உலகப் புகழ்பெற்ற ரிச் டேட் புவர் டேட் அதாவது பணக்கார தந்தை ஏழை தந்தை புத்தகத்தின் எழுத்தாளரும் பிரபல அமெரிக்க தொழிலதிபருமான ராபர்ட் கியோசாகி தன்னுடைய சமூக வலைதள பக்கங்கள் வாயிலாக தொடர்ந்து உலக பொருளாதாரப் போக்கு குறித்தும் எப்படி முதலீட்டு முடிவுகளை எடுக்க வேண்டும் என்பது குறித்தும் பதிவு செய்து வருகிறார்.
எதில் முதலீடு செய்தால் எதிர்காலத்தில் நல்ல லாபம் இருக்கும் என்பதை தொடர்ச்சியாக கூறி வருபவர். தனிப்பட்ட முறையில் நிதி மேலாண்மை செய்வது எப்படி என எக்ஸ் பக்கத்தில் தொடர்ந்து பதிவிட்டு வரக்கூடிய ராபர்ட் கியோசாகி தன்னிடம் தற்போது 100 டாலர்கள் இருந்தால் அதனை எப்படி முதலீடு செய்வேன் என்பது குறித்து எக்ஸ் பக்கத்தில் ஒரு விரிவான பதிவை எழுதி வெளியிட்டு இருக்கிறார். அவருடைய இந்த பதிவு தங்கத்தின் பின்னால் ஓடிக் கொண்டிருக்கும் பலருக்கும் மிகப்பெரிய ஒரு விஷயத்தை வெளிப்படுத்தும் வகையில் அமைந்திருக்கிறது.

2025இல் தங்கத்தின் விலை என்பது பல மடங்கு உயர்ந்திருக்கிறது. வரலாறு காணாத உச்சத்தில் தங்கம் விலை இருக்கிறது. எனவே அனைவரும் தங்கத்தில் முதலீடு செய்ய வேண்டியது குறித்து தான் பேசி வருகிறார்கள் . ஆனால் ராபர்ட் கியோசாகி என்னிடம் தற்போது 100 டாலர் இருக்கிறது என வைத்துக் கொள்வோம். நான் அதை எப்படி முதலீடு செய்வேன் என தெரியுமா என கேட்டிருக்கிறார்.
Mutual Fund முதலீட்டில் எவ்வளவு லாபம் கிடைக்கும்? இதை பாருங்க
அந்த பணத்தை முழுவதுமாக கொண்டு வெள்ளி நாணயங்களை வாங்கி போடுவேன் என தெரிவித்துள்ள அவர் இப்பொழுது நீங்கள் 100 டாலர்களுக்கு வெள்ளியில் முதலீடு செய்தால் ஐந்து ஆண்டுகளில் அதன் மதிப்பு 500 டாலர்களாக மாறி இருக்கும் என கூறியிருக்கிறார். நான் வெள்ளியில் நாளை கூடுதல் முதலீடு செய்யப் போகிறேன் , வெள்ளி வழங்கக்கூடிய மிகப்பெரிய முதலீடு வாய்ப்பை தவற விட்டு விடாதீர்கள் என தன்னுடைய எக்ஸ் பதிவில் அவர் சுட்டிக் காட்டி இருக்கிறார் .
பல காலமாகவே வெள்ளியில் முதலீடு செய்யுங்கள் என்பதை தொடர்ச்சியாக கூறி வருகிறார் ராபர்ட் கியோசாகி. அதாவது வெள்ளியின் மதிப்பு சர்வதேச சந்தையில் ஒரு அவுன்ஸ் 10 டாலர்களாக இருக்கும் போது இருந்தே நான் கூறி வருகிறேன் தற்போது 30 டாலர்களுக்கு வந்து விட்டது இப்பொழுது கூட அது அனைவரும் வாங்கக்கூடிய விலையில் தான் இருக்கிறது . அடுத்து இது 50 டாலராகும் அடுத்து 100, 200 என வளர்ந்து கொண்டே போகும் ஏழை மக்கள் பணக்காரனாக வேண்டுமென்றால் உங்கள் பணத்தை வெள்ளியில் முதலீடு செய்யுங்கள் என ஏற்கனவே எக்ஸ் பக்கத்தில் அறிவுரை வழங்கியிருந்தார் .
2025 ஆம் ஆண்டில் வெள்ளி தங்கத்தை விட அதிக லாபம் தந்த ஒரு பொருளாக மாறி இருக்கிறது. வெள்ளியின் பயன்பாடு தொழில்துறையில் அதிகரித்து இருப்பது வெள்ளிக்கான தேவையையும் அதன் மதிப்பையும் உயர்த்துகிறது.
Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் "நாங்கள்" என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.
More From GoodReturns

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

கண்ணாமூச்சி ஆடும் தங்கம்.. ரிவர்ஸ் எடுக்கும் வெள்ளி..! இந்த 2 பேர் எடுக்கிற முடிவுல தான் எல்லாமே இருக்கு!

பங்குச்சந்தை சரிவில் இந்த தப்பு மட்டும் பண்ணாதீங்க - முதலீட்டாளர்களுக்கு விஜய் கேடியா கூறும் டிப்ஸ்

தங்கம் - வெள்ளி விலையில் கனவிலும் நினைக்காத விஷயம் நடத்திருக்கு.. 23 நாளில் நடந்த மெகா மேஜிக்..!!

உகாதி நாளில் தங்கம் தந்த சர்ப்பிரைஸ்..!! தொடர்ந்து 7ஆவது நாளாக நடக்கும் மேஜிக்..!!

தங்கம், வெள்ளி விலை : வரும் நாட்களிலும் விலை சரியுமா? முதலீட்டாளர்கள் என்ன செய்யலாம்?

தங்கம், வெள்ளி விலை: கண்ணு வச்சிட்டாங்கப்பா..!! திடீர் டிவிஸ்ட் நடக்குது..!!

இந்த வாரம் 4 நாட்கள், அடுத்த வாரம் 3 நாட்கள்: பங்குச்சந்தை முதலீட்டாளர்களே முதல்ல இத படிங்க

தங்கம் விலை இனி எகிற போகுது: சிக்னல் தந்த உலக சந்தை..! ஈரான் போரில் நடந்த திடீர் திருப்பமே காரணம்?

முதலீட்டாளர்களுக்கு இன்ப அதிர்ச்சி: 1500 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்த சென்செக்ஸ்!!

எஸ்பிஐ-யின் மெகா பிளான்: மாதம் ரூ.11,000 கியாரண்டி வருமானம்! முதலீடு எவ்வளவு தெரியுமா?



Click it and Unblock the Notifications