இந்தியாவில் பண பரிவர்த்தனைகள் மீது வருமான வரி விதிகள் கடுமையாக்கப்பட்டுள்ளன. இதனால் மக்கள் எதற்கெல்லாம் பண பரிவர்த்தனை மேற்கொள்ள வேண்டும், எவ்வளவு தொகையை அதிகப்படியாக செலுத்தலாம் என்பதில் பெரும் குழப்பத்தில் உள்ளனர்.
உதாரணமாக வருமான வரி துறையினரின் சோதனையின் போது உங்கள் வீட்டிலோ அல்லது அலுவலகத்திலோ விளக்கம் கொடுக்க முடியாத பணம் கண்டுபிடிக்கப்பட்டால் இந்த தொகைக்கு 84 சதவீத வரி, அபராதம், கூடுதல் கட்டணம், செஸ் சேர்த்து விதிக்கப்படலாம்.

முதலீட்டு வங்கியாளரான சர்தக் அஹுஜா இதைபற்றி முக்கியமான எச்சரிக்கையை தனது லின்கிடுஇன் பதிவு மூலம் விடுத்துள்ளார், இந்தியாவில் கருப்பு பணத்தைகட்டுப்படுத்தும் அரசின் முயற்சியின் ஒரு பகுதியாக இந்த கட்டுப்பாடுகள் விளங்குகிறது. ஆனால் வருமான வரி துறை உங்கள் மீது கவனத்தை திருப்புவதற்கான சிக்னலை நீங்கள் தான் கொடுக்குறீர்கள் என்பது உங்களுக்கு தெரியுமா..? இந்த சிக்னல் அடிப்படையில் தான் வருமான வரி துறை உங்களுக்கு நோட்டீஸ் அனுப்பவோ, அல்லது சோதனை செய்யவோ துவங்கும்.
சிக்னல் கொடுக்கும் பண பரிவர்த்தனைகள்:
- ஒரு நிதியாண்டில் நீங்கள் ரூ.10 லட்சத்துக்கு மேல் பணம் எடுத்தால் வங்கி வருமான வரி துறைக்கு தானாக அறிக்கை அனுப்புகிறது.
- ரூ.20 லட்சத்துக்கு மேல் எடுத்தால் வங்கிகள் தானாக டிடிஎஸ் பிடிக்கப்படும். இதன் வாயிலாகவும் வருமான வரித்துறை உங்கள் நிதி பரிமாற்றம் குறித்த தகவலை பெறும்.
- இதேபோல் தொடர்ச்சியாக பெரிய தொகை வங்கி கணக்கில் இருந்து எடுத்தால் வருமான வரி துறை சோதனை நடத்த வாய்ப்புள்ளது.
இத்தகைய சிக்னல்களை பயன்படுத்தி தான் வருமான வரித்துறை சோதனையை நடத்தும், இப்போது விளக்கம் அளிக்கமுடியாத பணம் கண்டுபிடிக்கப்பட்டால் 84 சதவீத வரி விதிக்கப்படும்.

100 சதவீத அபராதம்
சில பண பரிவர்த்தனைகளுக்கு 100 சதவீத அபராதம் உள்ளது. உதாரணமாக சில பரிவர்த்தனைகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளது.
- ஒரு நாளில் ஒரு வாடிக்கையாளரிடம் இருந்து ரூ.2 லட்சத்துக்கு மேல் தொகையை பணம் வாங்கினால் அபராதம்.
- எந்த தொகைக்கும் பணமாக கடன் வாங்கினால் அபராதம் விதிக்கப்படும். சொத்து விற்பனையில் ரூ.20,000க்கு மேல் பணமாக வாங்கினால் அபராதம்.
இந்த விதிகள் ஏற்கனவே அமலில் உள்ளன.

வருமான வரித்துறை கண்காணிப்பில் இருக்கும் முக்கிய பரிவர்த்தனைகள்:
ரூ.10 லட்சத்திற்கு மேல் சேமிப்பு கணக்கில் பண (Cash) டெபாசிட்
ரூ.2.5 லட்சத்திற்கு மேல் கரண்ட் கணக்கில் பண டெபாசிட்
ரூ.1 லட்சத்திற்கு மேல் கிரெடிட் கார்டு பில் பணத்தில் செலுத்துதல்
ரூ.2.10 லட்சத்திற்கு மேல் மொத்த கிரெடிட் கார்டு பில் செலுத்துதல்
ரூ.30 லட்சத்திற்கு மேல் அசையா சொத்து வாங்குதல் அல்லது விற்பனை
ரூ.2.10 லட்சத்திற்கு மேல் ஃபிக்ஸ்ட் டெபாசிட்டில் முதலீடு
ரூ.2.10 லட்சத்திற்கு மேல் வெளிநாட்டு பயணம் அல்லது ஃபாரெக்ஸ் வாங்குதல்
ரூ.10 லட்சத்திற்கு மேல் பங்குகள், பாண்டுகள் போன்றவற்றில் முதலீடு
ரூ.50000 மேல் ஆவணமில்லாத பண பரிசு
ரூ.2 லட்சத்திற்கு மேல்ஒரு நாளில் ஒரு நபரிடம் இருந்து பணம் பெறுதல்
சமீபத்தில் மத்திய அரசு கொண்டு வந்துள்ள டிஜிட்டல் மேம்பாடுகள் மூலம் வங்கிகள், பதிவு அலுவலகங்கள், வரி துறை இடையே தகவல் பகிர்வு அதிகரித்துள்ளது. இதனால் பெரிய பண பரிவர்த்தனைகள் எளிதாக கண்டுபிடிக்கப்படுகின்றன.
சாதாரண மக்கள், சிறு வியாபாரிகள் பண பரிவர்த்தனையை கவனமாக செய்ய வேண்டும். அனைத்து பரிவர்த்தனைகளுக்கும் ஆவணம் வைத்திருக்க வேண்டும். இல்லையெனில் பெரிய இழப்பு ஏற்படும். இதேபோல் புதிய வருமான வரி விதிகள் பண பரிவர்த்தனையை கடுமையாக்கியுள்ளன.
More From GoodReturns

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!



Click it and Unblock the Notifications