உலகின் எட்டாவது அதிசயம் காம்பவுண்டிங் என நிதித்துறை நிபுணர்கள் கூறுவார்கள். அந்த வகையில் காம்பவுண்டிங் எவ்வளவு வலிமையானது, அது எப்படி ஒருவரது செல்வ வளத்தை அதிகரிக்க உதவுகிறது என்பதற்கு உதாரணமாக ஒரு மியூச்சுவல் ஃபண்ட் திட்டம் மற்றும் அதில் முதலீடு செய்தவர்கள் தற்போது எவ்வளவு லாபம் பெற்றுள்ளனர் என்பது குறித்தும் நாம் இந்த கட்டுரையில் விரிவாக பார்க்க போகிறோம்.
பொதுவாக மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் செய்யப்படும் முதலீடுகள் நீண்ட கால நோக்கில் நிறைய லாபத்தை தருபவையாக அமைகின்றன. இதற்கு காரணம் இவை காம்பவுண்டிங் முறையில் அதிகரிப்பது தான்.

வாரன் பஃபெட்டில் தொடங்கி பெரிய பெரிய பொருளாதார வல்லுநர்கள் வரை காம்பவுண்டிங்கின் சக்தி குறித்து பலமுறை எடுத்துரைத்துள்ளனர். அந்த வகையில் Edelweiss Aggressive Hybrid Fund இல் முதலீடு செய்தவர்களுக்கு காம்பவுண்டிங் முறையில் எவ்வளவு லாபம் கிடைத்திருக்கிறது என்பதை நாம் இப்போது தெரிந்து கொள்ள இருக்கிறோம்.
Edelweiss நிறுவனம் கடந்த 2009இல் இந்த ஃபண்டினை அறிமுகம் செய்தது. கடந்த ஓராண்டு காலத்தில் இந்த ஃபண்டு முதலீட்டாளர்களுக்கு 35.56 சதவீத லாபத்தை பெற்று தந்துள்ளது. அதாவது இந்த திட்டத்தில் 1 லட்சம் ரூபாயை முதலீடு செய்திருந்தால் ஓராண்டு காலத்தில் அதன் மதிப்பு 1.35 லட்சம் ரூபாயாக உயர்ந்திருக்கும்.
அதேபோல மூன்று ஆண்டு காலத்தில் பார்க்கும் போது 1 லட்சம் ரூபாய் முதலீடு செய்தவர்களுக்கெல்லாம் தற்போது 1.71 லட்சம் ரூபாயாக அது அதிகரித்திருக்கும்.
ஒருவேளை 5 ஆண்டுகளுக்கு முன்பு இந்த ஃபண்டில் 1 லட்சம் ரூபாய் முதலீடு செய்திருந்தால் தற்போது அதன் மதிப்பு 2.48 லட்சமாக அதிகரித்திருக்கும் என்கிறது இந்நிறுவனத்தின் இணையதளம் .
கடந்த 10 ஆண்டு காலத்தில் பார்க்கும் போது இந்த முதலீடானது ஓர் ஆண்டுக்கு 13.92% என்ற விகிதத்தில் லாபத்தை ஈட்டி தந்துள்ளது. 10 ஆண்டுகளுக்கு முன்பு இதில் 1 லட்சம் ரூபாய் முதலீடு செய்து இருந்தால் அதன் தற்போதைய மதிப்பு 3.68 லட்சம் ரூபாயாக அதிகரித்திருக்கும்.
இந்த திட்டமானது கடந்த 2009 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் தான் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த திட்டம் அறிமுகம் செய்யப்பட்ட போதே 1 லட்சம் ரூபாயை இதில் முதலீடு செய்து இருந்தால் தற்போது அதன் மதிப்பு 6.18 லட்சம் ரூபாயாக உயர்ந்திருக்கும் . அதாவது 15 ஆண்டு காலத்தில் உங்களது முதலீடு ஆறு மடங்கு அதிகரித்திருக்கும்.
Story Written by: Devika


Click it and Unblock the Notifications