Post Office Savings Scheme: இந்திய பங்கு சந்தையில் தொடர்ந்து கடந்த சில தினங்களாகவே அதிகளவிலான ஏற்ற இறக்கம் என்பது இருந்து வருகின்றது. இது பங்கு சந்தை முதலீட்டாளர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது எனலாம்.
எனினும் இத்தகைய சிக்கலான காலகட்டங்களிலும் கூட லாபகரமான திட்டங்களில் அஞ்சலக திட்டங்களும் அடங்கும்.
கூடுதலாக இதில் வரிச்சலுகையும் அடங்கும். ஆக முதலீட்டாளர்களுக்கு, குறிப்பாக ஆரம்பகால முதலீட்டாளர்கள், ரிஸ்க் எடுக்க விரும்பாத முதலீட்டாளர்களுக்கு இது பாதுகாப்பான திட்டங்களாக உள்ளன.
வட்டி விகிதம் அதிகம்
அஞ்சலகத்தில் வழங்கப்படும் சில திட்டங்கள் மூத்த குடிமக்கள், குழந்தைகளுக்கும் ஏற்றதொரு திட்டங்களாக உள்ளன. குறிப்பாக வட்டி விகிதமும் அதிகம் எனலாம்.
அஞ்சலகத்தின் தொடர் வைப்பு நிதி, அஞ்சலகத்தின் டைம் டெபாசிட், அஞ்சலத்தின் தேசிய சேமிப்பு பத்திரம் என பல திட்டங்களும் உள்ளன. இதில் பிக்சட் டெபாசிட் திட்டம் தவிர மற்ற திட்டங்கள் லாக் இன் காலம் 5 வருட திட்டங்களாக உள்ளன.
தொடர் வைப்பு நிதி திட்டம்
மேற்கண்ட திட்டங்கள் சந்தை அபாயம் இல்லாத பாதுகாப்பான திட்டங்களாகவும் உள்ளன. நிலையான வருமானம் தரக்கூடிய திட்டங்களாகவும் உள்ளன. இதில் சில திட்டங்களில் வரி சலுகையும் உண்டு.
அஞ்சலகத்தின் தொடர் வைப்பு நிதி திட்டம் 5 ஆண்டு திட்டமாகும், இந்த திட்டத்தில் குறைந்தபட்சம் 100 ரூபாயில் இருந்து கூட டெபாசிட் செய்து கொள்ளலாம். இதற்கான வட்டி விகிதம் 5.8% ஆக உள்ளது. இதில் அதிகபட்ச முதலீட்டு வரம்பு என்பது தீர்மானிக்கப்படவில்லை.
தேசிய சேமிப்பு பத்திரம்
அஞ்சலத்தின் தேசிய சேமிப்பு பத்திரமும் 5 ஆண்டு லாக் இன் காலம் கொண்ட திட்டமாகும். இந்த திட்டத்தில் வட்டி விகிதம் என்பது 7% வரையில் கிடைக்கிறது. இதில் குறைந்தபட்சம் 1000 ரூபாயில் இருந்து முதலீடு செய்து கொள்ளலாம். இதில் அதிகபட்சம் என முதலீட்டு வரம்பு கிடையாது.
நீங்கள் உங்களது லாக் இன் காலம் முடிந்த பிறகு உங்களது தொகையினை எடுத்துக் கொள்ள முடியும். இதனை முன் கூட்டியே முடித்துக் கொள்ள ஆப்சன் உண்டு,. எனினும் இதற்கு சில நிபந்தனைகள் உண்டு. இதில் 80சி பிரிவின் கீழ் வரி சலுகையும் உண்டு.
டைம் டெபாசிட்
அஞ்சலத்தின் டைம் டெபாசிட் திட்டமானது 1, 2, 3 மற்றும் 5 ஆண்டு திட்டங்களாக உள்ளது. இதில் குறைந்தபட்சம் 1000 ரூபாயில் இருந்து முதலீடு செய்ய வேண்டியிருக்கும். அதிகபட்ச வரம்பு என்பது இல்லை. இதில் வட்டி விகிதம் 1,2, 3 ஆண்டுகளுக்கு 6.6% ஆகவும், 5 ஆண்டுகளுக்கு 7% ஆகவும் கிடைக்கிறது. ஆக வங்கி வைப்பு திட்டங்களோடு ஒப்பிடும்போது வருமானம் அதிகம். இதில் வரிச்சலுகையும் உண்டு.
நீண்டகால திட்டங்கள்
அஞ்சலகத்தின் இந்த திட்டங்களோடு பொது வருங்கால வைப்பு நிதி, சுகன்யா சம்ரிதி யோஜனா, கிசான் விகாஸ் பத்திரம், மூத்த குடி மக்கள் சேமிப்பு திட்டம் என பலவும் உள்ளன. இவை நீண்டகால திட்டங்களாகும். இவற்றில் பெரும்பாலான திட்டங்களில் வரி சலுகை கிடைக்கிறது, வட்டி விகிதமும் அதிகம். எனினும் இவை நீண்டகால திட்டங்களாக உள்ளன.


Click it and Unblock the Notifications