ஆத்தி... 3 மாச EMI கட்டலன்னா இவ்வளவு பெரிய பக்க விளைவா..?

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கடந்த வெள்ளிக் கிழமை, மத்திய ரிசர்வ் வங்கி, 3 மாத இ எம் ஐ தவணைகளை ஒத்தி வைக்க, வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களுக்கு அனுமதி கொடுத்தது.

3 மாத EMI-ஐ தள்ளிப்போடுபவர்களின் கவனத்திற்கு...
 

இதனைத் தொடர்ந்து எஸ்பிஐ போன்ற பெரிய வங்கிகள், "தன்னிச்சையாக, தங்கள் வாடிக்கையாளர்களின் டேர்ம் லோன்களின் இ எம் ஐ ஒத்திவைக்கப்படும்" எனச் சொன்னது.

அதோடு தனித் தனியாக வங்கிகளுக்கு வந்து விண்ணப்பிக்க வேண்டாம் எனவும் சொன்னது. இந்த இ எம் ஐ ஒத்திவைப்பு மெய்யாலுமே நல்ல திட்டம் தானா..?

எந்த கடன்கள்

எந்த கடன்கள்

வீட்டுக் கடன், தனி நபர் கடன், வாகனக் கடன் போன்ற கடன்கள் இதில் அடங்குமாம், இந்த ரக கடன்களை வங்கிகள் மட்டும் இல்லாமல் வீட்டுக் கடன் நிறுவனங்களில் இருந்து வாங்கி இருந்தால் கூட அவைகளுக்கு ஆர் பி ஐ அனுமதித்து இருக்கும் 3 மாத இ எம் ஐ கெடு பொருந்துமாம். இந்த இ எம் ஐ ஒத்திவைப்பு குறித்த மெயில் & எஸ் எம் எஸ் வாடிக்கையாளர்களுக்குச் செல்லத் தொடங்கி இருக்கிறதாம்.

ஒத்திவைப்பு

ஒத்திவைப்பு

எஸ்பிஐ வங்கியைத் தொடர்ந்து, ஐ சி ஐ சி ஐ வங்கி, ஹெச் டி எஃப் சி , ஆக்ஸிஸ் வங்கி போன்றவர்களும், இந்த இ எம் ஐ ஒத்திவைப்புக்கு அனுமதிக்க இருப்பதாகச் செய்திகள் வெளியாகி இருக்கின்றன. இந்த இ எம் ஐ ஒத்திவைப்பை பயன்படுத்திக் கொண்டால் எவ்வளவு கூடுதலாகச் செலுத்த வேண்டி இருக்கும், பயன்படுத்திக் கொள்ளவில்லை என்றால் எவ்வளவு செலுத்த வேண்டி இருக்கும் போன்ற விவரங்களைக் கொடுக்க இருக்கிறார்களாம். இதற்காக வேலை நடந்து கொண்டு இருக்கிறதாம்.

வட்டி
 

வட்டி

மத்திய ரிசர்வ் வங்கி சொல்லி இருப்பது போல, இ எம் ஐ ஒத்திவைக்கலாம். ஆனால் அதற்கான வட்டியும் அதிகரிக்கத் தான் செய்யும் எனச் சொல்லி இருக்கிறார்கள் வங்கி தரப்பினர்கள். இந்த ஐ எம் ஐ ஒத்திவைப்பால், வாடிக்கையாளர்களுக்கு வட்டிச் சுமை கணிசமாக அதிகரிக்கலாம் எனச் சொல்கிறார்களே... எவ்வளவு அதிகரிக்கலாம்.

எப்படி அதிகரிக்கும்

எப்படி அதிகரிக்கும்

உதாரணத்துக்கு, ஒருவர் 8.5 % வட்டிக்கு, 19 ஆண்டுகளில் (228) திருப்பிச் செலுத்த வேண்டிய கடன் 50 லட்சம் ரூபாய் பாக்கி இருக்கிறது என வைத்துக் கொள்வோம். இப்போது அவர் மாதா மாதம் 44,272 ரூபாய் இ எம் ஐ ஆக செலுத்திக் கொண்டு இருப்பார். ஒரு வேளை இவர் 3 மாத இ எம் ஐ ஒத்திவைப்பை பயன்படுத்திக் கொள்கிறார் என வைத்துக் கொள்வோம். ஆக மாதம் 35,000 மேனிக்கு 3 மாதங்களுக்கு சுமாராக 1,05,000 ரூபாய் வட்டித் தொகை அசலுடன் சேர்ந்து வட்டிக்கு குட்டி போடும்.

கூடுதல் வட்டி

கூடுதல் வட்டி

அதாவது இனி 51.05 லட்சம் ரூபாய்க்கு வட்டி கட்ட வேண்டி இருக்கும். இந்த கூடுதல் சுமையைச் சமாளிக்க,

1. 44,272 ரூபாய் இ எம் ஐ தொகையையே செலுத்துவது என்றால் தவணையை 228 மாதத்தில் இருந்து 240 மாதங்களாக அதிகரிக்க வேண்டி இருக்கும். (அல்லது)

2. 45,202 ரூபாய் என இ எம் ஐ தொகையை அதிகரித்து அதே 228 மாதங்களுக்கு கடன் செலுத்த வேண்டி இருக்கும்.

யோசியுங்கள்

யோசியுங்கள்

உண்மையாகவே வாங்கிய கடனுக்கு இ எம் ஐ செலுத்த முடியும் என்றால் ஒழுங்காக இ எம் ஐ-யை செலுத்திவிடுவது நல்லது. சர்வ நிச்சயமாக கையில் காசு இல்லை, கையில் இருக்கும் காசை வைத்து தான் இந்த கொரோனா ஷட் டவுனுக்கு சாப்பாடு வாங்கிக் கொண்டு இருக்கிறீர்கள் என்றால் மட்டும் இ எம் ஐ தவணைகளை ஒத்தி வைப்பது குறித்து யோசிக்கலாம். தேவை இல்லாமல் கூடுதல் வட்டி செலுத்த வேண்டிய நிலைக்கு ஆளாகிவிடாதீர்கள் மக்களே..!

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

if you opt to defer EMI you will pay more for loan

If you opt to defer the EMI repayment for the next three months, then you may more while repaying the loan.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X