ஒருமுறை மட்டும் முதலீடு செய்தால் போதும் வாழ்நாள் முழுக்க உங்களுக்கு ஓய்வூதியம் கிடைக்கும். இப்படி ஒரு அற்புதமான திட்டத்தை தான் எல்ஐசி நிறுவனம் செயல்படுத்தி வருகிறது. இதற்குப் பெயர் நியூ ஜீவன் சாந்தி திட்டம் (New Jeevan Shanti Plan).
தற்போது பெரும்பாலானவர்கள் மத்தியில் ஓய்வு காலத்திற்கான தொகையை இப்போது இருந்தே சேமித்து வைக்க வேண்டும் என்ற விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது. அந்த வகையில் நமது இந்திய சந்தையில் பல்வேறு ஓய்வூதியம் சார்ந்த திட்டங்களும் கிடைக்கின்றன.
ஏனெனில் ஓய்வு காலத்தின் போது நமக்கு வருமானம் இருக்காது ஆனால் செலவு அதிகமாக இருக்கும். எனவே அதற்கேற்ற வகையில் முறையாக திட்டமிட்டு இப்போது இருந்தே சரியான முதலீட்டை செய்வதுதான் ஓய்வு கால வாழ்க்கை சிறப்பாக அமைவதற்கு உதவி செய்யும். அப்படி ஒரு திட்டத்தை தான் எல்ஐசி நிறுவனம் செயல்படுத்தி வருகிறது.

நியூ ஜீவன் சாந்தி திட்டம் என்பது ஒருமுறை பிரிமியம் திட்டம் ஆகும். அதாவது இந்த திட்டத்தில் நீங்கள் ஒரு முறை மட்டும் முதலீடு செய்தால் போதும் உங்களின் வாழ்நாள் முழுக்க ஓய்வூதிய தொகை கிடைக்கும். உதாரணமாக 55 வயதான ஒரு நபர் 11 லட்சம் ரூபாயை இந்த திட்டத்தில் முதலீடு செய்கிறார் என வைத்துக் கொள்வோம். அவருக்கு 60 வயதாகும்போது ஆண்டுக்கு 1 லட்சம் ரூபாய் ஓய்வூதியமாக கிடைக்கும். இந்த பணத்தை ஆண்டுதோறும் அல்லது அரையாண்டு அல்லது மாதந்தோறும் என்ற அடிப்படையில் பெற்றுக் கொள்ள முடியும்.
இந்த திட்டத்தில் 30 முதல் 79 வயது வரை முதலீடு செய்யலாம். இதில் ஓய்வூதியம் பெற தகுதியுள்ள வயது 31 முதல் 80 ஆகும். குறைந்தபட்சம் 1,50,000 ரூபாயை முதலீடு செய்ய வேண்டும், அதிகபட்சம் எவ்வளவு வேண்டுமானாலும் முதலீடு செய்யலாம். தனிநபருக்கான ஒரு திட்டம் , தம்பதிகளுக்கான திட்டம் என இரண்டு முறையில் இது கிடைக்கிறது. இதில் உங்களுக்கான ஓய்வூதிய தொகை என்பது உத்தரவாதமாக கிடைக்கும்.
ஒருவேளை பாலிசிதாரர் உயிரிழக்கும் எதிர்பாராத வகையில் உயிரிழக்கும் பட்சத்தில் அவர் நாமினியாக நியமனம் செய்யப்பட்ட நபர் இந்த டெபாசிட் தொகையை முழுமையாகப் பெற்றுக் கொள்வார். உதாரணமாக ஒரு நபர் 11 லட்சம் ரூபாய் முதலீடு செய்து இருக்கிறார் எதிர்பாராத வகையில் அவர் இறந்து விடுகிறார் எனும் போது அவரது நாமினிக்கு 12 ,10,000 ரூபாய் கிடைக்கும்.
மேலும் இந்த பாலிசியை நாம் எப்போது வேண்டுமானாலும் சரண்டர் செய்து கொள்ளலாம். இதில் குறைந்தபட்ச தொகையான 1,50,000 ரூபாயை ஒருவர் தன்னுடைய 30 வயதில் முதலீடு செய்கிறார் என்றால் அடுத்த ஓராண்டுக்கு பின்னர் அவருக்கு ஆண்டுக்கு 7725 ரூபாய் ஓய்வூதியமாக கிடைக்கும். இதுவே 10 லட்சம் ரூபாய் முதலீடு செய்தால் ஆண்டுக்கு 53600 ரூபாய் கிடைக்கும்.
Story written by: Devika


Click it and Unblock the Notifications