மார்ச் மாதம் தொடங்கி சில நாட்களே ஆகியுள்ள நிலையில், தொடர்ந்து பல வங்கிகளில் வீட்டு கடனுக்கான வட்டியை குறைத்து வருகின்றன.
ஆக இது வீடு கட்டவும், வாங்கவும் நல்ல நேரமாக பார்க்கப்படுகிறது. சில தினங்களுக்கு முன்பு தான் எஸ்பிஐ, கோடக் மகேந்திரா வங்கி, ஹெச்டிஎஃப்சி உள்ளிட்ட வங்கிகள் வீட்டு கடனுக்கான வட்டியை குறைத்தன.
தற்போது இந்த லிஸ்டில் ஐசிஐசிஐ வங்கியும் இணைந்துள்ளது. இவ்வங்கியில் 10 வருடத்தில் இல்லாத அளவு வட்டி குறைந்துள்ளதாக இவ்வங்கி தெரிவித்துள்ளது.
எவ்வளவு வட்டி விகிதம்?
ஐசிஐசிஐ வங்கியில் 75 லட்சம் ரூபாய் வரையிலான கடனுக்கு 6.7 சதவீதம் வட்டியாகும். இதே 75 லட்சம் ரூபாயக்கு மேல் வாங்கும் கடனுக்கு 6.75% வட்டியாகும். இது வட்டி விகிதமானது இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. அதோடு இந்த விகிதம் மார்ச் 31 வரை அமலில் இருக்கும். ஆக இது வீடு கட்டவும், வீடு வாங்கவும் நல்ல வாய்ப்பாக பார்க்கப்படுகிறது.
இது நல்ல வாய்ப்பு
தற்போது நுகர்வோரிடமிருந்து தேவை அதிகரித்துள்ளது. ஆக மக்களுக்கு இது நல்ல வாய்ப்பாக இருக்கும் என்றும் இவ்வங்கியின் உயர் அதிகாரிகள் தரப்பில் கூறப்பட்டுள்ளது. இது மக்களின் கனவு வீட்டை வாங்கவும், வாங்கவும் நல்ல வாய்ப்பாக பார்க்கப்படுகிறது. ஆக வீடு கட்ட நினைப்பவர்களுக்கும், வாங்க நினைப்பவர்களுக்கும் இது சரியான நேரமாக இருக்கும்.
வட்டி விகிதம் மிக குறைவு
ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியா ரெப்போ விகிதத்தினை கடந்த ஆண்டு, மார்ச் மாதம் முதல் குறைந்து வருகின்றது. இதனால் வீட்டு கடனுக்கான வட்டி விகிதம் 15 ஆண்டுகளில் மிக குறைவாக உள்ளது. எனினும் இந்த வட்டி விகிதமானது அவரவர் கிரெடிட் ஸ்கோரினை பொறுத்து மாறுபடும்.
மற்ற வங்கிகளில் வீட்டு கடன்
எஸ்பிஐ, கோடக் மகேந்திரா வங்கிகளில் முறையே 6.7% மற்றும் 6.65% ஆகவும் வட்டி விகிதம் உள்ளது. இது வாடிக்கையாளர்களின் கிரெடிட் ஸ்கோர் 800 மேல் இருப்பவர்களுக்கு மட்டுமே கிடைக்கும். கடந்த நவம்பர் மாதத்திலேயே ஐசிஐசிஐ வங்கியில் அடமானக் கடன் விகிதமானது 2 டிரில்லியன் ரூபாயை தாண்டியதாகவும் கூறியுள்ளது.
More From GoodReturns

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

தங்கம் விலை உச்சத்தில் இருந்து 17% வீழ்ச்சி! அமெரிக்கா கொடுத்த ஷாக் - இப்போ நகை வாங்கலாமா?

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

LPG தட்டுப்பாடு: காலை 5 மணி முதல் காத்திருந்தாலும் கேஸ் இல்லை!! பெங்களூருவில் மோசமாகும் சூழல்!!



Click it and Unblock the Notifications