வருமான வரி அறிக்கை தாக்கல்: இதை மட்டும் செய்திடாதீங்க..!

வருமான வரி அறிக்கை செலுத்தும் காலம் வந்தாச்சு, வருமான வரி தளத்தில் பல மாற்றங்கள் செய்யப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டு உள்ளது. பெரும்பாலான தனிநபர் வரி செலுத்துவோர் தங்கள் வருமான வரிக் கணக்கை (ITR) தாங்களாகவே தாக்கல் செய்கிறார்கள். இதனால் சில தவறுகள் வருவதும், நடப்பதும் சாத்தியம் தான்.

2022-23 நிதியாண்டுக்கான (AY 2023-24) வருமான வரிக் கணக்கைத் தாக்கல் செய்வதற்கான காலக்கெடு ஜூலை 31, 2023 வரையில் மட்டுமே , அதன் பின்பு தாக்கல் செய்ய வேண்டுமெனில் தாமத கட்டணத்துடன் தாக்கல் செய்ய வேண்டும்.

வருமான வரி என்பது ஒரு சிக்கலான சட்டமாக இருப்பதால், தாக்கல் செய்ய விரும்பம் இல்லாமல் கடைசி நாள் வரையில் ஒத்தி வைத்து பல்வேறு தவறுகளை செய்வது வழக்கமாகியுள்ளது. இந்த நிலையில்
ITR அறிக்கையை தாக்கல் செய்யும் போதும் பல்வேறு முக்கியமான விபரங்களை நிரப்பும்போது தனிநபர் வரி செலுத்துவோர் செய்யும் பொதுவான தவறுகளை பட்டியலிட்டப்பட்டு உள்ளது. இதை தெரிந்துக்கொண்டு நீங்கள் இந்த தவறை செய்யாதீர்கள்.

வருமான வரி அறிக்கை தாக்கல்: இதை மட்டும் செய்திடாதீங்க..!

ஐடிஆர் படிவம்: ஐடிஆர் தாக்கல் செய்யும் போது ஏற்படும் பொதுவான தவறுகளில் ஒன்று தவறான ஐடிஆர் படிவத்தைப் பயன்படுத்துவது. வருமான வரி அறிக்கையை தாக்கல் செய்வோர் தவறான படிவத்தைப் பயன்படுத்தி அரிக்கையை தாக்கல் செய்தால் வருமான வரித் துறையால் நிராகரிக்கப்படும். இதை ஒரு குறைபாடுள்ள ஐடிஆர் அறிக்கையாக பார்க்கப்படும்.

வட்டி வருமானம் : வருமான வரி அறிக்கையை தாக்கல் செய்யும் போது தவிர்க்க வேண்டிய மற்றொரு முக்கியமான தவறு, எல்லா ஆதாரங்களிலிருந்தும் வருமானத்தைப் வருமான வரித்துறைக்கு தெரிவிக்க தவறுவது. சம்பளம், வணிகம்/தொழில், வீட்டுச் சொத்து, மூலதன ஆதாயங்கள் மற்றும் முதலீடுகள் ஆகியவற்றின் வருமானத்தைச் கட்டாயம் வருமான வரி அறிக்கையில் தெரிவிக்க வேண்டும்.

வங்கிக் கணக்கை முன்கூட்டியே சரிபார்க்கத் தவறுவது: வருமான வரிக் கணக்கைத் தாக்கல் செய்யும் போது, ​​ஒருவர் அவருடைய வங்கிக் கணக்கை முன்கூட்டியே சரிபார்ப்பது இணைப்பது மிகவும் முக்கியமானது. குறிப்பாக வரி செலுத்துவோர் அதிக வரி செலுத்தி இருந்தால் வரி திரும்பப் பெறுவார்கள் கட்டாயம் சரிபார்த்து இணைக்க வேண்டும் அவ்வாறு செய்யாவிட்டால், வருமான வரித் துறையால் உங்களுக்கு செலுத்த வேண்டிய உபரி வருமான வரித் தொகையை டெபாசிட் செய்ய முடியாது.

தவறான மதிப்பீட்டு ஆண்டைத் தேர்ந்தெடுப்பது: வருமான வரி செலுத்துவோர் மதிப்பீட்டு ஆண்டு மற்றும் நிதி ஆண்டு என்ற இரண்டுக்கும் குழப்பிக்கொள்கின்றனர்.

நிதி ஆண்டு என்பது வருமானம் ஈட்டப்படும் காலத்தைக் குறிக்கிறது. எடுத்துக்காட்டாக, ஜூலை 31, 2023 அன்று அல்லது அதற்கு முன் உங்கள் ஐடிஆரைத் தாக்கல் செய்தால், நீங்கள் ஏப்ரல் 1, 2022 முதல் மார்ச் 31, 2023 வரை சம்பாதித்த வருமானத்திற்கான ஐடிஆர் ரிட்டன்களைத் தாக்கல் செய்தல். ஏப்ரல் முதல் மார்ச் வரையிலான இந்த காலகட்டத்தை 2022-23 அல்லது FY 2022-23 என அழைக்கப்படுகிறது.

இதேபோல் மதிப்பீட்டு ஆண்டு என்பது வருமான வரிக் கணக்கை தாக்கல் செய்யப்படும் நிதியாண்டிற்கு அடுத்த ஆண்டாகும். உதாரணமாக, ஜூன் அல்லது ஜூலை 2023 இல் உங்கள் வருமான வரி கணக்கைத் தாக்கல் செய்தால், மதிப்பீட்டு ஆண்டு 2023-24 ஆகும்.

ITR ஐ verify செய்ய மறந்துவிடுவது : உங்கள் வருமான வரிக் அறிக்கையை தாக்கல் செய்யப்பட்ட பின்பு ITR ஐ verify செய்ய வேண்டியது கட்டாயம், இதை மறந்துவிடுவது ஒரு பொதுவாக செய்யப்படும் தவறு. தற்போது, ​​பூர்த்தி செய்யப்பட்ட ஐடிஆர் படிவத்தைச் சமர்பித்த பிறகு, வரி செலுத்துவோர் தங்கள் ஐடிஆரைச் verify செய்ய 30 நாட்கள் கால அவகாசம் உள்ளது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+