இன்று முதல் அமலுக்கு வரும் புதிய விதிகள்.. கவனமுடன் பாருங்க..!

வங்கிகளில் தொடர்ந்து கடந்த சில வாரங்களாகவே பற்பல மாற்றங்கள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக பல வங்கிகளும் தங்களது, கட்டண விகிதங்களை மாற்றியமைத்து வருகின்றன.

அந்த வகையில் தனியார் துறையை சேர்ந்த முன்னணி வங்கியான ICICI வங்கியில் கட்டணங்கள் மாற்றியமைக்கப்பட்டுள்ளன.

அந்த மாற்றம் எவ்வளவு? இதனால் சாதகமென்ன? பாதகமென்ன? யாருக்கு என்ன பலன் என்பதை பார்க்கலாம் வாருங்கள்.

என்னென்ன கட்டணங்கள் அதிகரிக்க போகின்றன?

என்னென்ன கட்டணங்கள் அதிகரிக்க போகின்றன?

ஐசிஐசிஐ வங்கியின் இந்த புதிய கட்டண மாற்றங்கள் வரும் ஆகஸ்ட் 1, 2021 முதல் அமலுக்கு வரவுள்ளது. இதன் மூலம் கேஸ் டிரான்ஸாக்சன், காசோலைக்கான கட்டண விகிதங்கள், ஏடிஎம் கட்டணங்கள் என பலவும் மாறவுள்ளன.

ரெகுலர் சேமிப்பு கணக்கில் என்ன மாற்றங்கள்

ரெகுலர் சேமிப்பு கணக்கில் என்ன மாற்றங்கள்

பண பரிவர்த்தனை கட்டணங்கள் (Sum total deposits and withdrwals) என்று பார்க்கும்போது, மாதத்திற்கு முதல் 4 பரிவர்த்தனைகள் இலவசம் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் பிறகு ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் 150 ரூபாய் கட்டணமாகும்.

ரெகுலர் சேமிப்பு கணக்கில் வரம்பு

ரெகுலர் சேமிப்பு கணக்கில் வரம்பு

எவ்வளவு தொகை அதிகபட்சம் பரிவர்த்தனை செய்து கொள்ளலாம். குறிப்பாக உங்களது வங்கிக் கணக்கு தொடங்கிய கிளையில் எவ்வளவு? மற்ற கிளையில் எவ்வளவு பரிவர்த்தனை செய்து கொள்ளலாம்.

ஹோம் பிரான்ச் எனில், ஒரு கணக்கிற்கு மாதம் 1 லட்சம் வரையில் இலவசமாக பரிவர்த்தனை செய்து கொள்ளலாம். 1 லட்சத்திற்கு அதிகமாக செய்யும் பர்வர்த்தனையில், 1000 ரூபாய்க்கு 5 ரூபாய் கட்டணமாக வசூலிக்கப்படும். (subject to a minimum of Rs 150)

ஹோம் பிரான்ச் அல்லாத மற்ற கிளை எனில், ஒரு நாளைக்கு 25,000 ரூபாய் வரையில் கட்டணம் இல்லை.

25,000 ரூபாய்க்கு மேல் செய்யும் ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் 1000 ரூபாய்க்கு 5 ரூபாய் கட்டனமாகும். (subject to a minimum of Rs 150)

 

ரெகுலர் சேமிப்பு கணக்கில் மூன்றாம் நபர் பரிவர்த்தனை

ரெகுலர் சேமிப்பு கணக்கில் மூன்றாம் நபர் பரிவர்த்தனை


ஒரு நாளைக்கு 25,000 ரூபாய் வரை பரிவர்த்தனை செய்ய அனுமதிக்கப்படுகிறது. இதற்கு கட்டணமாக 150 ரூபாய் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. எனினும் 25,000 ரூபாய்க்கு மேல் அனுமதியில்லை.

இதே மூத்த குடிமக்கள், Young Star/Smart Star Accounts கணக்குகளுக்கு ஒரு நாளைக்கு 25,000 ரூபாய் வரை பரிவர்த்தனை வரம்பு உண்டு. எனினும் கட்டணம் இல்லை.

 

சில்வர் சேமிப்பு/ சம்பள கணக்கு

சில்வர் சேமிப்பு/ சம்பள கணக்கு

சில்வர் சேமிப்பு/ சம்பள கணக்கில் (Sum total deposits and withdrwals), மாதத்திற்கு 4 இலவச பரிவர்த்தனைகளை செய்து கொள்ளலாம். அதற்கு மேற்பட்ட ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும், 150 ரூபாய் கட்டணமாக வசூலிக்கப்படும்.

சில்வர் சேமிப்பு / சம்பள கணக்கு – வரம்பு

சில்வர் சேமிப்பு / சம்பள கணக்கு – வரம்பு

இதே தொகை வரம்பு என எடுத்துக் கொண்டால் ((Sum total deposits and withdrwals) ஹோம் பிரான்ச் எனில், ஒரு கணக்கிற்கு மாதம் 1 லட்சம் வரையில் இலவசமாக பரிவர்த்தனை செய்து கொள்ளலாம். 1 லட்சத்திற்கு அதிகமாக செய்யும் பரிவர்த்தனையில் 1000 ரூபாய்க்கு 5 ரூபாய் கட்டணமாக வசூலிக்கப்படும். (subject to a minimum of Rs 150)

ஹோம் பிரான்ச் அல்லாத மற்ற கிளைகளில், ஒரு நாளைக்கு 25,000 ரூபாய் வரையில் கட்டணம் இல்லை. 25,000 ரூபாய்க்கு மேல் செய்யும் ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் 1000 ரூபாய்க்கு 5 ரூபாய் கட்டனமாகும். (subject to a minimum of Rs 150)

 

சம்பள கணக்கில் மூன்றாம் தரப்பு கட்டணம்

சம்பள கணக்கில் மூன்றாம் தரப்பு கட்டணம்

ஒரு நாளைக்கு 25,000 ரூபாய் வரை பரிவர்த்தனை செய்ய அனுமதிக்கப்படுகிறது. இதற்கு கட்டணமாக 150 ரூபாய் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. எனினும் 25,000 ரூபாய்க்கு மேல் பரிவர்த்தனை செய்ய அனுமதியில்லை.

மற்ற சேமிப்பு கணக்குகளை போலவே, மூத்த குடிமக்கள், Young Star/Smart Star Accounts கணக்குகளுக்கு ஒரு நாளைக்கு 25,000 ரூபாய் வரை பரிவர்த்தனை வரம்பு உண்டு. எனினும் கட்டணம் இல்லை.

 

கோல்டு (Gold Privilege Savings / Salary Accounts)

கோல்டு (Gold Privilege Savings / Salary Accounts)

இந்த சம்பள கணக்கில் மாதத்திற்கு 5 பரிவர்த்தனைகள் இலவசமாக செய்து கொள்ளலாம். இந்த கணக்கில் அதற்கு மேற்கொண்டு பரிவர்த்தனை செய்யும்போது 150 ரூபாய் கட்டணமாக வசூலிக்கப்படும்.

இதே தொகை வரம்பில் எடுத்துக் கொண்டால், ஹோம் பிரான்ச் அல்லது மற்ற கிளைகளில் 1 லட்சம் ரூபாய் வரையில், ஒரு மாதத்திற்கு இலவசமாக பரிவர்த்தனை செய்து கொள்ளலாம்.

இதே 1 லட்சம் ரூபாய்க்கு மேல் பரிவர்த்தனை செய்யும்போது 1000 ரூபாய்க்கு 5 ரூபாய் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. இது மூன்றாம் தரப்பினருக்கும் பொருந்தும். (subject to a minimum of Rs 150)

 

ஏடிஎம் கட்டணங்கள் எவ்வளவு?

ஏடிஎம் கட்டணங்கள் எவ்வளவு?

டெல்லி, சென்னை, கொல்கத்தா, பெங்களூரு, ஹைத்ராபாத், மும்பை உள்ளிட்ட ஆறு நகரங்களில் முதல் 3 பரிவர்த்தனைகள் இலவசமாகும். (inclusive of financial and non-financial) இவை தவிர மற்ற பகுதிகளில் மாதத்திற்கு முதல் 5 பரிவர்த்தனைகள் இலவசமாகும்.

அதிகபட்ச பரிவர்த்தனைகளுக்கு ஒவ்வொரு நிதி ரீதியிலான பரிவர்த்தனைகளுக்கு 20 ரூபாய் கட்டணமாகும். நிதி அல்லாத பரிவர்த்தனைகளுக்கு 8.50 ரூபாய் கட்டணமாகும்.

 

காசோலை கட்டணம்

காசோலை கட்டணம்

ஒரு வருடத்திற்கு 25 காசோலைகளுக்கு கட்டணம் இல்லை. அதற்கு மேற்பட 10 காசோலைகள் கொண்ட ஒவ்வொரு புத்தகத்திற்கும் 20 ரூபாய் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. மேற்கண்ட கட்டணத்துடன் ஜிஎஸ்டி கட்டணமும் சேரும்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+