ICICI பேங்க் தனது பிரீமியம் "ஸ்டூடன்ட் சஃபிரோ ஃபாரெக்ஸ் கார்டை" (Student Sapphiro Forex Card) செவ்வாய்க்கிழமை அன்று வெளியிட்டது. இது வெளிநாட்டில் உயர்கல்வி படிக்கும் மாணவர்களுக்காக வடிவமைக்கப்பட்ட ப்ரீபெய்ட் கார்டு. விசா நிறுவனத்தால் வழங்கப்படும் இந்த கார்டு, கல்வி கட்டணம், பயணம், உணவு மற்றும் அன்றாடத் தேவைகள் போன்ற கல்வி தொடர்பான செலவுகளை நிர்வகிப்பதில் மாணவர்கள் மற்றும் அவர்களது பெற்றோரின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.
முக்கிய அம்சங்கள் மற்றும் நன்மைகள்: ஸ்டூடண்ட் சஃபையர் ஃபாரெக்ஸ் கார்டு மூலம் 15 நாணயங்களில் பரிவர்த்தனை செய்யலாம், மேலும் எந்த கூடுதல் கட்டணமும் அதற்கு வசூலிக்கப்படாது. இதன் மூலம், மாணவர்கள் உலகமெங்கும் எளிதாக பயணம் செய்ய முடியும். இந்த அட்டை ரூ. 15,000 மதிப்பிலான ஜாயினிங் நன்மைகளுடனும் வருகிறது.

இலவச சர்வதேச ஓய்வறையைப் பயன்படுத்துதல்: இலவசமாக 2 முறை சர்வதேச விமான நிலையங்களின் ஓய்வறையைப் பயன்படுத்த முடியும்.
இலவச சர்வதேச சிம் கார்டு: வெளிநாடுகளில் உள்ள மாணவர்களுக்கான இணைப்பை மேம்படுத்தும் வகையில் இலவச சிம் கார்டு வழங்கப்படுகிறது.
Uber வவுச்சர்கள்: சர்வதேச பயணத்திற்கான ரூ. 1,000 மதிப்புள்ள உபர் வவுச்சர்கள்.
கார்டு பாதுகாப்புத் திட்டம்: தொலைந்து போன கார்டுக்கு ரூ. 5 லட்சம் வரை இன்சூரன்ஸ் வழங்கப்படுகிறது.
மேலும், இந்த கார்டில் உங்களுக்கு வெல்கம் கிட் (welcome kit) வழங்கப்படுகிறது. பிரைமரி கார்டு மற்றும் ரீப்ளேஸ்மென்ட் கார்டு என 2 கார்டுகள் வழங்கப்படுகிறது. இதன் மூலம் கார்டு தொலைந்துவிட்டாலோ அல்லது சேதமடைந்தாலோ iMobile Pay, நெட் பேங்கிங் அல்லது வங்கியின் கஸ்டமர் கேர் நம்பரை தொடர்பு கொண்டு டிஜிட்டலாக பயன்படுத்தலாம்.
இந்த கார்டை பயன்படுத்துவதன் மூலம் கிடைக்கும் சில கூடுதல் சலுகைகள்:
ATM கட்டண தள்ளுபடி: வெளிநாட்டில் பணம் எடுக்கும் போது 5 வருடங்களுக்கு மூன்று மாதாந்திர ATM கட்டண தள்ளுபடி கிடைக்கும்.
கூடுதல் கட்டணம் இல்லை: வெளிநாட்டு நாணயங்களுக்கு மாற்றுவதற்கான கூடுதல் கட்டணம் (cross-currency transaction fees) இல்லை.
கேஷ்பேக்: ஆன்லைனில் மளிகைப் பொருட்கள் வாங்கும் போது மற்றும் ஆன்லைன் சேனல்கள் மூலம் செய்யப்படும் டிரான்சிட் முன்பதிவுகளுக்கு 5% கேஷ்பேக் வழங்கப்படுகிறது.
Mobile Pay மற்றும் இன்டர்நெட் பேங்கிங் மூலம் கார்டை டிஜிட்டல் முறையில் ரீலோட் செய்து, மாணவர்கள் மற்றும் அவர்களது பெற்றோர்கள் எங்கிருந்து வேண்டுமானாலும் பணப்பரிவர்த்தனை செய்ய முடியும். இந்த வசதியானது வெளிநாடுகளில் உள்ள மாணவர்களுக்கு இடையூறு இல்லாத நிதி பரிவர்த்தனைகளை உறுதி செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
விண்ணப்ப செயல்முறை: ICICI பேங்க் வாடிக்கையாளர்கள் ஸ்டுடென்ட் சஃபிரோ ஃபாரெக்ஸ் கார்டு பெற, பேங்க் இணையதளத்திற்குச் சென்று அல்லது iMobile Pay ஆப் மூலம் விண்ணப்பிக்கலாம்.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

ஈரான் விவகாரத்தில் புதிய குண்டை தூக்கி போட்ட டிரம்ப்!! என்னென்ன சொல்றாரு பாருங்க!!



Click it and Unblock the Notifications