மத்திய அரசு தபால் அலுவலகங்கள் வாயிலாக சேமிப்பு திட்டங்கள் மட்டும் இல்லாமல் பல்வேறு காப்பீடு திட்டங்களையும் வழங்குகிறது. இந்த காப்பீடு திட்டங்கள் குறைந்த பிரீமியத்தில் அதிக காப்பீடு தொகையை வழங்குகின்றன. மத்திய அரசு இந்தியா போஸ்ட் பேமென்ட் வங்கி வாயிலாக வழங்கக்கூடிய விபத்து காப்பீடு தொடர்பான விவரங்களை நாம் இந்த கட்டுரையில் விரிவாக தெரிந்து கொள்ள போகிறோம்.
பொதுமக்கள் தங்களுக்கு அருகே இருக்கக்கூடிய தபால் அலுவலகங்களுக்கு சென்று இந்த விபத்து காப்பீட்டிற்கு விண்ணப்பம் செய்ய முடியும் . குறைந்த பிரிமியம் தொகையில் விபத்து காப்பீடு திட்டங்கள் தபால் நிலையம் மூலம் அறிமுகம் செய்யப்பட்டு பயன்பாட்டில் இருக்கின்றன. சாதாரண மக்களும் எளிதாக பெறக்கூடிய வகையில் இதன் கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டிருக்கிறது . தனியார் நிறுவனங்களுடன் கூட்டமைத்து இந்த காப்பீடு சேவைகளை தபால் அலுவலகங்கள் வழங்குகின்றன.

ஆண்டுக்கு 355 ரூபாய் முதல் 755 ரூபாய்க்குள் மட்டுமே பிரீமியம் கட்டணம் என்பது வசூல் செய்யப்படுகிறது. இதில் 5 லட்சம் ரூபாயில் இருந்து 15 லட்சம் ரூபாய் வரை காப்பீடுகள் கிடைக்கின்றன. காப்பீடு திட்டத்தில் சேர்பவர்களுக்கு வயது வரம்பு 18இல் இருந்து 65 ஆக அறிவிக்கப்பட்டிருக்கிறது. அருகிலுள்ள தபால் அலுவலகத்திற்கு சென்று நம்முடைய அடையாளம் மற்றும் முகவரி சான்றிதழை வழங்கி ப்ரீமியம் தொகையை செலுத்தினால் போதும் டிஜிட்டல் முறையில் 5 நிமிடங்களில் நம்முடைய விபத்து காப்பீடு பாலிசி போனுக்கு வந்துவிடும்.
ஏற்கனவே இந்தியா போஸ்ட் பேமென்ட் வங்கியில் சேமிப்பு கணக்கு வைத்திருப்பவர்கள் தங்களுடைய ஆன்லைன் பேங்கிங் வாயிலாகவே எளிதாக இந்த திட்டத்தில் சேர்ந்து கொள்ள முடியும் . டாடா ஏஐஜி, பஜாஜ் அலையன்ஸ் , ரிலையன்ஸ் ஜெனரல் இன்சூரன்ஸ், ராயல் சுந்தரம் இன்சூரன்ஸ் ஆகிய நிறுவனங்களோடு இணைந்து இந்த விபத்து காப்பீடு திட்டங்களை வழங்குகிறது .
5 லட்சம் ரூபாய் காப்பீடு தொகைக்கு 355 ரூபாய் பிரீமியம் தொகையாக வசூல் செய்யப்படுகிறது. அதேபோல 10 லட்சம் ரூபாய் காப்பீடு கொண்ட திட்டத்திற்கு 555 ரூபாய் வருடாந்திர பிரீமியமாக செலுத்தினால் போதும். 15 லட்சம் ரூபாய் கொண்ட விபத்து காப்பீடு திட்டத்தை பெற வருடாந்திர பிரீமியம் தொகையாக 755 ரூபாய் செலுத்த வேண்டி இருக்கும். விபத்து காரணமாக அந்த காப்பீடு செய்யப்பட்ட நபர் மரணமடைகிறார் எனும் போது அவருடைய குடும்பத்திற்கு இந்த காப்பீடு தொகை என்பது முழுமையாக வழங்கப்படும்.
ஒருவேளை விபத்தில் எலும்பு முறிவு உள்ளிட்டவை ஏற்படுகிறது என்றால் 25 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது. விபத்து காரணமாக குறிப்பிட்ட அந்த நபர் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறார் எனும் போது ஒரு நாளைக்கு ஆயிரம் ரூபாய் என 15 நாட்களுக்கு மருத்துவமனை செலவுக்கான பணமாக வழங்கப்படும். இந்த காப்பீடு திட்டத்தின் கீழ் சாலை விபத்து, மின்னல் தாக்கி இறப்பது, பாம்பு கடித்து இறப்பது மற்றும் தவறி விழுந்து இறப்பது உள்ளிட்டவைகளுக்கு காப்பீடு கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
More From GoodReturns

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

90ஸ் கிட்ஸ்களின் Gmail பிரச்சினைக்கு தீர்வு தந்த சுந்தர் பிச்சை: பழைய ஐடி-க்கு குட்பை..!!



Click it and Unblock the Notifications