செப்டம்பர் 30 தான் கடைசி தேதி.. கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு பயனர்களுக்கு பெரும் நிம்மதி!

வாடிக்கையாளர்களின் பாதுகாப்பு மற்றும் தனியுரிமை காரணங்களுக்காக ரிசர்வ் வங்கி, செப்டம்பர் 30-க்குள் கார்டு டோக்கனைசேஷன் முறையை நடைமுறை படுத்த கடைசி தேதியாக அறிவித்துள்ளது.

கடைசியாக ஜூலை 1 முதல் அமலுக்கு வரலாம் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பயனர்களின் கோரிக்கைக்கு ஏற்ப இந்த டோக்கனைசேஷன் முறைக்கு கால அவகாசம் நீட்டிக்கப்பட்டது.

இந்த டோக்கனைசேஷன் முறையால் யாருக்கு என்ன பலன். இதில் கவனிக்க வேண்டிய விஷயங்கள் என்னென்ன?

வளர்ந்து வரும் தொழில்நுட்பம்

வளர்ந்து வரும் தொழில்நுட்பம்

தொழில் நுட்பம் என்பது வளர்ச்சி கண்டு வருவது ஒரு புறம் நல்ல விஷயங்கள் இருந்தாலும், சில விஷயங்களில் அது பிரச்சனையையும் ஏற்படுத்தி வருகின்றது. ஆக அதிலிருந்து பயனர்களை பாதுகக்க வங்கித் துறையில் ஏராளமான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக ஆன்லைன் மூலமாகவோ அல்லது யுபிஐ ஐடி, கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு மூலமாக ஷாப்பிங் செய்வது அதிகரித்துள்ள்ளது. இதன் மூலம் மோசடிகளும் அதிகரித்துள்ளன. குறிப்பாக தரவுகள் திருட்டு, வங்கி கணக்குகளை ஹேக் செய்தல், கார்டு குளோனிங், பிஷ்ஷிங் என பல சைபர் பிரச்சனைகள் எழுகின்றன.

விவரங்களை சேமிக்க கூடாது?

விவரங்களை சேமிக்க கூடாது?

அந்த வகையில் தரவு திருட்டு என்பது அடிக்கடி நாம் கேள்விப்படும் ஒரு பிரச்சனையாகவே இருந்து வருகின்றது. இதனை தடுக்கத் தான் இந்திய ரிசர்வ் வங்கி கார்டு டோக்கனைசேஷன் முறையை அமலுக்கு கொண்டு வரவுள்ளது.

ஒரு வாடிக்கையாளர்கள் ஷாப்பிங் செய்கிறார்கள் எனில், அவர்களின் விவரங்களையும், வங்கி சார்ந்த விவரங்களையும் ஷாப்பிங் தளங்கள் சேமிக்கின்றன. இது தவறாக பயன்படுத்தப்படவும் வாய்ப்பிருக்கிறது. ஆக இந்த தவறுகளை களையத் தான் ரிசர்வ் வங்கு, எந்தவொரு தளமும் வாடிக்கையாளர்களின் விவரங்களை சேகரிக்க கூடாது என உத்தரவிட்டுள்ளது.

அவகாசம் நீட்டிப்பு

அவகாசம் நீட்டிப்பு

அதுமட்டும் அல்ல கார்டின் கார்டு ஆன் ஃபைல் டோக்கனைசேஷன் செய்ய வணிகருக்கு ஒரு நிலையான அறிவுறுத்தலை வழங்கவும், அதன் மூலம் உருவாக்கப்பட்ட டோக்கனை பயன்படுத்தி பரிவர்த்தனையை செய்யவும் கூறியுள்ளது. இதற்கான காலக்கெடுவாக ஜூன் 30 கொடுக்கப்பட்டிருந்த நிலையில், தொழில் நுட்ப அமைப்பை மாற்ற போதுமான கால அவகாசம் தேவை என்று நிறுவனங்கள் கோரிக்கை விடுத்த நிலையில், செப்டம்பர் 30 வரை இந்த கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

டோக்கனைஷேசன் என்றால் என்ன?

டோக்கனைஷேசன் என்றால் என்ன?

கார்டு டோக்கனைஷேசன் என்பது கார்டு வழங்குபவர் மற்றும் கார்டு நெட்வொர்க்கினை தவிர, பரிவர்த்தனையில் ஈடுபடும் எந்தவொரு பங்குதாரரும் வாடிக்கையாளர்களின் விவரங்களை நேரடியாக அணுக முடியாது. இதனால் வாடிக்கையாளர்களின் தரவுகளையும் சேமிக்க முடியாது. மேலும் வாடிக்கையாளார்கள் தாங்கள் பயன்படுத்தும் தளங்களில் இருந்து டோக்கனை கோரும் போது, கார்டு வழங்குபவர்களின் ஒப்புதலுடன், கார்டு நெர்வொர்க் ஒரு டோக்கனை உருவாக்கும். இதனால் இது வாடிக்கையாளர்களின் தரவுகள் பாதுகாப்பால்க இருப்பதை உறுதிப்படுத்த முடியும்.

செப்டம்பர் 30க்குள்

செப்டம்பர் 30க்குள்

ஆக செப்டம்பர் 30க்குள் இந்த நடைமுறையை அமல்படுத்த வேண்டும். அதற்குள் ஷாப்பிங் தளங்கள் உள்ளிட்ட வணிக தரப்புகளிடம் உள்ள கிரெடிட் மற்றும் டெபிட் கார்டு எண்கள் நீக்கப்படும் என்றும், முன்பு போல கார்டு எண்களை நேரடியாக அணுக முடியாது என்றும் ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. நடைமுறையில், ஒவ்வொரு முறையும் வாடிக்கையாளர் கார்டைப் பயன்படுத்தி பரிவர்த்தனை செய்யும் போது, ​​கார்டு-டோக்கனைசேஷனுக்கான ஒப்புதல் வழங்கப்படாவிட்டால், கார்டு தரவை கைமுறையாக தட்டச்சு செய்ய வேண்டியிருக்கும்.

ஓடிபி கொடுக்க வேண்டும்

ஓடிபி கொடுக்க வேண்டும்

வாடிக்கையாளர்கள் தங்கள் அட்டைத் தரவை டோக்கனைஸ் செய்ய சந்தா செலுத்தியிருந்தால், ஒவ்வொரு பரிமாற்றத்திற்கும் அவர்கள் பரிவர்த்தனையை முடிக்க கார்டு டோக்கனைத் தொடர்ந்து சிவிவி மற்றும் ஒடிபி எண்ணை உள்ளிட வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மொத்தத்தில ரிசர்வ் வங்கியின் இந்த அறிவிப்பானது கார்டுதாரர்களின் பாதுகாப்புக்கு வழிவகுக்கும். இது ஆன்லைன் மோசடியாளர்களிடமிருந்து உங்கள் கார்டு தகவலை பாதுகாக்கும்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+