இந்தியா ஒரே நாள் போராட்டத்தின் மூலம் பிரிட்டிஷ் ஆட்சியில் இருந்து சுதந்திரம் பெற்றுவிடவில்லை. இதற்காக நம் முன்னோர்கள் பல ஆண்டுகள் போராடினர். இந்த சுதந்திர போராட்டம் நமக்கு நாட்டு பற்று மட்டுமில்லாமல் நிதி சார்ந்த பல விஷயங்களையும் கற்றுத்தந்துள்ளது.
இந்த சுதந்திர தினத்தில் இந்தியாவின் சுதந்திர போராட்டத்தை மட்டும் கற்று கொடுக்காமல் அந்த போராட்டங்கள் நமக்கு கற்று கொடுக்கும் நிதி சார்ந்த பாடங்களை பிள்ளைகளுக்கு எடுத்துரைப்போம்.

சிறு துளி பெருவெள்ளம்: இந்தியாவிற்கு ஒரே நாளில் சுதந்திரம் கிடைத்துவிடவில்லை. இந்தியர்கள் இதற்காக பல ஆண்டுகள் போராடினர். சிறு துளி பெருவெள்ளம் என்பது போல சிறிய அளவில் தொடங்கப்பட்ட சுதந்திர போராட்டம் தான் படிப்படியாக வளர்ந்து பெரிய போராட்டமாக மாறியது. அப்படி தான் நம்முடைய நிதியும். சிறுக சிறுக நாம் செய்யும் முதலீடு தான் நாளை பெரிய சொத்தாக மாறும் என்பதை கற்றுக் கொடுங்கள். பொறுமை, தொலைநோக்கு பார்வை மற்றும் தொடர்ச்சியாக அதை கடைபிடிப்பது. இந்த மூன்றை பின்பற்றினாலே சேமிப்பும் முதலீடும் பெருகும்.
ஒழுக்கம்: நம் சுதந்திர போராட்டம் வெற்றி பெற்றதற்கு முக்கிய காரணம் ஒழுக்கம். சீரான முறையில் ஒழுக்கமான முறையில் போராட்டம் நாடு முழுவதும் நடந்ததே பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் மனதில் அச்சத்தை விதைத்தது. தொடர்ந்து சேமிப்பது, குறுகிய கால இன்பங்களை தவிர்த்து நீண்ட கால இலக்குடன் ஒழுக்கமாக இருப்பது நிதி சுதந்திரத்தை எட்ட எளிமையான வழி ஆகும்.

சிறிய பங்களிப்பும் முக்கியம்: இந்திய சுதந்திர போராட்டத்தில் அனைவருமே தங்களால் ஆன சிறிய பங்களிப்பை செய்தனர். அதனால் அது பெரிய விஷயமாக உருவெடுத்தது. எனவே சிறிய சேமிப்புகள் அல்லது முதலீடுகள் கூட காலப்போக்கில் நமக்கு செல்வத்தை உருவாக்கி தரும் என்பதை குழந்தைகளுக்கு கற்று கொடுத்தால் நல்ல மாற்றத்தை காண முடியும்.
சுயசார்பு: இந்திய சுதந்திர போராட்டமே சுயசார்பை தான் வலியுறுத்துகிறது. இது குழந்தைகளுக்கு நிதி சுதந்திரத்தின் முக்கியத்துவத்தை கற்றுத்தருகிறது. பணம் சம்பாதிப்பது அதனை பொறுப்புடன் நிர்வாகம் செய்வது ஆகியவற்றை இது கற்றுத்தருகிறது. இந்த ஒரு விஷயம் பின்னாளில் அவர்களை பெரிய தொழில்முனைவோராக மாற்றும் திறன் கொண்டது.

இலக்கு: பல ஆண்டுகளாக இந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிரான போர் நடந்தது. இதில் பங்கேற்ற அனைவரின் இலக்கும் ஒன்று தான். அது இந்திய சுதந்திரம். எனவே நிதி ரீதியாகவும் ஒரு இலக்கை நிர்ணயம் செய்து அதனை நோக்கி அடுத்தடுத்த நகர்வுகளை மேற்கொண்டால் நிச்சயம் வெற்றி கிடைக்கும்.
நடத்தை: பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் இந்தியாவில் வந்து இந்தியர்களின் வளங்களை பறித்து, உழைப்பை சுரண்டினர். இந்தியர்களை மிக மோசமாக நடத்தினர். இது தான் சுதந்திர போராட்டத்தின் தீப்பொறியாக அமைந்தது. எனவே ஒழுக்கம் , நன்னடத்தை ஆகியவற்றை இதில் இருந்து நாம் கற்று கொள்ளலாம். பணத்தை சம்பாதிப்பது, முதலீடு செய்வது என அனைத்திலும் நேர்மையும் நன்னடத்தையும் முக்கியம். இல்லையெனில் பின்னாளில் வாழ்க்கையை அழிந்து போகும் நிலைக்கு ஆளாகலாம் என்பதை குழந்தைகளுக்கு எடுத்துரைப்பது நல்லது.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

ஈரான் விவகாரத்தில் புதிய குண்டை தூக்கி போட்ட டிரம்ப்!! என்னென்ன சொல்றாரு பாருங்க!!



Click it and Unblock the Notifications