இந்தியாவில் கிரெடிட் கார்டுகள் பயன்பாடு நாள்தோறும் அதிகரித்து வருவது வருகிறது. முன்கூட்டியே நாம் பணத்தை எடுத்து செலவு செய்து கொண்டு பின்னர் அந்த பணத்தை திரும்ப கட்டிவிடலாம். அதுமட்டுமின்றி கிரெடிட் கார்டு பயன்படுத்துவோருக்கு கார்டு வழங்கக்கூடிய நிறுவனங்கள் பல்வேறு ரிவார்டு மற்றும் கேஸ் பேக் உள்ளிட்ட பல சலுகைகளை வழங்குகின்றன.
இதன் காரணமாக தற்போதுள்ள இளைஞர்கள் மத்தியில் கிரெடிட் கார்டு பயன்பாடு அதிகமாக இருக்கிறது. பலரும் பணத்தை ரொட்டேஷன் செய்வதற்காகவும் கிரெடிட் கார்டுகளை பயன்படுத்திக் கொள்கிறார்கள் . ஆனால் இந்த கிரெடிட் கார்டு பயன்பாட்டில் கவனமாக இல்லை என்றால் வருமான வரி நோட்டீஸ் வருவதற்கு கூட வாய்ப்புள்ளது என நிபுணர்கள் எச்சரிக்கை விடுக்கின்றனர்.

சென்னை சேர்ந்த ஒரு நபர் அண்மையில் 68.97 லட்சம் கோடி ரூபாய் கிரெடிட் கார்டு மூலம் செலவு செய்த காரணத்திற்காக வருமான வரி துறையின் நோட்டீசை பெற்று இருக்கிறார். அவர் கிரெடிட் கார்டை பயன்படுத்தி பணத்தை ரொட்டேஷன் செய்வதற்கும் , நண்பர்களின் செலவுகளுக்காகவும் கிரெடிட் கார்டை வழங்கியுள்ளார். அவரது வருமானத்தை விட கிரெடிட் கார்டு செலவு அதிகமாக இருந்துள்ளது.
இதனை விவரிக்கப்படாத செலவினம் என்ற பிரிவின் கீழ் வருமான வரித்துறை கருதி, நோட்டீஸ் அனுப்பி இருக்கிறது. எனவே கிரெடிட் கார்டு பயன்பாட்டில் கவனம் வேண்டும் என பலரும் எச்சரிக்கை விடுக்கின்றனர் . கிரெடிட் கார்டினை பணத்தை ரொட்டேஷன் செய்வது பயன்படுத்துவது, நண்பர்கள் பயன்படுத்த கொடுப்பது, ரிவார்டு பாயிண்ட்ஸ் கிடைக்கிறது என்பதற்காகவே பயன்படுத்துவது உள்ளிட்டவை எல்லாம் பின்னாளில் சிக்கலை ஏற்படுத்தும் என்கிறார்.
வருமான வரித்துறை கிரெடிட் கார்டு பயன்பாடுகளை மிக தீவிரமாக கண்காணிக்கிறது என பட்டய கணக்காளர் சுரானா தெரிவித்துள்ளார். அதாவது ஒரு நபர் தன்னுடைய வருமானம் இவ்வளவு தான் என வருமானவரித்துறையில் கணக்கு தாக்கல் செய்கிறார் ஆனால் அதைவிட அபரிவிதமாக அவருடைய கிரெடிட் கார்டு செலவினங்கள் இருக்கிறது என்றால் அது விவரிக்கப்படாத செலவினம் என்ற பிரிவில் வருமான வரி நோட்டீஸ் பெற வழிவகை செய்யும் என சுட்டிக்காட்டுகிறார்.
கிரெடிட் கார்டு பயன்பாட்டில் கவனம் தேவை எனக் கூறுகிறார். உதாரணமாக ஒரு நபர் தன்னுடைய நண்பர் வீட்டு வாடகை செலுத்துவதற்காக தன்னுடைய கிரெடிட் கார்டில் இருந்து பணத்தை வழங்குகிறார் , அந்த நண்பர் அவருடைய வங்கி கணக்கில் அந்த பணத்தை திரும்ப வழங்கி விடுகிறார். ஆனால் கிரெடிட் கார்டு வழங்கிய நிறுவனத்திற்கு இது தெரியாது அவர்கள் இதனை கிரெடிட் கார்டை பயன்படுத்தி மேற்கொண்ட செலவினமாக கருதி ரிவார்ட்ஸ் வழங்கி விடுவார்கள்.
ஒரு நபர் வருமானமே 6 லட்சம் தான் கணக்கு தாக்கல் செய்துள்ளார். ஆனால் கிரெடிட் கார்டில் அவர் செலவு செய்த பணம் 10 லட்சம் ரூபாய் என்றால் நிச்சயம் வருமானவரித்துறை அதிகாரிகள் உங்களைக் கேள்வி கேட்பார்கள் அது உங்களுக்கு சிக்கலை ஏற்படுத்தும் என பட்டய கணக்காளர்கள் கூறுகின்றனர் . மேலும் இவ்வாறு நீங்கள் நண்பர்களுக்கு பணம் கொடுத்து அதனை வங்கியின் மூலம் திரும்ப பெற்றுக் கொள்கிறேன் என்றால் அதற்கான ஆவணங்களையும் வங்கி ஸ்டேட்மெண்ட் உள்ளிட்டவற்றையும் தயாராக வைத்திருக்க வேண்டும் என்கின்றனர்.
மேலும் கிரெடிட் கார்டு பயன்பாட்டில் ரிவார்ட் பாய்ண்ட்கள் கிடைக்கின்றன அதனை நீங்கள் Monetary benefitஆக பயன்படுத்துகிறீர்கள் என்றால் அது ஓராண்டுக்கு 50 ஆயிரம் ரூபாய்க்கு மேல் செல்கிறது எனும் போது அது ஒரு Gift ஆக கருதப்படும், இதனை வருமான வரி கணக்கு தாக்கலில் income from other sources என்ற பிரிவில் குறிப்பிட வேண்டும் என கூறுகின்றனர்.
வங்கிகளும் , கிரெடிட் கார்டு நிறுவனங்களும் அதிக பட்ச பரிவர்த்தனைகள் குறித்து வருமான வரி துறைக்கு தகவல் தெரிவித்து வருகின்றன. எனவே வருமான வரி துறை கண்டுபிடித்தால் அபராதம் செலுத்த நேரிடும் என்பதால் உங்கள் வருமானத்துக்கு உட்பட்டு கிரெடிட் கார்டு செலவினங்களை கட்டுப்படுத்தி கொள்ள வேண்டும் அதனை மீறினால் உரிய ஆவணங்களுடன் தயார் நிலையில் இருக்க வேண்டும் என்கின்றனர்.
More From GoodReturns

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

கத்தார், பஹ்ரைன், UAE, குவைத்தில் குண்டு மழை.. ஈரான் வைத்த டார்கெட்.. அமெரிக்காவுக்கு நெருக்கடி..!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

அடுத்த பிரச்சனை.. கத்தார் LNG உற்பத்தி முழுமையாக நிறுத்தம்.. ஸ்தம்பிக்கப்போகும் உலக நாடுகள்..!!

சென்செக்ஸ் 6,000 புள்ளிகள் சரிவிலிருந்து மீண்டது.. இந்திய சந்தைக்கு ‘டபுள் ஷாக்’..!!

தூங்கிட்டிருந்த மிருகத்த தட்டி எழுப்பிட்டாங்க!! நாளை தங்கம், வெள்ளி சந்தை பத்தி எரிய போகுது!!

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!



Click it and Unblock the Notifications