இந்தியாவில் வருமான வரி தாக்கல் செய்ய வழக்கமாக ஜூலை 31 தான் கடைசி தேதியாக இருக்கும். கடைசி நேரத்தில், வருமான வரிப் படிவங்களைத் தாக்கல் செய்ய முடியாத அளவுக்கு எதிர்பாராத சிக்கல்கள் வந்தால், தேதியை சில வாரங்களுக்கு ஒத்தி வைப்பார்கள்.

ஆனால் இந்த 2020-ம் ஆண்டில் எல்லாமே தள்ளிப் போய்க் கொண்டு இருக்கிறது. 2018 - 19 நிதி ஆண்டுக்கு (கணக்கீட்டு ஆண்டு 2019 - 20) சமர்பிக்க வேண்டிய புதிய வருமான வரி படிவங்கள் (Fresh ITR) மற்றும் மறு கணக்கீட்டு வருமான வரிப் படிவங்களை (Revised ITR) சமர்பிக்க வேண்டிய கடைசி தேதியை 31 ஜூலை 2020 ஆக ஒத்தி வைத்து இருக்கிறார்கள்.
அதே போல 2019 - 20 நிதி ஆண்டுக்கு (கணக்கீட்டு ஆண்டு 2020 - 21), வருமான வரிப் படிவங்களைச் சமர்பிக்க வேண்டிய கடைசி தேதியை, 30 நவம்பர் 2020-ஆக ஒத்தி வைத்து இருக்கிறது மத்திய நேரடி வரிகள் வாரியம். டாக்ஸ் ஆடிட் அறிக்கைகளை சமர்பிக்க வேண்டிய தேதியையும் 31 அக்டோபர் 2020 வரை ஒத்தி வைத்து இருக்கிறார்கள்.
இதை எல்லாம் விட முக்கியமாக, பான் கார்டையும், ஆதார் கார்டையும் இணைக்க வேண்டிய கடைசி தேதியை 31 மார்ச் 2021 ஆக ஒத்தி வைத்து இருக்கிறார்கள். இந்த வாய்ப்பையாவது பயன்படுத்திக் கொண்டு மக்கள் பான் எண்ணையும், ஆதார் எண்ணையும் இணைத்துக் கொள்ள வேண்டும்.
சுயமாக கணக்கிட்டு வரி செலுத்த வேண்டியவர்கள் (self-assessment tax), குறிப்பாக 1 லட்சம் ரூபாய்க்குள் வரி செலுத்த வேண்டியவர்கள், 30 நவம்பர் 2020 வரை அரசுக்கு வரி செலுத்த, கால அவகாசம் கொடுத்து இருக்கிறது மத்திய நேரடி வரிகள் வாரியம்.
Recommended Video
அதே போல, வரிச் சலுகைகளைப் பெற, நாம் பல்வேறு முதலீடுகள் மற்றும் சேமிப்புகளைச் செய்கிறோம். இப்படி, 2019 - 20 நிதி ஆண்டு வருமானத்தில், முதலீடுகள் & சேமிப்புகளைச் செய்ய 31 ஜூலை 2020 வரை கால அவகாசம் கொடுத்து இருக்கிறார்கள்.


Click it and Unblock the Notifications