இந்தியாவில் கடன் வாங்கி சொந்தமாக வீடு வாங்கக்கூடிய நபர்கள் தான் அதிகம். இவ்வாறு வீட்டுக் கடன் வாங்கி இஎம்ஐ செலுத்தக்கூடிய பலருக்கும் இருக்கக்கூடிய ஒரு சந்தேகம் எனக்கு சம்பள உயர்வு கிடைக்கும் போது அந்த பணத்தை கொண்டு என்னுடைய மாதாந்திர இஎம்ஐ தொகையை அதிகப்படுத்துவதா அல்லது அந்த பணத்தை படிப்படியாக கொண்டு என்னுடைய கடனை முன்கூட்டியே அடைப்பதா என்பது தான்.
இந்த சந்தேகத்திற்கு ஆதித்யா பிர்லா ஹவுசிங் பைனான்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் பங்கஜ் காட்கில் பிசினஸ் டுடேவுக்கு அளித்துள்ள பேட்டியில் ஒரு விரிவான விளக்கத்தை அளித்திருக்கிறார் . உங்களுக்கு மிகப்பெரிய போனஸ் வந்திருக்கிறது அல்லது சம்பள உயர்வு கிடைத்திருக்கிறது எனும் போது நிச்சயமாக உங்களுடைய வீட்டுக் கடனை செலுத்தும் முறைகளை ஆய்வு செய்வது அவசியம் என அவர் அறிவுரை வழங்குகிறார் .

மாதாந்திர இஎம்ஐ தொகையை அதிகரிப்பதன் மூலம் உங்கள் கடனை திரும்ப செலுத்தும் காலம் குறைகிறது. அந்த கடனுக்கு நீங்கள் செலுத்தக்கூடிய வட்டி குறைகிறது என கூறுகிறார் .அதாவது மாதாந்திர இஎம்ஐ தொகை அதிகப்படுத்தும் போது நம்முடைய அசல் தொகை அதிக அளவில் வங்கிகளால் பிடித்தம் செய்யப்படும் என்பதை அவர் கூறுகிறார். இதன் மூலம் உங்களுடைய கிரெடிட் ஸ்கோர் அதிகரிக்கும் என தெரிவிக்கிறார்.
ஒவ்வொரு முறை உங்களுக்கு சம்பள உயர்வு வரும் போதும் இதுபோல உங்களுடைய இஎம்ஐ தொகையை அதற்கு ஏற்ற வகையில் நீங்கள் உயர்த்தும்போது வங்கி கடனுக்கான அசல் தொகையை முன்கூட்டியே செலுத்தும் ஒரு வாய்ப்பையும் தேவையில்லாமல் வட்டியை செலுத்துவதை குறைப்பதற்கும் வாய்ப்பாக இருக்கிறது என தெரிவிக்கிறார் .
இல்லை நான் இந்த பணத்தை சேர்த்து வைத்து ஃப்ரீ பேமெண்ட் முறையில் கடனை அடைக்கப் போகிறேன் என்பவர்களுக்கு அவர் கூறுவது பிரிபேமென்ட் மூலம் உங்களுடைய கடன் சுமை என்பது குறைகிறது என்கிறார். ஒரு போனஸ் தொகை வருகிறது அல்லது ஏதேனும் ரொக்கமாக உங்களுக்கு பணம் வருகிறது எனும் போது அதை கொண்டு ப்ரீபேமண்ட் செய்வது நல்லது. அவ்வாறு செய்யும்போது உங்களுடைய அவுட் ஸ்டாண்டிங் பிரின்ஸிபல் குறையும் இதனால் உங்களுடைய கடன் செலுத்தும் காலமும் வட்டியின் அளவும் குறையும் எனக் கூறுகிறார் .
ஆனால் இதனை செய்வதற்கு முன்னதாக உங்களிடம் அவசரகால நிதி ஏதேனும் இருக்கிறதா என்பதை கவனிக்க வேண்டும் என்கிறார் . அப்படி இல்லை என்றால் அதில் ஒரு கணிசமான தொகை அவசர கால நிதியாக வைத்துக் கொள்வது சிறந்தது என கூறுகிறார். மொத்தமாக பணத்தை இதில் செலுத்துவதன் மூலம் வேறு முதலீட்டு வாய்ப்புகளை நீங்கள் இழக்க நேரிடும் என்றும் அவர் கூறுகிறார்.
ப்ரீபேமெண்ட் அல்லது மாதாந்திர இஎம்ஐ தொகையை உயர்த்துவது ஆகிய இரண்டுமே வீட்டு கடனை திரும்ப செலுத்துவதில் வட்டியை குறைக்க உதவும். இரண்டிலுமே அதற்குரிய சாதக பாதங்கள் இருக்கின்றன ஆனால் உங்களுடைய தற்போதைய நிதி நிலைமைக்கு எது பொருத்தமாக இருக்கும் என்பதை சிந்தித்துப் பார்த்து கணக்கீடு செய்து முடிவெடுப்பது சரியாக இருக்கும் என கூறுகிறார்.
More From GoodReturns

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

தங்கம் விலை உச்சத்தில் இருந்து 17% வீழ்ச்சி! அமெரிக்கா கொடுத்த ஷாக் - இப்போ நகை வாங்கலாமா?

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

LPG தட்டுப்பாடு: காலை 5 மணி முதல் காத்திருந்தாலும் கேஸ் இல்லை!! பெங்களூருவில் மோசமாகும் சூழல்!!



Click it and Unblock the Notifications