தற்போது ஏஐ தொழில்நுட்பம் வேகமாக வளர்ந்து வருகிறது, பணி சூழல்கள் மாறி வருகின்றன. ஊழியர்கள் பணி நீக்கம் என்பது வாடிக்கையாகிவிட்டது. படித்து முடித்த ஏராளமான இளைஞர்கள் வேலை வாய்ப்பு கிடைக்காமல் தவித்து வருகின்றனர், வேலையில் இருப்பவர்களுக்கோ தலைமேல் கத்தி. இப்படிப்பட்ட சூழலில் நம் சம்பாதிக்கும் போதே ஒரு கணிசமான தொகையை எதிர்காலத்திற்காக சேமித்து வைத்துவிட வேண்டிய கட்டாயத்தில் நாம் அனைவரும் இருக்கிறோம்.
இல்லையென்றால் திடீரென ஏற்படக்கூடிய வேலை இழப்புகள் நிதி ரீதியாக நம்மை மிகப்பெரிய இக்கட்டான ஒரு சூழலில் தள்ளி விட வாய்ப்புள்ளது. தற்போது பலருக்கும் பணத்தை முதலீடு செய்தால் தான் அது நமக்கு பெருகும் என்ற விழிப்புணர்வு வந்துவிட்டது. அந்த வகையில் ஒரு நபர் மாதந்தோறும் 5000 ரூபாய் முதலீடு செய்தால் எத்தனை ஆண்டுகளில் அவர் ஒரு கோடி ரூபாய் என்ற நிதி தொகுப்பை எட்டுவார் என்பதை தற்போது பார்க்கலாம்.

ஒரு கோடி ரூபாய் என்ற நிதி தொகுப்பை எட்டுவது என்பது அத்தனை சாதாரண விஷயம் கிடையாது. அதற்கு நாம் ஒழுக்கமான முறையில் தொடர்ச்சியாக நம்முடைய முதலீட்டை மேற்கொள்ள வேண்டும். அப்படி பார்க்கும் போது தற்போது பெரும்பாலானவர்கள் மத்தியில் எஸ்ஐபி முறையில் மாதந்தோறும் ஒரு குறிப்பிட்ட தொகையை மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் முதலீடு செய்வது பிரபலமாக இருந்த வருகிறது.
ஒரு நபர் மாதந்தோறும் 5000 ரூபாயை எஸ்ஐபி முறையில் முதலீடு செய்கிறார், அவருக்கு ஆண்டுக்கு 12 சதவீத லாபம் வருகிறது என்றால் அவரது முதலீடு 1 கோடி ரூபாயாக வளர 26 ஆண்டுகள் தேவை. அதாவது 26 ஆண்டுகளுக்கும் ஒவ்வொரு மாதமும் 5000 ரூபாயை அவர் தொடர்ச்சியாக முதலீடு செய்தால் 1 கோடி ரூபாய் என்பது சாத்தியம்.
26 ஆண்டுகளில் அவர் செய்த முதலீட்டின் மதிப்பு 15.6 லட்சம் ரூபாய் அவருக்கு கிடைக்க கூடிய லாபம் 84.4 லட்சம் ரூபாய். அந்த வகையில் மாதந்தோறும் 5000 ரூபாயை தொடர்ச்சியாக 26 ஆண்டுகளுக்கு முதலீடு செய்யும் போது நமக்கு 1 கோடி ரூபாய் நிதி தொகுப்பு கிடைக்கும். இந்த 5000 ரூபாயை ஒரே நிதியில் போட்டு விடக்கூடாது என்கின்றனர் நிபுணர்கள்.
இதில் 3000 ரூபாயை இன்டெக்ஸ் ஃபண்டிலும், 2000 ரூபாயை ஃபிளெக்ஸி கேப் ஃபண்டுகளிலும் முதலீடு செய்யும் போது பங்குச்சந்தை ஏற்ற இறக்கத்திற்கு ஏற்ப நம்முடைய போர்ட்போலியோ பேலன்ஸ் ஆகிவிடும், ஆபத்துகள் குறையும் எனக் கூறுகின்றனர். மேலும் இந்த 5000 ரூபாய் முதலீட்டை ஸ்டெப் அப் முறையில் ஒவ்வொரு ஆண்டும் 10% என அதிகரித்து வரும்போது இந்த ஒரு கோடி ரூபாய் இலக்கை விரைவாகவே எட்டி விட முடியும் என கூறுகின்றனர்.
Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் "நாங்கள்" என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.
More From GoodReturns

அப்புறம் பாத்துக்கலாம்னு அசால்ட்டா இருக்காதீங்க! 5 வருஷம் லேட் பண்ணா ரூ3கோடி காலி.. SIP ரகசியம்?

ரூ.1 லட்சத்துக்கு கீழ் தங்கமே வாங்க முடியாதா? குறைந்த விலையில் தங்கம் வாங்க வழியே இல்லையா?

கிணற்றில் போட்ட கல்லு போல இருக்கும் வெள்ளி: இப்போது முதலீடு செய்தால் லாபம் கிடைக்குமா?

3 ஆண்டுகளில் 740% வளர்ச்சி அடைந்த மல்டிபேக்கர் பங்கு: இப்போது முதலீடு செய்யலாமா?

மீண்டும் இந்திய பங்குச்சந்தையை நோக்கி வரும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்!! இனியாவது சந்தை ஏறுமா?

LIC பங்குதாரர்களுக்கு ஜாக்பாட்!! ஒன்னு ரெண்டாக போகுது!! முதலீட்டாளர்கள் ஹேப்பி!!

ஒரு மாதத்தில் 70% வளர்ச்சி: Ola electric பங்கினை இப்போது வாங்கலாமா? திடீரென பங்கு மதிப்பு உயர்வது ஏன்?

ஐடி நிறுவன பெண் ஊழியர்களே எச்சரிக்கை!! டிசிஎஸ் நாசிக் அலுவலக சம்பவம் கற்று தரும் பாடம் இது தான்!!

பதவி நீக்கம் செய்யப்படுகிறாரா டிரம்ப்? ஈரான் போரால் டிரம்புக்கு ஏற்பட்டுள்ள புது பிரச்சினை!!

அட்சய திருதியை நாளில் தங்கம் விலை எப்படி இருக்கும்? நகை வாங்குவோர் கவனிக்க வேண்டியது என்ன?

TCS ஊழியர்களுக்கு ஜாக்பாட்! IT லே ஆப் மத்தியில் சம்பளம் எகிறப்போகுது..செம ஹாப்பி தான்!



Click it and Unblock the Notifications