இன்றளவிலும் ரிஸ்க் எடுக்க விரும்பாத முதலீட்டாளர்களுக்கு ஒரு சிறந்த ஆப்சன் என்றால் அது வங்கி பிக்ஸட் டெபாசிட் தான்.
இந்த பிக்ஸட் டெபாசிட் மூலம் அதிகப்படியான வருமானம் வருகிறதோ இல்லையோ? நிலையான வருமானம் வருகிறது என்ற ஆத்ம திருப்தி உள்ளது. அதோடு முதலீட்டுக்கு எந்த பங்கமும் இல்லை என்ற பெரிய நிம்மதி கிடைக்கிறது.
இதனாலேயே இன்றளவிலும் வங்கி பிக்ஸட் டெபாசிட் முதன்மை முதலீட்டு திட்டங்களில் ஒன்றாக உள்ளது. அதிலும் மூத்த குடிமக்களை பொருத்த வரையில் வேறு சான்ஸே தேவையில்லை. ஏனெனில் வங்கி டெபாசிட்டினை தவிர வேறு எதனையும் பெரிதும் விரும்புவதில்லை.
ரிஸ்க் எடுக்க விரும்புவதில்லை
ஏனெனில் காலம் காலமாக சிறுக சிறுக குருவி சேர்ப்பது போல் சேர்த்து, அதனை ஏதோவொரு முதலீட்டில் முதலீடு செய்ய யாரும் நினைப்பதில்லை. இதற்கு முக்கிய காரணம் இன்றைய காலகட்டத்தில் பலருக்கும் அடிப்படை தேவைகளை பூர்த்தி ஆதாரமாக பிக்ஸட் டெபாசிட் உள்ளது என்பது தான். இது மூத்த குடிமக்கள் மட்டும் அல்ல, சாதாரண மக்களும் பிக்ஸட் டெபாசிட்டுக்கே முக்கியத்துவம் கொடுக்கிறார்கள் என்றால் மிகையல்ல.
நம்பிக்கை தரும் வரும் டெபாசிட்
அதிலும் கடந்த பட்ஜெட்டில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்த வங்கி காப்பீடு, முதலீட்டாளர்களுக்கு பெரும் நம்பிக்கையை கொடுத்துள்ளது எனலாம். வங்கிகளில் செய்யப்படும் டெபாசிட் செய்யும் பணத்துக்காக, காப்பீட்டு தொகையினை 5 லட்சம் ரூபாயாக உயர்த்துவதாக அறிவித்தார். இந்த தொகையானது முதலில் 1 லட்சம் ரூபாயாக வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
பொது மக்களுக்கு எவ்வளவு வட்டி?
2 கோடி ரூபாய்க்குள் செய்யப்படும் பிக்ஸட் டெபாசிட்டுக்கு கீழ் கண்ட வட்டி விகிதத்தினை ICICI bank வழங்குகிறது. இது செப்டம்பர் 7 முதல் நடைமுறைக்கு வந்துள்ளது.
7 நாட்கள் முதல் 14 நாட்கள் வரையில் - 2.50%
15 நாட்கள் முதல் 29 நாட்கள் வரையில் - 2.50%
30 நாட்கள் முதல் 45 நாட்கள் வரையில் - 3%
46 நாட்கள் முதல் 60 நாட்கள் வரையில் - 3%
61 நாட்கள் முதல் 90 நாட்கள் வரையில் - 3%
91 நாட்கள் முதல் 120 நாட்கள் வரையில் - 4% (3.5)
121 நாட்கள் முதல் 184 நாட்கள் வரையில் - 4% (3.5)
185 நாட்கள் முதல் 210 நாட்கள் வரையில் - 4.40%
211 நாட்கள் முதல் 270 நாட்கள் வரையில் - 4.40%
271 நாட்கள் முதல் 289 நாட்கள் வரையில் - 4.40%
290 நாட்கள் முதல் 1 வருடத்திற்குள் - 4.50%
1 வருடம் முதல் 389 நாட்கள் வரையில் - 5%
390 நாட்கள் முதல் 18 மாதங்களுக்குள் - 5%
18 மாதங்களுக்கு மேல் 2 வருடத்திற்குள் 5.1%
2 வருடம் 1 நாள் முதல் 3 வருடத்திற்குள் - 5.1%
3 வருடம் 1 நாள் முதல் 5 வருடத்திற்குள் - 5.35%
5 வருடம் 1 நாள் முதல் 10 வருடத்திற்குள் - 5.50%
மூத்த குடிமக்களுக்கு என்ன வட்டி விகிதம்
மூத்த குடிமக்களுக்கு மற்ற வங்கிகளைப் போலவே ஐசிஐசிஐ வங்கியிலும் பொதுமக்களுக்கான வட்டி விகிதத்தில், 50 அடிப்படை புள்ளிகள் அதிகம். 7 நாள் முதல் 10 வருடங்கள் வரை செய்யப்படும் பிக்ஸட் டெபாசிட்களுக்கு, 3 சதவீதம் முதல் 6.3 சதவீதம் வரை வட்டி விகிதம் வழங்கப்பட்டு வருகின்றது.
More From GoodReturns

ஈரான் போர்: கதிகலங்கி நிற்கும் தைவான்.. 11 நாட்கள் கெடு..!!

52 வார சரிவில் HDFC வங்கி பங்குகள்.. ஓரேயொரு நபர் செய்த வேலையால்.. ரூ.1 லட்சம் கோடி காலி..!!!

என்னப்பா புது புது பிரச்சனையா கிளம்புது.. ஈரான் போரால் 'இந்த' பொருட்கள் விலை தாறுமாற உயரபோகுது..!!

இந்தியர்கள் உடனே வெளியேறலாம்; நாங்களே டிக்கெட் போட்டு தரோம்: அமெரிக்க அரசின் அட்டூழியம்

ஈரான் போரில் டிரம்ப் போடும் கணக்கே வேற..! குறி வச்சது கமேனிக்கு இல்ல..! வெளிவரும் உண்மை..!

டிரம்ப் அடித்த அந்தர் பல்டி.. ஈரான் மீதான தடை நீக்கம்.. எல்லாம் தலைகீழாக மாறுதே..!!

இந்திய மக்களை துரத்தும் புதிய பிரச்சனை.. ஈரான் போர் மூலம் உங்க பர்ஸ்-க்கு வேட்டு..!!

தங்கம் விலை 7 மடங்கு! வெள்ளி விலை 2.5 மடங்கு அதிகரிக்க வாய்ப்பு! ராபர்ட் கியோசாகி அதிரடி கணிப்பு!

சென்செக்ஸ், நிஃப்டியை புரட்டிப்போட்ட 90 நிமிடம்.. என்ன நடந்தது..? முழுக்க முழுக்க மேஜிக்

40 ஆண்டுகள், 15 நெருக்கடி.. தட்டி தூக்கிய பங்கு சந்தை.. முதலீட்டாளர்களுக்கு முக்கிய பாடம்..!

13 ஆண்டுகளாக வேலை பார்த்தவரை ஒரே நொடியில் தூக்கி எறிந்த ஐடி நிறுவனம்: கண்ணீரில் சென்னை டெக்கி



Click it and Unblock the Notifications