வருமான வரி தொடர்பான புகார்களை தெரிவிக்க வருமான வரித்துறை சார்பில் 3 மெயில் ஐடிக்கள் வெளியிடப்பட்டுள்ளன.
கடந்த 2019ம் ஆண்டு வருமான வரித்துறை சார்பில் முகமறியா வரி மதிப்பீடு திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.
இந்த திட்டத்தில் கணிணி மூலம் வருமான வரி கணக்கு தாக்கல் படிவங்கள் தன்னிச்சையாக ஆய்வு செய்யப்படும்.
குளறுபடிகள் குறித்து ஆய்வு
மேலும் அதில் கொடுக்கப்பட்டுள்ள தகவல்களில் குளறுபடிகள் இருந்தால், அது குறித்து ஆய்வு செய்ய ஏதாவது ஒரு நகரில் உள்ள வருமான வரி அதிகாரிக்கு அனுப்பப்படும். அந்த அதிகாரி ஆய்வு செய்து அளிக்கும் அறிக்கையானது, தன்னிச்சையாக வேறு ஒரு நகரைச் சேர்ந்த வருமான வரி உயர் அதிகாரிக்கு செல்லும்.
யார்? யார் என தெரியாது?
இதில் உள்ள நல்ல விஷயம் என்னவெனில், வருமான வரி தொடர்பான குறைகளுக்கு, வருமான வரி தாக்கல் செய்பவர் வட்டார வருமான வரி அதிகாரியை நேரில் சந்திக்க வேண்டிய அவசியமில்லை. இந்த திட்டத்தில் யாருடைய வருமான வரி கணக்கு தாக்கலை, யார் ஆய்வு செய்கின்றனர் என்பது தெரியாது.
ஊழலுக்கு முற்றுப்புள்ளி
ஆக இவர் தெரிந்தவர்? தெரியாதவர் என்ற பாகுபாடெல்லாம் கிடையாது? இதனால் வரியை குறைத்து மதிப்பீடு செய்வது உள்ளிட்ட ஊழல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும். இதற்கிடையில் தான் இந்த திட்டத்தில் வரி மதிப்பீடு தொடர்பான புகார்கள், அபராதம், மேல் முறையீடு ஆகியவற்றுக்கு மூன்று மெயில் ஐடி-க்களை வருமான வரித் துறை வெளியிட்டுள்ளது.
எந்த ஐடி எதற்கு?
அதன்படி வரி மதிப்பீடு குறித்தான புகாரை samadhan.faceless.assessment@incometax.gov.in என்ற மெயிலுக்கு அனுப்பலாம்.
இதே அபராதம் தொடர்பான புகாருக்கு samadhan.faceless.penalty@incometax.gov.in என்ற மெயிலுக்கு அனுப்பலாம்.
இதே மேல்முறையீட்டுக்கு samadhan.faceless.appeal@incometax.gov.in என்ற மின்னஞ்சல் முகவரிகளை தொடர்பு கொள்ளலாம் என வருமான வரித்துறை தெரிவித்துள்ளது.
ஊக்குவிக்கும்
வருமான வரித்துறை தொடர்ந்து தொழில் நுட்பங்களை புகுத்தி வரும் நிலையில், அதிலுள்ள பிரச்சனைகளை களையவும் பல அம்சங்களை அறிமுகப்படுத்தி வருகின்றது.
அதோடு வருமான வரி தாக்கல் செய்பவர்களின் நலன் கருதி, வருமான வரித்துறை எடுத்து வரும் இது போன்ற நடவடிக்கைகள், வரி தாக்கல் செய்வோரை மேலும் ஊக்குவிக்கலாம். பிரச்சனைகளை எளிதில் கையாளலாம்.
More From GoodReturns

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

அட்சய திருதியைக்கு தங்கம் வாங்குற பிளான் இருக்கா? இப்படி செஞ்சா குறைஞ்ச விலைக்கு தங்கம் கிடைக்கும்

பெட்ரோல் விலை லிட்டர் ரூ.119, டீசல் விலை லிட்டர் ரூ.192: உண்மையை போட்டுடைத்த அரசு..!!

90ஸ் கிட்ஸ்களின் Gmail பிரச்சினைக்கு தீர்வு தந்த சுந்தர் பிச்சை: பழைய ஐடி-க்கு குட்பை..!!



Click it and Unblock the Notifications