எலி வளையானலும் தனி வளை என்பது போல, இன்றைய காலகட்டத்தில் பலருக்கும் இருக்கும் ஒரு முக்கிய கனவு தனி வீடு என்றே கூறலாம்.
இன்றைய காலகட்டத்தில் சாமனிய மக்கள் கையில் பணத்தை வைத்துக் கொண்டு வீடு கட்டும் நிலையில் இல்லை. எனினும் இந்த கனவு நிறைவேற பலருக்கும் ஆதாரமாய் இருப்பது வீட்டு கடன்கள் தான்.
ஏனெனில் தற்போது வங்கிகள் குறைந்த வட்டியில் வீட்டுக்கடனை வழங்கி வருகின்றன. இதில் பெண்களின் பேரில் வாங்குபவர்களுக்கு இன்னும் பல சலுகைகள் வழங்கப்படுகிறது.
இது தான் சரியான தருணம்
அதோடு கொரோனா காரணமாக ரியல் எஸ்டேட் துறையானது மிக மோசமான சரிவினைக் கண்டுள்ள நிலையில்,பற்பல பில்டர்களும் பல சலுகைகளை வாரி வழங்கி வருகின்றனர். இது இன்னும் வீடு வாங்குவோருக்கு நல்ல விஷயமாக பார்க்கப்படுகிறது. மொத்தத்தில் இது வீடு வாங்க அல்லது கட்ட சரியான தருணமாக பார்க்கப்படுகிறது.
பல ஆண்டுகளில் இல்லாத அளவு குறைந்த வட்டி
தற்போது நாட்டில் வீட்டுக் கடனுக்கான வட்டி விகிதங்கள் 15 ஆண்டுகளில் இல்லாத அளவு மிக குறைவாக வழங்கப்படுகின்றன. பல வங்கிகள் 7 சதவீதத்திற்கும் குறைவாக வழங்குகின்றன. அவ்வாறு மிகக் குறைந்த வட்டியினை வழங்கும் சில வங்கிகளின் பட்டியலை பார்க்க போகிறோம்.
எவ்வளவு வட்டி விகிதம்
பஞ்சாப் சிந்த் வங்கியில் வட்டி விகிதம் - 6.65 - 7.60%
பேங்க் ஆப் பரோடாவில் வட்டி விகிதம் - 6.75 - 8.25%
பஞ்சாப் நேஷனல் வங்கயில் வட்டி விகிதம் - 6.80 - 7.70%
சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியாவில் வட்டி விகிதம் - 6.85 - 7.30%
யூகோ வங்கியில் வட்டி விகிதம் - 6.90 - 7.25%
யூனியன் பேங்க் ஆப் இந்தியாவிள் வட்டி விகிதம் - 6.90 - 7.65%
ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவில் வட்டி விகிதம் - 6.95 - 7.65%
பேங்க் ஆப் மகாராஷ்டிராவில் வட்டி விகிதம் - 6.90 - 8.40%
கனரா வங்கியில் வட்டி விகிதம் - 6.90 - 8.90%
பேங்க் ஆப் இந்தியாவில் வட்டி விகிதம் - 6.85 - 8.35%
கவனிக்க வேண்டிய விஷயம்
மேற்கண்ட இந்த வட்டி விகிதமானது உங்களது கடன் மதிப்பெண் அடிப்படையில் தீர்மானிக்கப்படும். ஆக உங்களின் கிரெடிட் ஸ்கோரானது அதிகம் இருக்கும்பட்சத்தில், உங்களுக்கான வட்டி விகிதமும் குறைவாக இருக்கும். இது வாடிக்கையாளர்களுக்கு மிக பயனுள்ள ஒரு விஷயமாக பார்க்கப்படுகிறது.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!



Click it and Unblock the Notifications