இந்தியாவில் மியூச்சுவல் ஃபண்டு திட்டங்களில் இன்டெக்ஸ் ஃபண்டுகள் எனப்படும் குறியீட்டு நிதிகளில் சில்லறை முதலீட்டாளர்கள் முதலீடு செய்யும் போக்கு அதிகரித்துள்ளது. பங்குச்சந்தைக்கு ஈடான வருமானத்தை எதிர்பார்ப்பவர்களுக்கு குறியீட்டு நிதிகள் (Index Funds) சிறந்த தேர்வாக அமைகின்றன.
இந்தியாவில் இன்டெக்ஸ் ஃபண்டுகள் வேகமாக வளர்ந்து வருவதாக Equirus Credence Family Office-ன் CIO சஞ்சல் அகர்வால் தெரிவிக்கிறார். இந்தியாவில் மியூச்சுவல் ஃபண்டுகளில் உள்ள மொத்த முதலீட்டின் மதிப்பு ஜூலை 2025 நிலவரப்படி 75 லட்சம் கோடி ரூபாயாக, ஆறு மடங்குக்கு மேல் அதிகரித்துள்ளது என கூறுகிறார்.

சில்லறை முதலீட்டாளர்கள் SIP மூலம் பெரும் தொகையை இன்டெக்ஸ் ஃபண்டுகளில் முதலீடு செய்கின்றனர். இன்டெக்ஸ் ஃபண்டுகள் என்பவை BSE சென்செக்ஸ் அல்லது நிஃப்டி 50 போன்ற குறிப்பிட்ட சந்தைக் குறியீட்டின் செயல்திறனைப் பிரதிபலிப்பதை நோக்கமாகக் கொண்ட முதலீட்டு திட்டங்கள் ஆகும். இது ஒட்டுமொத்த சந்தை செயல்திறனுக்கு ஏற்ப பன்முகப்படுத்தப்பட்ட முதலீட்டுக்கு வழிவகுத்து வருமானத்தைப் பெற உதவும்.
குறைந்த கட்டணம், வெளிப்படைத்தன்மை மற்றும் பன்முகத்தன்மை ஆகிய மூன்றும் தான் சில்லறை முதலீட்டாளர்களை இன்டெக்ஸ் ஃபண்டுகளை நோக்கி ஈர்க்கின்றன. ஒரு நிஃப்டி 50 குறியீட்டு நிதியை வாங்குவதன் மூலம், நீங்கள் அதிலுள்ள 50 பங்குகளையும், அதே அளவில், குறியீட்டைப் போலவே வைத்திருக்கிறீர்கள் என அர்த்தம். இதனை எந்த ஒரு மேலாளரும் மேலாண்மை செய்ய வேண்டிய தேவை இல்லை.நிஃப்டி 50இல் உள்ள பங்குகளின் மதிப்பு ஏறினால் இதுவும் ஏறும் இறங்கினால் இதுவும் இறங்கும்.
Tata Asset Management-ன் தலைமை வணிக அதிகாரி ஆனந்த் வரதராஜன் இன்டெக்ஸ் ஃபண்டுகள், அடிப்படைக் குறியீடுகளின் செயல்திறனை அப்படியே பிரதிபலிக்கின்றன என்பதால் நம் போர்ட்போலியோவுக்கு வலு சேர்ப்பதாக தெரிவிக்கிறார். குறிப்பிட்ட கால மதிப்பாய்வுகளில் புதிய பங்குகளைச் சேர்த்து, பொருந்தாதவற்றை இன்டெக்ஸுகள் நீக்குகின்றன. எனவே நாம் கவலையின்றி இருக்கலாம்.
1980களில் ஜவுளி நிறுவனங்களால் ஆதிக்கம் செலுத்தப்பட்ட சென்செக்ஸ் 30இல் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் இல்லை. ஆனால் இப்போது, தகவல் தொழில்நுட்பம் மற்றும் புதிய தலைமுறை நிறுவனங்கள் இதில் நிறைந்துள்ளன.என்ன பங்குகளைத் தேர்ந்தெடுப்பது என்று தெரியாதபோது, முழுமையான பங்குத் தொகுப்பை வாங்க இது ஒரு சிறந்த வழியாகும். இது லாபம் ஈட்டிய மற்றும் நஷ்டமடைந்த இருவகை பங்குகளையும் உள்ளடக்கியது.
இண்டெக்ஸ் ஃபண்டுகளில் பல நல்ல அம்சங்கள் இருந்தாலும், அதன் இயல்பான கட்டமைப்பின் காரணமாக, சந்தையை விஞ்சும் வருமானத்தை (market-beating returns) இவை வழங்குவதில்லை. எனவே சந்தைக்கு ஈடான வருமானத்தை விரும்புவோர், ஏற்ற இறக்கம் இருந்தபோதிலும் முதலீடு செய்து, காத்திருப்பவர்களுக்கு இண்டெக்ஸ் ஃபண்டுகள் சிறந்தவை.
சில்லறை முதலீட்டாளர்கள் நீண்ட கால மனநிலையையும், முதலீடு செய்வதற்கான ஒழுக்கத்தையும் கடைப்பிடிக்க வேண்டும் அப்போது தான் இதில் லாபம் காண முடியும் என கூறும் நிபுணர்கள், எனக்கு சந்தையை கண்காணிக்க நேரமில்லை குறிப்பிட்ட அளவு லாபம் வந்தாலே போதும் என்பவர்களுக்கு இண்டெக்ஸ் ஃபண்டுகள் பொருந்தும் அதே வேளையில் ரிஸ்க் எடுக்க தயார் என்பவர்கள் கட்டாயம் மற்ற திட்டங்களில் முதலீடு செய்து பார்க்கலாம் என கூறுகின்றனர்.
Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் "நாங்கள்" என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.


Click it and Unblock the Notifications