வெறும் 10,000 SIP முதலீட்டை 4.56 கோடியாக மாற்றிய ஃபண்ட்.. முதலீட்டாளர்கள் காட்டில் மழை!

சென்னை: மியூச்சுவல் ஃபண்டுகள் லாபம் ஈட்ட ஒரு சிறந்த வழியாக இருந்தாலும், எந்த ஃபண்டில் முதலீடு செய்வது சிறந்தது என்பதைத் தேர்ந்தெடுப்பதில் கவனமாக இருப்பது அவசியம். அப்போதுதான் நீங்கள் செய்யும் முதலீட்டுக்கு நல்ல லாபம் பெற முடியும். அதனடிப்படையில் கடந்த 20 ஆண்டுகளில் சிறப்பாக செயல்பட்டு சுமார் 21.09% என்ற கூட்டு வருடாந்திர வளர்ச்சி விகிதத்தை அளித்த ஒரு அருமையான ஃபண்டின் விவரங்கள் குறித்து இந்தப் பதிவில் பார்ப்போம்.

சமீபத்தில் 20 ஆண்டுகளை நிறைவு செய்த ஐசிஐசிஐ புருடென்ஷியல் வேல்யூ டிஸ்கவரி ஃபண்டு, அறிமுகப்படுத்தப்பட்டதிலிருந்தே முதலீட்டாளர்களுக்கு நல்ல வருமானத்தை அளித்துள்ளது. ஆகஸ்ட் 16-ஆம் தேதி 2004-ஆம் ஆண்டு இந்த ஃபண்ட் தொடங்கப்பட்ட நாளில் 10 லட்ச ரூபாய் முதலீடு செய்திருந்தால்.. ஜூலை 31-ஆம் தேதி 2024-ஆம் ஆண்டில் 4.56 கோடி பெற்றிருக்கலாம். இது சுமார் 21.09 சதவீத கூட்டு வருடாந்திர வளர்ச்சி விகிதத்தை குறிக்கிறது.

 வெறும் 10,000 SIP முதலீட்டை 4.56 கோடியாக மாற்றிய ஃபண்ட்.. முதலீட்டாளர்கள் காட்டில் மழை!

SIP செயல்திறனைப் பொறுத்தவரை, தொடக்கத்திலிருந்து மாதந்தோறும் ரூ.10,000 முதலீடு செய்திருந்தால், மொத்தமாக இதுவரை ரூ.24 லட்ச ரூபாயை முதலீடு செய்திருப்பார்கள். அப்படியானால் ஜூலை 31, 2024 நிலவரப்படி உங்கள் முதலீடு ரூ.2.30 கோடியாக வளர்ந்திருக்கும். இது சுமார் 19.41% CAGR-ஐ வழங்கியுள்ளது.

ஜூலை 31, 2024 நிலவரப்படி இந்த ஃபண்டின் கீழ் உள்ள மொத்த சொத்து மதிப்பு (AUM) ரூ.48,806 கோடியாக உள்ளது. ஐசிஐசிஐ புருடென்ஷியல் ஏஎம்சியின் ED & CEO எஸ் நரேன்,கூறுகையில், "ஐசிஐசிஐ புருடென்ஷியல் தனது வேல்யூ டிஸ்கவரி ஃபண்டை 2004-ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தியபோது, இந்தியா போன்ற வளர்ச்சி மிகுந்த சந்தையில் அதன் முதலீடு செழிக்குமா என்பதில் சந்தேகம் இருந்தது.

இருப்பினும், இந்த ஃபண்டு தனக்கான இடத்தைப் பிடிக்கும் என்ற நம்பிக்கை எங்களுக்கு வேரூன்றியிருந்தது. கடந்த 20 வருடங்களாக, ஐசிஐசிஐ புருடென்ஷியல் வேல்யூ டிஸ்கவரி ஃபண்டின் செயல்திறன், நல்ல முறையில் உள்ளது என்று கூறியுள்ளார்.

ஒரு ஃபண்டின் கடந்த கால செயல்திறனை வைத்து அது இனிமேலும் இதே போன்ற வருமானத்தை தரும் என்று சொல்லிவிட முடியாது. மேலே கூறப்பட்டுள்ள விவரங்கள் அனைத்தும் கடந்த 20 வருடங்களில் எப்படி ஐசிஐசிஐ புருடென்ஷியல் வேல்யூ டிஸ்கவரி ஃபண்டு வருமானம் அளித்தது என்ற விவரங்களே. எனவே எந்த ஒரு முதலீட்டு முடிவுகளையும் எடுப்பதற்கு முன்பு உங்களுடைய நிதி ஆலோசகரை அணுகி ஆலோசனை பெற்று சுய விருப்பத்தின் பேரில் முதலீடு செய்யவும்.

Disclaimer: This article is strictly for informational purposes only. It is not a solicitation to buy, sell in precious metal products, commodities, securities or other financial instruments. Greynium Information Technologies Pvt Ltd, its subsidiaries, associates and the author of this article do not accept culpability for losses and/or damages arising based on information in this article.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+