மத்திய நேரடி வரிகள் வாரியம் (CBDT) புதிய வருமான வரிச் சட்டம், 2025-ஐ அமல்படுத்துவதற்கான புதிய காலக்கெடுகளை அறிவித்துள்ளது. 1961-ஆம் ஆண்டு வருமான வரிச் சட்டம் 2026 ஏப்ரல் 1 முதல் நீக்கப்படுவதாகவும், புதிய சட்டத்தின் பிரிவு 397(3)(f) படி, TDS மற்றும் TCS திருத்த அறிக்கைகளை இரண்டு ஆண்டுகளுக்குள் தாக்கல் செய்யலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த மாற்றம் வரி செலுத்துவோர் புதிய சலுகையை வழங்கியுள்ளது.
புதிய சட்டத்தின் கீழ், TDS மற்றும் TCS அறிக்கைகளை தாக்கல் செய்ய வேண்டிய நிதியாண்டு முடிவடைந்த பிறகு இரண்டு ஆண்டுகளுக்குள் திருத்த அறிக்கைகளை சமர்ப்பிக்கலாம்.

எடுத்துக்காட்டாக, 2025-26 நிதியாண்டில் (மார்ச் 31, 2026-ல் முடிவடையும்) தாக்கல் செய்யப்பட்ட அறிக்கைக்கு, 2028 மார்ச் 31 வரை திருத்தம் செய்ய முடியும். இது முந்தைய 1961 சட்டத்தின் விதிகளை மாற்றி, செயல்முறையை எளிதாக்குகிறது.
1961-ஆம் ஆண்டு வருமான வரிச் சட்டம், 2026 ஏப்ரல் 1 முதல் முற்றிலும் நீக்கப்படுவதாக மத்திய நேரடி வரிகள் வாரியம் உறுதிப்படுத்தியுள்ளது. இந்த புதிய சட்டம், வரி நிர்வாகத்தை எளிமைப்படுத்துதல், டிஜிட்டல் மயமாக்கல் மற்றும் இணக்கத்தை மேம்படுத்துதல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டு பல சீர்திருத்தங்களை அறிமுகப்படுத்துகிறது. இந்த திருத்த காலக்கெடு மாற்றமும் நிர்வாக சுமையைக் குறைக்க உதவும் ஒரு முக்கிய படியாகும்.
TDS மற்றும் TCS அறிக்கைகளை தாக்கல் செய்யும் மக்கள் இந்த புதிய காலக்கெடுவை கவனத்தில் கொள்ள வேண்டும். சரியான நேரத்தில் திருத்தங்களைச் செய்வது, வரி கழிப்பு பெறுபவர்களுக்கு சரியான கிரெடிட் உறுதி செய்வதற்கும், மதிப்பீட்டின் போது அபராதங்களைத் தவிர்ப்பதற்கும் அவசியம்.
வருமான வரி வல்லுனர்கள், கடந்த நிதியாண்டுகளில் நிலுவையில் உள்ள அல்லது பிரச்சனையில் உள்ள TDS விவகாரங்களை மறு ஆய்வு செய்து, தேவையான திருத்தங்களை இரண்டு ஆண்டு காலக்கெடுவிற்குள் செய்யுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.


Click it and Unblock the Notifications