சென்னை: இந்தியாவில் சம்பளத்திற்காக ஒரு நிறுவனத்தில் வேலைக்கு செல்லும் ஊழியர்கள் தங்களுடைய ஓய்வு காலத்தில் ஒரு கணிசமான தொகையை பெற வேண்டும் என்பதற்கான ஒரு சமூக பாதுகாப்பு திட்டமாக தான் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி திட்டம் மற்றும் தேசிய ஓய்வூதிய திட்டம் உள்ளிட்ட திட்டங்களை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது.
ஓய்வுபெறும் போது கோடீஸ்வரர்: ஊழியர்கள் தங்களுடைய சம்பளத்தில் ஒரு குறிப்பிட்ட தொகையை இவற்றில் மாதந்தோறும் பங்களிப்பு செய்வதன் மூலம் 60 வயதில் அவர்கள் ஓய்வு பெறும் போது அவர்கள் கையில் ஒரு கணிசமான தொகை ரொக்கமாக கிடைக்கும், அதுமட்டுமின்றி மாதாந்திர ஓய்வூதியமும் கிடைத்துவிடும். அந்த வகையில் ஈபிஎஃப் எனப்படும் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி திட்டம் மற்றும் என்பிஎஸ் எனப்படும் தேசிய ஓய்வூதிய திட்டம் ஆகிய இரண்டில் முதலீடு செய்வதன் மூலம் 60 வயதாகும்போது எப்படி பல கோடி ரூபாயை நாம் பெற முடியும் என்பதை தெரிந்து கொள்ளலாம்.

ஈபிஎஃப் என்றால் என்ன?: ஒரு நிறுவனத்தில் வேலைக்கு செல்லும் ஊழியர்கள் மாதந்தோறும் தங்களுடைய அடிப்படை சம்பளத்தில் 12 சதவீதம் அல்லது மாதத்திற்கு 1800 ரூபாயை ஈபிஎஃப் கணக்கில் பங்களிப்பாக செய்கின்றனர். இவ்வாறு இந்த திட்டத்தில் செய்யப்படும் பங்களிப்புக்கு ஆண்டுதோறும் 8.25% வட்டி விகிதம் வழங்கப்படுகிறது. நிறுவனங்களும் ஊழியர்களின் சம்பளத்தில் 12 சதவீத தொகையை பங்களிப்பாக பிஎஃப் கணக்குகளில் டெபாசிட் செய்கின்றன. இதில் 3.67% பிஎஃப் கணக்கிலும் மீதமுள்ள பணமானது ஓய்வூதிய திட்டத்திற்கான கணக்கிற்கும் சென்றுவிடும். ஊழியர் ஓய்வுபெறும் போது ஓய்வூதிய திட்டத்தில் இருக்கும் தொகை மாதாந்திர ஓய்வூதியமாக கிடைக்கும். பிஎஃப் கணக்கில் உள்ள பணத்தை நாம் ரொக்கமாக எடுத்து கொள்ளலாம்.
என்பிஎஸ் என்றால் என்ன? : தனியார் துறையில் வேலை செய்யக்கூடிய ஊழியர்கள் தங்களுடைய அடிப்படை சம்பளத்தில் 10 சதவீத தொகையை என்பிஎஸ் எனப்படும் தேசிய ஓய்வூதிய திட்டத்தில் பங்களிப்பு செய்து வரலாம். இந்த பணமானது பங்குச்சந்தையில் ஈக்விட்டி மற்றும் கடன் சார்ந்த பங்குகளில் முதலீடு செய்யப்படுகிறது. இந்த ஊழியர் ஓய்வு பெறும்போது அவர் என்பிஎஸ் கணக்கில் உள்ள 60 சதவீத தொகையை மொத்தமாக எடுத்து கொள்ளலாம். மீதமுள்ள 40 சதவீத தொகை ஓய்வூதிய தொகையாக மாதாந்திரம் பெற்றுக் கொள்ளலாம்.

எவ்வளவு முதலீடு செய்தால் கோடி ரூபாய் பெறலாம்?: தற்போது 26 வயதாகக் கூடிய ஒரு நபர் இந்த இரண்டு திட்டங்களிலும் சரியான அளவில் திட்டமிட்டு முதலீடு செய்து எப்படி 60 வயதாகும் போது 8 கோடி ரூபாய் பெற முடியும் என்பதை நாம் கணக்கீடு செய்யலாம்.
ஈபிஎஃப் கணக்கீடு:
வயது -26
அடிப்படை சம்பளம் - 32,000 ரூபாய்
60 வயதாகும் வரை மாதாந்திர பங்களிப்பு - சம்பளத்தில் 12%
ஆண்டுதோறும் சம்பள உயர்வு -5%
வட்டி விகிதம் -8.25%
இதனை கொண்டு கணக்கீடு செய்தால் இந்த நபர் 60 வயதாகும் போது அவருடைய பிஎஃப் கணக்கில் மட்டும் 2.39 கோடி ரூபாய் சேர்ந்திருக்கும். இதில் 2.10 கோடி ரூபாயை ரொக்கமாக பெறலாம். மீதமுள்ள பணம் உங்களுக்கு ஓய்வு தொகையாக மாதம் 7,285 ரூபாய் என கிடைக்கும்.
என்பிஎஸ் கணக்கீடு:
வயது -26
அடிப்படை சம்பளம் - 32,000 ரூபாய்
60 வயதாகும் வரை ஊழியர் பங்களிப்பு - அடிப்படை சம்பளத்தில் 10%
60 வயதாகும் வரை நிறுவனத்தின் பங்களிப்பு- அடிப்படை சம்பளத்தில் 14%
ஊழியர் மட்டுமே பங்களிப்பு செய்தால் என்பிஎஸ் தொகுப்பு:
மொத்த நிதி தொகுப்பு - 2.48 கோடி ரூபாய்
ரொக்கமாக எடுக்கும் தொகை - 1.49 கோடி ரூபாய்
ஆன்யூட்டி மதிப்பு - 99 லட்சம் ரூபாய்
மாதாந்திர ஓய்வூதியம் - 55,945 ரூபாய்
ஊழியரோடு நிறுவனமும் பங்களிப்பு செய்தால் என்பிஎஸ் தொகுப்பு:
மொத்த நிதி தொகுப்பு - 6.21 கோடி ரூபாய்
ரொக்கமாக எடுக்கும் தொகை - 3.72 கோடி ரூபாய்
ஆன்யூட்டி மதிப்பு -2.48 கோடி ரூபாய்
மாதாந்திர ஓய்வூதியம் - 1.39 லட்சம் ரூபாய்
ஈபிஎஃப் + என்பிஎஸ் ஆகிய இரண்டிலும் கிடைக்கும் தொகையை கூட்டினால்
2.10 கோடி + 2.48 கோடி = 4.59 கோடி ரூபாய் இது ஊழியர் மட்டுமே என்பிஎஸ் திட்டத்தில் பங்களிப்பு செய்வதால் கிடைக்கும் தொகை.
இதுவே ஊழியரோடு நிறுவனமும் சேர்ந்து என்பிஎஸ் திட்டத்தில் பங்களிப்பு செய்திருந்தால்
ஈபிஎஃப் + என்பிஎஸ் ஆகிய இரண்டிலும் கிடைக்கும் தொகை
2.10 கோடி + 6.21 கோடி = 8.32 கோடி ரூபாய்
More From GoodReturns

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

165 ஆண்டுகளில் இல்லாத தரமான சம்பவத்தை செய்த டிரம்ப்..!! வாயடைத்துப்போன எதிர்க்கட்சியினர்..!!



Click it and Unblock the Notifications