ரூ. 1 லட்சம் முதலீட்டை ரூ. 1 கோடியாக மாற்றிய ஃபண்டு.. சான்சே இல்ல.. செம லாபம்!

முதலீடு செய்வதை பொருத்தவரையில் 2 முக்கியமான விஷயங்களைக் கருத்தில் கொள்ள வேண்டும். ஒன்று சரியான திட்டத்தை தேர்ந்தெடுப்பது. மற்றொன்று நீண்ட காலத்துக்கு முதலீடு செய்வது. நீண்ட காலத்திற்கு முதலீடு செய்வதன் மூலம் அதிக வருமானத்தை பெற முடியும். அதன் அடிப்படையில் கடந்த 30 ஆண்டுகளில் அதிக வருமானம் வழங்கிய ஒரு மியூச்சுவல் ஃபண்ட் திட்டத்தை பற்றி இந்தப் பதிவில் பார்க்கலாம்.

HDFC ஃப்ளெக்ஸி கேப் ஃபண்ட் தனது 30 ஆண்டு காலத்தை நிறைவு செய்துள்ளது. 1995-ஆம் ஆண்டு ஜனவரி 1-ஆம் தேதி தொடங்கப்பட்டதிலிருந்து முதலீட்டாளர்களுக்கு அதிக வருமானத்தை உருவாக்க உதவியுள்ளது. இந்த ஃபண்ட் தொடங்கப்பட்டதிலிருந்து சுமார் 19.13 சதவீத வருடாந்திர வளர்ச்சியை வழங்கியுள்ளது. 2024-ஆம் ஆண்டின், நவம்பர் 29-ஆம் தேதி நிலவரப்படி, HDFC ஃப்ளெக்ஸி கேப் ஃபண்ட் தொடங்கப்பட்ட போது ரூ.1 லட்ச ரூபாயை முதலீடு செய்திருந்தால் அது தற்போது ரூ. 1.88 கோடியாக அதிகரித்திருக்கும்.

ரூ. 1 லட்சம் முதலீட்டை ரூ. 1 கோடியாக மாற்றிய ஃபண்டு.. சான்சே இல்ல.. செம லாபம்!

அதுவே இந்த திட்டம் தொடங்கப்பட்டதிலிருந்து மாதம் 10,000 ரூபாயை SIP முதலீடாக செய்து வந்திருந்தால், நவம்பர் 2024-ஆம் ஆண்டின், 29-ஆம் தேதி நிலவரப்படி அந்தத் தொகை ரூ.20.65 கோடியாக அதிகரித்திருக்கும்.

HDFC ஃப்ளெக்ஸி கேப் ஃபண்ட், HDFC மியூச்சுவல் ஃபண்டின் ஈக்விட்டி திட்டங்களில் ஒன்றாகும். கடந்த 30 ஆண்டுகளில் பல்வேறு சந்தை சுழற்சிகளை வெற்றிகரமாக தாண்டி முதலீட்டாளர்களுக்கு அதிக வருமானத்தை இந்த ஃப்ளெக்ஸி கேப் ஃபண்ட் வழங்கியுள்ளது. நீண்ட கால வளர்ச்சி திறன் கொண்ட தரமான நிறுவனங்களில் கவனம் செலுத்தி இன்று வரை சிறந்த செயல்திறனை வெளிப்படுத்தியுள்ளது. இதன் காரணமாகவே முதலீட்டாளர்களிடையே நம்பகமான தேர்வாக மாறியுள்ளது.

இந்த ஃபண்ட் 4 முக்கிய அம்சங்களை அடிப்படையாகக் கொண்டு செயல்படுகிறது. முதலில் ஒழுங்குமுறை அமைப்புகளின் கீழ் கட்டுப்பாடுகளுடன் செயல்படுவதை உறுதி செய்கிறது. ஹெச்டிஎஃப்சி ப்ளக்சி கேப் ஃபண்டின் ஆராய்ச்சி குழு நிறுவனங்களின் நிதிநிலை, செயல்பாடுகள், வளர்ச்சித் திறன் ஆகியவற்றை விரிவாக ஆய்வு செய்து அதன் பிறகு கவனமாக முதலீடு செய்கிறது.

எந்தெந்த நிறுவனங்களில் எவ்வளவு தொகை முதலீடு செய்யப்படுகிறது என்பதும் கவனமாக தீர்மானிக்கப்படுகிறது. அதோடு முதலீடுகள் பன்முகப்படுத்தப்படுகிறது. இதன் மூலம் அபாயங்களை குறைத்து நிலையான வருமானத்தை வழங்க முடியும்.

எந்த ஒரு ஃபண்டின் கடந்த கால பெர்ஃபார்மன்ஸ்-ஐ வைத்து இனிவரும் காலங்களிலும் அவை அதேபோல செயல்படும் என்று சொல்லிவிட முடியாது. மேலே குறிப்பிட்டுள்ள அனைத்து விவரங்களும் கடந்த 30 ஆண்டுகளில் திறம்பட செயல்பட்ட பண்டை விவரிப்பதற்காக மட்டுமே. இதன் மூலம் நாங்கள் உங்களை முதலீட்டு முடிவுகள் எடுக்கச் சொல்லவில்லை என்பதை நினைவில் கொள்ளுங்கள். எந்த ஒரு முதலீட்டு முடிவு எடுப்பதற்கு முன்பும் சந்தை நிலையை ஆராய்ந்து நிதி ஆலோசகரின் ஆலோசனை பெற்று சுய விருப்பத்தின் பெயரில் முதலீடு செய்யுங்கள்.

Disclaimer: This article is strictly for informational purposes only. It is not a solicitation to buy, sell in precious metal products, commodities, securities or other financial instruments. Greynium Information Technologies Pvt Ltd, its subsidiaries, associates and the author of this article do not accept culpability for losses and/or damages arising based on information in this article.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+