சென்னை: ஐசிஐசிஐ வங்கி தங்களுடைய கிரெடிட் கார்டுகளை பயன்படுத்துபவர்களுக்கு பல்வேறு விதிமுறைகளை மாற்றம் செய்துள்ளது. இந்த விதிமுறைகள் வரும் 15ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விதிமுறை மாற்றங்கள் காப்பீடு மற்றும் உணவுக்கான செலவினங்கள், விமான நிலையங்களில் தங்குமிடங்களை பயன்படுத்துதல், தாமதமாக கட்டணம் செலுத்துவதற்கான அபராத தொகைகள் உள்ளிட்டவற்றில் மாற்றங்களை கொண்டு வந்துள்ளது. இது தொடர்பாக கிரெடிட் கார்டு வாடிக்கையாளர்களுக்கு எஸ்எம்எஸ் வாயிலாக தகவல் அளிக்கப்பட்டுள்ளது என ஐசிஐசிஐ வங்கி தெரிவித்துள்ளது.

இதன்படி காப்பீடுக்காக கிரெடிட் கார்டு பயன்படுத்தி 80,000 ரூபாய் வரை செலுத்தினால் ரிவார்டு பாய்ண்ட்கள் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மளிகை சாமான் வாங்குவது, டிபார்மெண்ட் ஸ்டோர்களில் செய்யும் செலவுகள் ஆகியவற்றுக்கு ரூ.40,000 வரை ஒரு மாதத்தில் செய்யும் செலவுகளுக்கு ரிவார்ட் பாய்ண்ட்கள் கிடைக்கும்.
ICICI Bank Emeralde Private Metal Credit Card பயன்படுத்தி அரசு சம்பந்தப்பட்ட எந்த ஒரு பரிவர்த்தனையை மேற்கொண்டாலும் ரிவார்ட் பாய்ண்ட் கிடைக்காது.
ஒரு மாதத்திற்கு 50,000 ரூபாய்க்கு மேல் எரிபொருட்களுக்கு செலவு செய்தால் மட்டுமே surcharge விலக்கு கிடைக்கும். இதற்கு மேல் செலவு செய்தால் இந்த சலுகை கிடைக்காது. DreamFolks card மூலம் கிடைத்த ஸ்பா சலுகைகள் இனி கிடைக்காது. annual fee reversal மற்றும் milestone benefitsகளில் வாடகை செலுத்துவது, அரசுக்கு கட்டணம் செலுத்துவது கல்வி தொடர்பான கட்டணங்கள் ஆகியவை சேர்த்து கொள்ளப்படாது. annual fee reversalக்கான அதிகபட்ச வரம்பு 15 லட்சத்தில் இருந்து 10 லட்சமாக குறைக்கப்பட்டுள்ளது.
மூன்றாம் தரப்பு செயலிகள் வாயிலாக கல்வி தொடர்பாக செலுத்தும் கட்டணங்களுக்கு கூடுதலாக 1% கட்டணம் செலுத்த வேண்டும், அதே போல 10,000 ரூபாய்க்கு மேல் எரிபொருட்களுக்கு செலுத்தும் போது 1% கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டும் என அற்இவிக்கப்பட்டுள்ளது. supplementary cardholderகள், இனி ஆண்டு கட்டணமாக 199 ரூபாயை செலுத்த வேண்டும்.
தாமதமாக கட்டணம் செலுத்துபவர்களுக்கு அபராத தொகையும் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. உதாரணமாக outstanding தொகை 101 முதல் 500 ரூபாய் வரை இருந்தால் 100 ரூபாய் தாமத கட்டணம் செலுத்த வேண்டும். 50,000 ரூபாய்க்கு மேல் outstanding தொகை இருந்தால் அதற்கு 1,300 ரூபாய் தாமத கட்டணம் செலுத்த வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
complimentary airport loungeக்கான சலுகைகளையும் ஐசிஐசிஐ மாற்றி அமைத்துள்ளது. முந்தைய காலாண்டில் 75,000 ரூபாய் வரை செலவு செய்திருக்கும் வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே airport loungeக்கான சலுகை கிடைக்கும். அதாவது ஜனவரி - மார்ச் காலாண்டில் airport loungeக்கான சலுகை பெற வேண்டுமெனில் அக்டோபர் - டிசம்பர் காலாண்டில் 75,000 ரூபாய் வரை செலவு செய்திருக்க வேண்டும்.


Click it and Unblock the Notifications