நாட்கள் - 4%
185 - 210 நாட்கள் - 4.90%
211 - 270 நாட்கள் - 4.90%
271 - 289 நாட்கள் - 4.90%
290 நாட்கள் முதல் 1 வருடத்திற்குள் - 5%
1 வருடம் முதல் 389 நாட்கள் - 5.60%
390 நாட்கள் - 5.60%
15 மாதங்கள் முதல் 18 மாதங்கள் வரையில் - 5.10%
18 மாதங்கள் முதல் 2 வருடத்திற்குள் - 5.60%
2 வருடம் 1 நாள் முதல் 3 வருடத்திற்குள் - 5.90%
3 வருடம் 1 நாள் முதல் 5 வருடத்திற்குள் - 6.10%
5 வருடம் 1 நாள் முதல் 10 வருடத்திற்குள் - #6.35%
கூடுதல் சலுகை
இவ்வங்கி அதன் ஐசிஐசிஐ வங்கியின் கோல்டன் இயர்ஸ் திட்டத்தினை முன் வைத்துள்ளது. இதன் படி 5 ஆண்டுகளுக்கு மேலான பிக்சட் டெபாசிட் திட்டத்தில் வங்கியானது, கூடுதலாக வருடத்திற்கு 0.10% வட்டி விகிதத்தினை வழங்கி வருகின்றது.
More From GoodReturns

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

தங்கம் விலை உச்சத்தில் இருந்து 17% வீழ்ச்சி! அமெரிக்கா கொடுத்த ஷாக் - இப்போ நகை வாங்கலாமா?

LPG தட்டுப்பாடு: காலை 5 மணி முதல் காத்திருந்தாலும் கேஸ் இல்லை!! பெங்களூருவில் மோசமாகும் சூழல்!!

தங்க சந்தையில் நடந்த தலைகீழ் மாற்றம்!! பொட்டி பொட்டியாக வெளியே வரும் தங்கம்!!

ஈரான் போரை மையமாக வைத்து புதிய தொழில்: கோடிகளை அள்ளும் டிரம்ப் மகன்கள்!! வெளிச்சத்துக்கு வந்த உண்மை!!



Click it and Unblock the Notifications