சென்னை: இந்தியாவில் வங்கி சேவை வழங்குவதில் தனியார் துறையில் முன்னணி நிறுவனமாக ஐசிஐசிஐ வங்கி செயல்பட்டு வருகிறது. இந்த வங்கி திடீரென தங்களுடைய வாடிக்கையாளர்களுக்கு சராசரி மாதாந்திர மினிமம் பேலன்ஸ் குறித்து வெளியிட்டு இருக்கும் அறிவிப்பு அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது.
மாதாந்திர சராசரி மினிமம் பேலன்ஸ்: ஐசிஐசிஐ வங்கி வெளியிட்டு இருக்கக்கூடிய அறிவிப்பின்படி பெருநகரங்களில் மற்றும் நகர்ப்புறங்களில் ஆகஸ்ட் 1ஆம் தேதி மற்றும் அதன் பின்னர் சேமிப்பு கணக்கு தொடங்கும் அனைத்து வாடிக்கையாளர்களும் மாதாந்திர சராசரி குறைந்தபட்சம் இருப்பாக (minimum average monthly balance) 50,000 ரூபாயை வைத்திருக்க வேண்டும். 10,000 ரூபாய் மினிமம் பேலன்ஸ் என்பதை ஐசிஐசிஐ வங்கி 50,000 ரூபாய் என பல மடங்கு உயர்த்தி இருக்கிறது.

ஆகஸ்ட் 1 முதல் நடைமுறை: இந்தியாவிலேயே எந்த வங்கியிலும் இல்லாத அளவுக்கு ஐசிஐசிஐ வங்கி பெருநகரங்கள் மற்றும் நகரப் பகுதிகளில் உள்ள வாடிக்கையாளர்களுக்கான மினிமம் பேலன்ஸ் தொகையை உயர்த்தி அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறது. minimum average monthly balance என்பது ஒரு மாதத்தில் உள்ள நாட்களின் எண்ணிக்கை மற்றும் ஒவ்வொரு நாளின் இறுதியிலும் வங்கி கணக்கில் இருப்பு இருக்கும் தொகை ஆகியவற்றை வகுப்பதன் மூலம் கணக்கிடப்படுகிறது.
ரூ.50,000 கட்டாயம்: ஆகஸ்ட் 1ஆம் தேதி மற்றும் அதன் பின்னர் ஐசிஐசிஐ வங்கியில் நகர் பெருநகரங்கள் மற்றும் நகர் பகுதிகளில் புதிதாக சேமிப்பு கணக்கு தொடங்கியவர்கள் தங்களுடைய கணக்கில் மாதந்தோறும் சராசரியாக 50,000 ரூபாயை மினிமம் பேலன்ஸாக பராமரித்திருக்க வேண்டும், இல்லை என்றால் அபராதம் விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அதேபோல செமி அர்பன் பகுதிகளில் அதாவது சிறு நகரங்களில் இந்த மினிமம் பேலன்ஸ் என்பது 5,000 ரூபாயில் இருந்து 25,000 ரூபாய் எனவும், கிராமப் பகுதிகளில் இது 10,000 ரூபாய் எனவும் உயர்த்தப்பட்டுள்ளது.
ஏற்கனவே கணக்கு வைத்திருப்பவர்கள்: ஏற்கனவே கணக்கு வைத்திருப்பவர்களுக்கு பழைய முறையே தொடரும் என ஐசிஐசிஐ வங்கி அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறது. குறைந்தபட்ச சராசரி இருப்பை பராமரிக்காத வாடிக்கையாளர்களுக்கு அந்த பற்றாக்குறையில் ஆறு சதவீதம் அல்லது 500 ரூபாய் என எது குறைவாக இருக்கிறதோ அந்த தொகை அபராதமாக விதிக்கப்படும். ஐசிஐசிஐ வங்கியின் இந்த அறிவிப்பு வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

சாதாரண மக்களுக்கான வங்கி இல்லையா: மாதந்தோறும் சராசரியாக 50,000 குறைந்தபட்ச இருப்பாக வைத்திருக்க வேண்டும் என்ற இந்த அறிவிப்பு குறைந்த வருமானம் கொண்டவர்களுக்கான வங்கி ஐசிஐசிஐ இல்லை என்பதை காட்டும் வகையில் அமைந்திருக்கிறது. சாதாரண மக்களுக்கான வங்கி என்ற நிலையில் இருந்து ஐசிஐசிஐ வங்கி தடம் மாறுகிறது என்ற கேள்வியை எழுப்பி இருக்கிறது.
இந்தியாவிலேயே அதிகபட்சம்: 2020 ஆம் ஆண்டு இந்தியாவின் மிகப்பெரிய வங்கியான எஸ்பிஐ மாதாந்திர சராசரி மினிமம் பேலன்ஸ் என்ற முறையை ரத்து செய்தது. பெரும்பாலான வங்கிகளில் 2000 ரூபாயிலிருந்து 10,000 ரூபாய் வரை தான் மினிமம் பேலன்ஸ் பராமரிக்க வேண்டும் என சொல்லப்படுகிறது.


Click it and Unblock the Notifications